Home » அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என ஹை கோர்ட் தீர்ப்பு வழங்கியதை அடுத்து காரியமங்கலத்தில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என ஹை கோர்ட் தீர்ப்பு வழங்கியதை அடுத்து காரியமங்கலத்தில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்

by Babukanth V
0 comment


அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என ஹை கோர்ட் தீர்ப்பு வழங்கியதை அடுத்து அதிமுகவினர் பட்டாசு வெடித்துபொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி உற்சாகம் தெரிவித்தனர். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என சென்னை ஹைகோர்ட் நேற்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து காரிமங்கலம் ராமசாமி கோவில், எம்ஜிஆர் சிலை அருகே ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் தலைமையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் காவேரி, கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குனர் ரவிசங்கர், நகர செயலாளர் காந்தி, அவைத் தலைவர் மகாலிங்கம் பஞ்சாயத்து தலைவர்கள் சாந்தி சம்பத், நந்தினி பிரியா செந்தில் குமார், ராதிகா காசிராஜன், கவிதா நாகராஜ் ஒன்றிய கவுன்சிலர்கள் காவேரி அம்மாள் மாணிக்கம், கணபதி, மாது, அண்ணா தொழிற்சங்க மண்டல தலைவர் சிவம், கூட்டுறவு சங்க தலைவர் சந்திரன், வழக்கறிஞர் பாரதி, நகர அவைத் தலைவர் உதயசங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

You may also like

Add Comment
error: Content is protected !!