கிருஷ்ணகிரி மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு சார்பாக மகளிர் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை சந்தைப்படுத்தவும், தொடர் சந்தை வாய்ப்புகளை உருவாக்கவும் மாவட்ட அளவில் கிருஷ்ணகிரி ராயப்பா முதலி தெருவில் உள்ள சாந்தி திருமண மண்டபத்தில் 20.03.2023 முதல் 25.03.2023 வரை கட்டாய கண்காட்சி (Mandatory Exhibition) நடைபெறுகிறது.
இக்கண்காட்சியில் மகளிர் சுய உதவிக் குழு உதவிக் குழு உறுப்பினர்கள் தயாரிக்கும் பொருட்களான மென் பொம்மைகள், டெரகோட்டா பொம்மைகள், மண்பாண்ட பொருட்கள், புளி, ஊறுகாய், பாக்கு மட்டை தட்டுகள், பாசிமணி, புடவைகள், காட்டன் சுடிதார்ஸ், அலங்கார மலர்மாலைகள், நவநாகரீக அணிகலன்கள், தின்பண்டங்கள், பனைவெல்லம், ஹேண்ட் பேக்குகள், கிப்ட் பொருட்கள், நர்சரி பூ செடிகள், கால் மிதியடிகள், சிறுதானிய உணவு பொருட்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் ஆகியவை விற்பனைக்கு வைக்கப்படுகிறது.
மேற்படி கண்காட்சி 20.03.2023 முதல் நடைபெற உள்ளது. பொதுமக்கள் அனைவரும் கண்காட்சியை பார்வையிட்டு பொருட்களை வாங்கி பயனடையலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தீபக் ஜேக்கப் இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.