Home » கிருஷ்ணகிரி அருகே உள்ள இட்டிக்கல் அகரம் கிராமத்தில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் கிளை சங்க துவக்கவிழாமற்றும் நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.

கிருஷ்ணகிரி அருகே உள்ள இட்டிக்கல் அகரம் கிராமத்தில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் கிளை சங்க துவக்கவிழாமற்றும் நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.

by Babukanth V
0 comment

கிருஷ்ணகிரி அருகே உள்ள இட்டிக்கல் அகரம் கிராமத்தில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் கிளை சங்க துவக்கவிழா
மற்றும் நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.
இக் கூட்டம் மாவட்ட இளைஞர் அணி துணை அமைைைபாளர் அனுமந்தராாசு
தலைமையில் நடைப்
பெற்றறது. இந்தக் கூட்டத்தின்போது
கிளைத்தலைவர் நடராஜ், கௌரவத் தலைவர் நாகராஜ், மாவட்ட செயலாளர் ராஜா, மாநில மகளிர் அணிசெயலாளர் திருமதி பெருமா, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வெங்கடேசன், சங்க ஆலோசகர் நசீர் அகமத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்..
இந்த
கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளாக தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் இராமகவுண்டர் கலந்துக்கொண்டு விவசாய கிளை சங்க கொடியினை ஏற்றிவைத்து கூட்டத்தின்போது நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்கள் குறித்து சிறப்புரை ஆற்றினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்த இராமகவுண்டர் மத்திய அரசுஎந்த ஒரு பொருள் எடுத்தாலும் அதற்கு ஐந்து முறை ஜிஎஸ்டி வரி வசூலிப்பது மிகவும் தவறான மோசமான செயல். மக்களுக்கு விரோதமாக இருப்பதால் மத்திய அரசை கலைத்துவிட்டு தேர்தல் மூலம் புதிய ஆட்சி அமைக்க வேண்டும் என குறிப்பிட்டார்.
மேலும் தமிழ்க அரசு தேர்தல் அறிக்கையின்படி விவசாயிகள் பயன்பெறும் வாணி ஓட்டு அணைத்திட்டத்தினை விரைவாக செயல்படுத்தப்பட
வேண்டும்,
தூர்வாரப்படாமல் உள்ள ஏரிகளை தூர்வாரி,ஏரி கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றப்பட வேண்டும். வறட்சியால் காய்ந்துப்போனே மாமரங்களுக்கு உரிய மானியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறுத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இந்தத் கூட்டத்தின்போது ஏராளமான விவசாய சங்கத்தை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்துக்
கொண்டனர்.

You may also like

Add Comment
error: Content is protected !!