கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில், ஜூன் 3-வது வாரத்தில் 29 -வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி விழா நடைபெறவுள்ளதையடுத்து, மா அரங்குகள், அரசுத்துறை அரங்குகள், பொழுதுபோக்கு அம்சங்கள், விழா அரங்கம் அமைக்கப்படவுள்ள இடம், மாங்கனி கண்காட்சிக்கு பொதுமக்கள் உள்ளே செல்லும் பாதை வெளியே செல்லும் போக்குவரத்து பாதைகள் அமையவுள்ள இடங்களை மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.ஆர்.ராஜேஸ்வரி அவர்கள் இன்று (18.05.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் வருவாய் கோட்டாட்சியர் திரு.பாபு, இணை இயக்குநர் (தோட்டக்கலைத்துறை) திரு.பூபதி, மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) திரு.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நேர்முக உதவியாளர் திரு.வெங்கடேசன், மற்றும் வருவாய்த்துறை, நகராட்சிதுறை அலுவலர்கள் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.
Babukanth V
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள் – மாவட்ட செயலாளர் தே.மதியழகன் எம்எல்ஏ அறிக்கை
கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்டத்தில் தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டங்கள் மே 7-ஆம் தேதி முதல் 3 நாள்கள் நடைபெறுகின்றன. இது குறித்து திமுக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டச் செயலாளா் தே.மதியழகன் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் ஆணைப்படி, தமிழக அரசின் 2 ஆண்டு கால சாதனைகளை விளக்கி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொதுக் கூட்டங்கள் மே 7 முதல் 9-ஆம் தேதி வரையில் 3 நாள்கள் நடைபெறுகின்றன. அதன்படி, ஊத்தங்கரை தெற்கு ஒன்றியம் கல்லாவி பேருந்து நிலையம் அருகே மே 7-ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் தே.மதியழகன் எம்எல்ஏ பேசுகிறாா். கிருஷ்ணகிரி மேற்கு ஒன்றியம் பெத்ததாளப்பள்ளி பாரத கோயில் அருகே மாலை 5.30 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் தலைமைக் கழகப் பேச்சாளா் குடியாத்தம் குமரனும், மத்தூா் வடக்கு ஒன்றியம், குன்னத்தூரில் மாலை 5.30 மணிக்கு தலைமைக் கழகப் பேச்சாளா் கருணாநிதியும், காவேரிப்பட்டணம் கிழக்கு ஒன்றியம் அகரம் பிரிவு சாலையில் மாலை 6 மணிககு தலைமைக் கழகப் பேச்சாளா் வயலூா் கிருஷ்ணமூா்த்தியும் பேசுகின்றனா். மே 8-ஆம் தேதி (திங்கள்கிழமை) காவேரிப்பட்டணம் மேற்கு ஒன்றியம் பையூா் பெரியாா் சிலை அருகில் மாலை 5.30 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் தே.மதியழகன் எம்எல்ஏவும், மத்தூா் தெற்கு ஒன்றியம் சாமல்பட்டியில் மாலை 5.30 மணிக்கு நடக்கும் கூட்டத்தில் தலைமைக் கழகப் பேச்சாளா் சூா்யா வெற்றி கொண்டானும், ஊத்தங்கரை மத்திய ஒன்றியம் மிட்டப்பள்ளியில் மாலை 5.30 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் தலைமைக் கழகப் பேச்சாளா் தமிழ் கொண்டானும் பேசுகின்றனா். மே 9-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) பா்கூா் தெற்கு ஒன்றியம் ஜெகதேவியில் மாலை 5.30 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் தமிழக துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி பேசுகிறாா். அன்றைய தினம் போச்சம்பள்ளி பேருந்து நிலையம் அருகே மாலை 5.30 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் கழக அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ். பாரதியும், கிருஷ்ணகிரி நகரில் வட்டச் சாலை அருகே நடைபெறும் கூட்டத்தில் தே. மதியழகன் எம்எல்ஏ, ஊத்தங்கரை வடக்கு ஒன்றியம் மகனூா் பட்டியில் நடக்கும் கூட்டத்தில் தலைமைக் கழகப் பேச்சாளா் சுபா சந்திரசேகரும், கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றியம் குருபரப்பள்ளி கூட்டத்தில் தலைமைக் கழகப் பேச்சாளா் பிரம்மபுரம் பழனியும், பா்கூா் வடக்கு ஒன்றியம் ஒப்பதவாடி கூட்டத்தில் தலைமைக் கழகப் பேச்சாளா் தா.