Home » தருமபுரி மேற்கு மாவட்ட பாமக செயற்குழு கூட்டம் தருமபுரி எம்எல்ஏ எஸ்.பி.வெங்கடேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

தருமபுரி மேற்கு மாவட்ட பாமக செயற்குழு கூட்டம் தருமபுரி எம்எல்ஏ எஸ்.பி.வெங்கடேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

by Poovizhi R
0 comment

பாட்டாளி மக்கள் கட்சியின் தருமபுரி மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் தருமபுரியில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினரும், தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளருமான எஸ்.பி.வெங்கடேஷ்வரன் தலைமையில் தருமபுரி சட்டமன்ற அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பாட்டாளி மக்கள் கட்சி மாநில துணை தலைவர்கள் பி.சாந்தமூர்த்தி, பாடிசெல்வம், மாநில அமைப்பு செயலாளர் ப.சண்முகம், மாநில இளைஞர் சங்க செயலாளர் எம்.முருகசாமி, மாநில மகளிர் சங்க தலைவி நிர்மளாராசா, மாவட்ட தலைவர் மு.செல்வகுமார் ஆகியோர் இக்கூட்டத்திற்கு முன்னிலை வகித்தனர்.இந்த கூட்டத்தில், இ.மா.பாலகிருஷ்ணன் க.நம்பிராஜன், ஒ.கே.சுப்ரமணியம், த.காமராஜ், ரெ.மு.மனோகரன், சுதாகிருஷ்ணன், சி.வி.மாது, க.மாது, கே.இ.கிருஷ்ணன், ஆ.அன்பழகன், வாசுநாயுடு, மின்சாரம் சின்னசாமி, ப.சி.சிவக்குமார், கா.சித்துராஜ், தேவேந்திரன், பெருமாள், சங்கர், து.சத்தியமூத்தி, கமலேசன், ரவி, த.சக்தி, தகடூர்தமிழன், ஆர்.கே.சின்னசாமி, செந்தில், பாலச்சந்தர், சாந்தி, பெரியம்மாநாகு, தமிழ்செல்வி, எஸ்,ஏ.தங்கராஜி, எம்.ஆர்.சண்முகம், இரா.மாது, மே.தங்கராஜ், கு.சங்கர், வையாபுரி, சி.வெங்கடாசலம், இளையமுருகன், தீர்த்தமலை, சாமிகண்ணு, ஜெயக்குமார், ஈஸ்வரன், மாதப்பன், தமிழரசன், மகிமைநாதன், தாமரைசெல்வன், கலீம், ஸ்ரீதர், தக்காளி மணி மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் தலைவர்கள், செயலாளர் உள்ளிட்ட பலர்கலந்துக் கொண்டு சிறப்பித்தனர். இறுதியில், நகர செயலாளர் கி.வெங்கடேசன் நன்றி கூறினார். இந்த செயற்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன அவை,1. தமிழ்நாட்டில் தமிழைக் காக்க வேண்டும் என்பதற்காக தமிழைத்தேடி என்ற தலைப்பில் விழிப்புணர்வு பயணத்தையும், அதன் தொடர்ச்சியாக தமிழைக் காப்பதற்காக அரசுக்கும், வணிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் வலியுறுத்தி வரும் பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களுக்கு தருமபுரி மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறது.2. தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணையின் படி, தருமபுரி மாவட்டத்திலுள்ள அனைத்து வணிக நிறுவனங்களும் தமிழை முதன்மைப்படுத்தி பெயர்ப் பலகைகளை அமைக்க வேண்டுமென வணிகர்களை செயற்குழு கூட்டம் வலியுறுத்துகிறது.3. தருமபுரி மாவட்ட விவசாயிகளின் வாழ்வு செழிக்க காவிரி உபரிநீர்த் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசை இச்செயற்குழு வலியுறுத்துகிறது. 4. கடகத்தூர் ஏரி, சோகத்தூர் ஏரி, இராமக்கா ஏரி, பாலவாடி ஏரி, பாப்பாரப்பட்டி ஏரி ஆகிய ஏரிகளுக்கு பஞ்சப்பள்ளி அணை சின்னாற்றில் இருந்து தண்ணீர் வரும் நீர்வரத்துக் கால்வாயை 1000 கனஅடி அளவில் தண்ணீர் வரும் வகையில் அகலப்படுத்தி, தூர்வாரி, மேம்படுத்திட இச்செயற்குழு வலியுறுத்துகிறது.5. தருமபுரி மாவட்டத்தில் வேளாண் கல்லூரி அமைக்க தமிழக அரசை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

You may also like

Add Comment
error: Content is protected !!