பழூா் இளஞ்செழியனும் பேசுகின்றனா். இந்த பொதுக் கூட்டங்களுக்கு தொடா்பாக கட்சியின் பல்வேறு கட்ட நிா்வாகிகள் ஒருங்கிணைந்து சிறப்பாக நடத்திட வேண்டும். கூட்டங்கள் சிறப்பாக நடத்துவதற்கு ஏதுவாக அனைத்து முன்னேற்பாடுகளையும் ஒருங்கிணைக்க வேண்டும் என அதில் அவா் கேட்டுக் கொண்டுள்ளாா்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் அவர்களின் எளிமையை கண்டு வியந்த மக்கள்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் அவர்களின் எளிமை கண்டு வியந்த மக்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் ஒன்றியம் ஆவத்துவாடி கிராமத்தை சேர்ந்தவர் பெரியண்ணன் ஈஸ்வரி மற்றும் குமாரன் அலமேலு அவர்களின் இல்ல குடும்ப திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. கலெக்டர் அலுவலக முன்னாள் ஊழியர் இல்ல திருமணத்தில் கலந்து கொண்ட கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் மணமக்களான தமிழ்மொழி நவீன்குமார் ஆகியோரை வாழ்த்தினார். திருமண விழாவிற்கு வந்திருந்தத உறவினர்கள் பொதுமக்கள் மாவட்ட ஆட்சித் தலைவரின் எளிமையான செயல்பாடுகளால் வியந்து பாராட்டினர்
பாஜக தேசிய தலைவருடன் அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி தலைமையில் கே.பி.முனுசாமி உள்ளிட்டோருடன் டெல்லியில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை
அஇஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் நேற்று பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அமிஷா அவர்களை புதுடெல்லியில் நேரில் சந்தித்து வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை கூட்டணி மற்றும் தமிழகத்தில் நடைபெறும் திமுக அரசின் செயல்பாடுகளையும் பற்றி கலந்த ஆலோசித்தார்கள். கழக துணை பொதுச்செயலாளர் கே. பி.முனுசாமி அவர்களும் தமிழக பாரதிய ஜனதா கட்சியினுடைய தலைவர் கே.அண்ணாமலை அவர்களும் முன்னாள் அமைச்சர்கள் சி.வி. சண்முகம், வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்
நாகரசம்பட்டி அருகே தொட்டில் அம்மன் ஆலயத்தில் அமாவாசை முன்னிட்டு சிறப்பு பூஜை
கிருஷ்ணகிரி மாவட்டம்
போச்சம்பள்ளி வட்டம் நாகரசம்பட்டி அஞ்சல்
என்.தட்டக்கல் கிராமத்தில் சுமார் 1500் அடி உயர கம்பத்தமலையின் இடையில் அமைந்துள்ள அருள்மிகு தொட்டில் அம்மன் ஆலயத்தில் அமாவாசை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனைகள் நடைபெற்றது. அனைத்து பக்தர்களும் கலந்து கொண்டு தொட்டில் அம்மன் அருள் பெற்றனர். மாதா மாதம் அமாவாசை அன்று சிறப்பு பூஜை நடைபெறும். பக்தர்கள் அனைவரும் கலந்துகொண்டு அம்மன் அருள் பெற்றிட ஆலய நிர்வாகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
பர்கூர் சட்டமன்ற தொகுதியில் நீண்டநாட்களாக தீர்க்கபடாத பல முக்கிய கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன் எம்எல்ஏ சட்டபேரவையில் கோரிக்கை
பர்கூர் சட்டமன்ற தொகுதியில் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாத முக்கியமான கோரிக்கைகளை தங்களின் மேலான பார்வைக்கு கொண்டு வருகின்றேன்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள படேதலா பெரிய ஏரியிலிருந்து பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 2000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெரும் வகையில் வெண்ணம்பள்ளி,ஓரப்பம், காட்டகரம் ஏரி உட்பட 11 ஏரிகளுக்கு தண்ணீர் வழங்க வெட்டப்பட்ட கால்வாயினை மறுசீரமைப்பு செய்து ஆழமான பகுதிகளில் கட்டுமானம் மேற்கொண்டும்,மேலும் அச்சமங்கலம்ஏரியிலிருந்துபுதிதாக கால்வாய் வெட்டி குட்டூர் ஏரிக்கும், காகங்கரை ஏரிக்கும்தண்ணீர் கொண்டு செல்ல ஆவண செய்யுமாறு வேண்டி கேட்டுக் கொள்கின்றேன்.
10 ஆண்டுகளுக்கு முன்பே போச்சம்பள்ளிக்கு வட்டார வளர்ச்சி அலுவலகம் (BDO) அறிவிக்கப்பட்டது, இது நாள்வரை இத்திட்டம் நிலுவையிலே உள்ளது. அதற்கான அலுவலகத்தை கட்டி உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர மாண்புமிகு முதல்வர் அவர்கள் ஆவண செய்ய வேண்டுகிறேன்.
பர்கூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராஜ கால்வாயின் ஆக்கிரமிப்புகளை அகற்றி மழை நீர் வடிகால் அமைத்து தர ஆவண செய்யுமாறு வேண்டி கேட்டுக் கொள்கின்றேன்.
காவேரிப்பட்டிணம் ஒன்றியத்துக்குட்பட்ட சந்தனூர் ஏரியிலிருந்து உபரிநீரை கொட்டாவூர், பாப்பாரப்பட்டி, சின்ன புளியம்பட்டி வையம்பட்டி,இருமத்தூர்,காராமூர் மற்றும் சாமாண்டப்பட்டி ஆகிய ஏரிகளுக்கு தண்ணீர் வழங்க ஆவண செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாழும் இருளர் மற்றும் ஆதிதிராவிடர் மக்கள் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் குடியிருக்கும் வீடுகள் மிகவும் பழமையானதாகவும், எந்த நேரத்திலும் இடிந்து விழும் சூழ்நிலையில் உள்ளதாலும் இவர்களுக்கு புதிய வீடுகளை கட்டித் தந்து அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.
தமிழக அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கையில் கிருஷ்ணகிரி மாவட்டம் அரசம்பட்டி தென்னைக்கும் மற்றும் கிருஷ்ணகிரி பன்னீர் ரோஜாவுக்கும் புவிசார் குறியீடு பெற்று தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதற்காக கிருஷ்ணகிரி விவசாயிகளின் சார்பாக மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்
மாங்கனி மாவட்டமான கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான மாமரங்களில் தற்போது த்ரிப்ஸ் (சிறு பூச்சிகள் ) பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் மாங்காய் விளைச்சல் குறைந்தது மட்டுமல்லாமல் தரமும் குறைந்து காணப்படுகிறது.
ஆதலால் “மா” மற்றும் “தென்னைக்கு” சிறந்த வேளாண் விஞ்ஞானிகளை வைத்து சிறப்பு ஆராய்ச்சி மையம் அமைத்து விவசாயிகளுக்கு தேவையான பூச்சிக்கொல்லிகள், சாகுபடி மற்றும் அறுவடை பற்றிய விழிப்புணர்வை வழங்கவும், “மா” செடிக்கு காப்பீடு தொகை வழங்க ஆவணச் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.
சட்டத்திற்கு புறம்பாகவும் பொதுமக்களளின் நலனுக்கு எதிராகவும் இருக்கும் கிருஷ்ணகிரி சுங்கசாவடியை உடனடியாக அகற்றிட மக்களின் காவல் தெய்வம் மாண்புமிகு முதல்வர் தளபதியார் அவர்கள் ஆவண செய்யவேண்டும்என வேண்டி கேட்டுக்கொள்கின்றேன்.
தினந்தோறும் பொதுமக்கள்சென்று வரக்கூடிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல்துறை அலுவலகம், மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை, வட்டார போக்குவரத்து அலுவலகம், வேளாண்மை அலுவலகம், சுகாதார அலுவலகம் மற்றும் பல்வேறு மாவட்ட அரசு அலுவலகங்கள் ஆகியவற்றிற்கு சென்று வருவதற்கு பெரும் இடையூறாகவும், ஒவ்வொரு முறையும் ரூபாய் 100க்கும் மேலாக செலவிட வேண்டியுள்ளது. குறிப்பாக பழைய மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு 2800க்கும் மேற்பட்ட நோயாளிகள் தினந்தோறும் வந்து பயன்பெற்ற நிலையில் தற்பொழுது இந்த சுங்க சாவடியைதாண்டியே புதிய மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு செல்ல வேண்டியுள்ளதால் பாதிக்கும் குறைவாக 1500 க்கும் குறைவான நோயாளிகளே வந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது கிருஷ்ணகிரி நகர மக்களின் அடிப்படை சேவையையே முடக்கும் வகையில் அமைந்துள்ளது. சட்டத்திற்கு புறம்பாகவும் பொதுமக்களளின் நலனுக்கு எதிராகவும் இருக்கும் இந்த சுங்க சாவடியை அகற்றிட பலமுறை முயன்றும் தேசிய நெடுஞ்சாலை துறை கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறது. ஆகையால் மக்களின் காவல் தெய்வம் மாண்புமிகு முதல்வர் தளபதியார் அவர்கள் இந்த சுங்கசாவடியை உடனடியாக அகற்றிட ஆவண செய்யவேண்டும் என மிகவும் வேண்டி கேட்டுக்கொள்கின்றேன்.
ஒசூர் மாநகராட்சி 22வது வார்டில் மாநகர மேயர் எஸ்.ஏ.சத்யா அவர்கள் அதிகாரிகளுடன் திடீர் ஆய்வு மேற்க்கொண்டு, பொதுமக்களின் குறைகளை மனுக்களாக பெற்றுக்கொண்டார்
ஒசூர் மாநகராட்சி 22வது வார்டிற்குட்பட்ட அன்னைநகர் உள்ளிட்ட பகுதிகளில் மாநகர மேயர் அதிகாரிகளுடன் திடீர் ஆய்வு மேற்க்கொண்டு, பொதுமக்களின் குறைகளை மனுக்களாக பெற்றுக்கொண்டார்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி 22வது வார்டிற்குட்பட்ட அன்னை நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஓசூர் மாநகர மேயர் S.A.சத்யா அவர்கள், மாநகர ஆணையாளர் சிநேகா உள்ளிட்டோருடன் திடீர் ஆய்வு மேற்க்கொண்டார்
சாலை வசதி, குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்ததுடன் பொதுமக்களின் குறைகளை கோரிக்கை மனுக்களாக பெற்றுக்கொண்டார்
அப்போது 22வது மாமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் மற்றும் குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்
கிருஷ்ணகிரி நகர் பகுதியில்திமுக உறுப்பினர் சேர்க்கை தீவிரம்!நகர செயலாளர் எஸ்.கே.நவாப் அவர்களுக்கு முன்னாள் அமைச்சர் பாராட்டு
கிருஷ்ணகிரி நகராட்சியில்
திமுக உறுப்பினர் சேர்க்கை தீவிரம்
நகர செயலாளருக்கு முன்னாள் அமைச்சர் பாராட்டு
கருணாநிதியின் 100வது ஆண்டு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, ஒரு கோடி உறுப்பினர்களை தி.மு.க.,வில் இணைக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் எம்.எல்.ஏ.,வுமான மதியழகனின் வழிகாட்டுதல் படி, கிருஷ்ணகிரி நகரத்திற்கு 10,200 உறுப்பினர்களை சேர்க்க வேண்டுமென ஆலோசனை வழங்கினார். மேலும் பூத் கமிட்டி நுாறு ஓட்டுக்கு ஒரு ஆள், கட்சி உறுப்பினர் படிவம் சேர்த்தல், இப்பணிகள் சிறப்பாக நடைபெற, கிருஷ்ணகிரி தொகுதிக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சரும், கொள்கை பரப்புத் துணைச் செயலாளர் மருத்துவர் விஜய் மற்றும் கிருஷ்ணகிரி நகர செயலாளர் நவாப், மாநில தலைமை செயற்குழு உறுப்பினரும், நகர் மன்ற தலைவருமான பரிதாநவாப், கிருஷ்ணகிரி தொகுதி பொறுப்பாளர் கோவிந்தசாமி, கிருஷ்ணகிரி பொறுப்பாளர் சித்ரா சந்திரசேகர் ஆகியோர் மேற்கொண்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி நகரத்தில் ஒதுக்கப்பட்ட 10 ஆயிரத்து 200 உறுப்பினர் சேர்க்கையில் இதுவரை, 5,450 பேர் உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் 15 பேர் கொண்ட பூத்து கமிட்டி முழுமையாக முடிக்கப்பட்டுள்ளது. நுாறு ஓட்டுக்கு ஒரு ஆள் கணக்கும் தரப்பட்டுள்ளது. தொடர்ந்து கிருஷ்ணகிரி நகரத்தில் பல்வேறு இடங்களில் இக்குழுவினர் ஆய்வுகளை மேற்கொண்டனர்.
உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு மருதம் நெல்லி ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வரலாற்றுத் துறை மாணவர்கள் தொல்லியல் அகழாய்வை பார்வையிட்டனர் .
உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு மருதம் நெல்லியின் ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வரலாற்றுத் துறை மாணவர்களின் சார்பில் பென்னாகரம் அருகே பூதிநத்தம் என்னும் ஊரில் நடைபெறும் தொல்லியல் அகழாய்வை பார்வையிட்டனர் . பின்னர் தொல்லியல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வையும், தொல்லியல் அகழாய்வு செய்யும் முறை பற்றியும் , பாரம்பரியத்தின் முக்கியத்துவத்தை பற்றியும்,மாணவர்களுக்கு தொல்லியல் அகழாய்வு திட்ட இயக்குனர் முனைவர். எஸ்.பரந்தாமன்(அரசு தொல்லியல் அலுவலர்) உரை நிகழ்த்தினார். நிகழ்விற்கு மருதம் நெல்லி கல்விக் குழுமத்தின் தாளாளர் டாக்டர் கா.கோவிந்த் , முதல்வர் சி.பரஞ்சோதி , வரலாற்றுத் துறை த்தலைவர் மா.சந்திரன் பேராசிரியர் கோ.திருவாசகம், மா.வெங்கடேசன், மாணவ மாணவிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.