கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் வருகின்ற வெள்ளிக்கிழமை ( 31-03-2023) மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. ஓசூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 31-03-2023 அன்று காலை 9.30 மணி முதல் மதியம் 3.00 மணிவரை முகாம் நடைபெற உள்ளது. 200 க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளனர். 5-ம் வகுப்பு முதல், பட்டம் படித்தவர்கள் 18 வயதுக்கு மேற்பட்ட ஆண் பெண் இருபாலரும் கலந்துகொள்ளலாம். முகாமில் பங்கேற்க வருபவர்கள் கல்வி சான்றிதழ் நகல்கள், சுய விபரம், ஆதார் அட்டை மற்றும் புகைப்படம் கொண்டுவரவேண்டும். வேலை வாய்ப்பு அற்ற கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞர் இளைஞிகள் இவ்வாய்ப்புகளை பயன்படுத்தி பயனடையுமாறு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்
Babukanth V
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சி துப்புரவு பணியாளர்களின் பிள்ளைகள் ஹாக்கி போட்டியில் தென்னிந்திய அளவில் சாதனை.
பாலக்கோடு பேரூராட்சி துப்புரவு பணியாளர்களின் பிள்ளைகள் ஹாக்கி போட்டியில் தென்னிந்திய அளவில் சாதனை.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சியில் துப்புரவு பணியாளர்கள் முருகன் மற்றும் மங்கா, ஆகியோரின் பிள்ளைகள் சீனிவாசன் (18) கனிமொழி (17) ஆகியோர்’ கடந்த 20ம் தேதி முதல் 26ம் தேதி வரை இராமநாதபுரத்தில் நடைப்பெற்ற தென்னிந்திய அளவிலான ஜூனியர் ஹாக்கி போட்டியில் தமிழகஅணி வெற்றி பெற்று முதலிடம் பிடித்தது,
இதில் ஆடவர் அணியில் சீனிவாசன் கேப்டனாக சிறப்பாக விளையாடி தமிழக அணிக்கு தங்கப் பதக்கம் பெற்று தந்தார்.
அதே போன்று மகளிர் பிரிவில் கனிமொழி அணி வெள்ளி பதக்கம் பெற்றது.
இவர்களை பாராட்டும் விதமாக பாலக்கோடு பேரூராட்சி சார்பாக பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் பி.கே.முரளி சீனிவாசன், கனிமொழி மற்றும் இவர்களின் பெற்றோர்களுக்கு நினைவு பரிசு மற்றும் கேடயம் வழங்கி பாராட்டி கெளரவித்தார்.
இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் திருமதி.டார்த்தி, துப்புரவு மேற்பார்வையாளர் ரவீந்திரன், உடற்கல்வி ஆசிரியர் ரங்கநாதன், பேரூராட்சி துணைத் தலைவர் தாஹசீனா இதயத்துல்லா, கவுன்சிலர்கள் சரவணன், பெரியசாமி, ரூஹித், பத்தேகான், சாதிக் மற்றும் துப்புரவு பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டு பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
இன்று உயர் நீதிமன்ற தீர்ப்பை அடுத்து அஇஅதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி கே.பழனிச்சாமி. துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்
இன்று பொதுக்குழுவை பற்றி வெற்றி தீர்ப்பு வந்த பின்பு எடப்பாடி கே.பழனிச்சாமி அஇஅதிமுக பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டதையடுத்து துணை பொதுச்செயலாளர் கேபி முனுசாமி எம்எல்ஏ பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைமை கழகத்தில் நேற்று விழாக்கோலம் பூண்டிருந்தது
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் அவர்களின் எளிமை
கிருஷ்ணகிரியில் பொருட்களை வாங்கி வரிசையில் நின்று பில் போட்டு சென்ற கலெக்டர்
கிருஷ்ணகிரி கலெக்டர் தீபக் ஜேக்கப் இன்று கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள வணிக வளாகத்தில் பொருட்களை வாங்கிய கலெக்டர் தீபக் ஜேக்கப் வரிசையில் இன்று பில் போட்டு மக்களோடு மக்களாக எளிமையாக சென்றது அனைவரையும் ஆச்சிரியத்திற்கு உள்ளாக்கியது.
கிருஷ்ணகிரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு, இரத்த வங்கி, மற்றும் பொது வார்டு, நோயாளிகள் வருகை பதிவேடுகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.தீபக் ஜேக்கப் இ.ஆ.ப. அவர்கள் (24.3.2023) அன்று மாலை 7- மணிக்கு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் மருத்துவ கல்லுாரி முதல்வர் மரு. ராஜஸ்ரீ, மற்றும் மருத்துவர்கள் உள்ளனர்.
கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பாக தேசிய மின்சிக்கன வார விழாவையொட்டி, தேசிய எரிசக்தி பாதுகாப்பு தின விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் வி.ஜெயசந்திர பானுரெட்டி இ.ஆ.ப., அவர்கள் இன்று (17.12.2022) கொடியசைத்து துவக்கி வைத்தார்
தேசிய எரிசக்தி பாதுகாப்பு தின விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் வி.ஜெயசந்திர பானுரெட்டி இ.ஆ.ப., அவர்கள் இன்று (17.12.2022)
கொடியசைத்து துவக்கி வைத்தார்.
மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும், மழை காலங்களில் மின்சாரத்தை பாதுகாப்பாக பயன்படுத்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தகவல்
கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும்
பகிர்மான கழகம் சார்பாக தேசிய மின்சிக்கன வார விழாவையொட்டி, தேசிய எரிசக்தி
பாதுகாப்பு தின விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்
வி.ஜெயசந்திர பானுரெட்டி இ.ஆ.ப., அவர்கள் இன்று (17.12.2022) கொடியசைத்து
துவக்கி வைத்தார். தொடர்ந்து செய்தி மக்கள் தொடர்புத்துறையின் நவீன மின்னனு
வாகனம் மூலம் மின் சிக்கனம் மற்றும் மழை காலங்களில் பாதுகாப்பு விழிப்புணர்வு
குறித்து குறும்படம் ஒளிபரப்பை துவக்கி வைத்து பொதுமக்களுக்கு துண்டு
பிரசுரங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு
தமிழ்நாடு மின் பகிர்மான கழக மேற்பார்வை பொறியாளர் திருமதி.அ.ஏஞ்சலா
சகாயமேரி அவர்கள் முன்னிலை வகித்தார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் வி.ஜெயசந்திர பானுரெட்டி இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேசிய மின்சிக்கன வார விழா டிசம்பர் 14 முதல் 20 வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சூரிய சக்தியை பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்து, மின் தேவையை குறைத்தல், தேவையில்லாமல் இயங்கம் விளக்குகள், மின் விசிறிகள் மற்றும் தொலைக்காட்சிப் பெட்டிகளை அணைத்தல், சாதாரண குண்டு பல்புக்கு பதிலாக சி.எப்.எஸ், எல்.ஈ.டி விளக்கை பயன்படுத்தி 60 சதவிகிதம் வரை மின்சாரத்தை சேமித்தல், மின் மோட்டாரில் ஐ.எஸ்.ஐ முத்திரையிட்ட மின் தேக்கியைப் பயன்படுத்தி மின்சாரத்தை சேமித்தல், நட்சத்திர குறியீடு கொண்ட மின்சாதனங்களை உபயோகித்து மின்சக்தியினை சேமித்தல், குழல் விளக்குகளில் எலக்ட்ரானிக் சோக்குகளை பயன்படுத்தி மின்சாரத்தை சேமித்தல், சூரிய ஒளி மூலம் நீர் சூடேற்றும் கருவியை பயன்படுத்தி மின்சாரத்தை சேமித்தல் உள்ளிட்ட மின் சேமிப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும்.
மேலும், திறன் மிக்க மின் சாதனங்களை தேர்வு செய்து, நன்கு பராமரித்து மின் செலவைக் குறைக்கலாம். மின் விசிறிகளில் எலக்ட்ரானிக் ரெகுலேட்டர்களைப் பயன்படுத்துதல், மின் மோட்டார்களுக்கு ஐ.எஎஸ்.ஐ முத்திரையிடப்பட்ட கெபாசிட்டர்களைப் பொருத்தல், மும்முனை மின்சாரத்தில் பம்புசெட்டை இயக்குதல், அனைவருக்கும் மின்சாரம் தொடர்ந்து கிடைக்க தேவைக்கேற்ப பம்புசெட்டை இயக்குதல், பம்புசெட்டுகளில் தகுந்த கெப்பாசிடர் பொருத்தி மின்சாரத்தை சேமித்தல்,
மின்சாரத்தை சேமிக்க குண்டு பல்புகளுக்கு பதிலாக குழல் விளக்குகள் / விளக்குகளைப் பயன்படுத்துவதன் மூலம் மின்சாரத்தை சேமிக்கலாம்.
மின் நுகர்வோர்கள் தங்கள் மின் இணைப்பின் மின் கட்டணம் குறித்த சந்தேகங்கள், புதிய மின் இணைப்பு தகவல்கள், பழுதடைந்த மீட்டர்கள், உடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின் கம்பங்கள், பழுதடைந்த மின் பெட்டிகள், ஆபத்தான நிலையில் உள்ள மின்மாற்றிகள், மின்தடை, குறைந்த மின்னழுத்தம் உள்ளிட்ட புகார்களுக்கு 24 மணி நேர சேவை மைய எண் 9498794987 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
மேலும், மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க அனைத்து மின்வாரிய பிரிவு அலுவலகங்களிலும் நவம்பர் 28 -ம் தேதி முதல் டிசம்பர் 31-ம் தேதி வரை சிறப்பு முகாம் நடைபெறும். https://adhar.tnebltd.org/Aadhaar/ என்ற இணையதள முகவரியிலும் தங்களது மின் இணைப்பில் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம்.
எனவே, வீடு, கைத்தறி, விசைத்தறி, குடிசை மற்றும் விவசாய மின் நுகர்வோர்கள் தங்களுடைய மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் வி.ஜெயசந்திர பானுரெட்டி இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
விழிப்புணர்வு பேரணியானது புதிய பேருந்து பேருந்து நிலையத்தில் துவங்கி ராயக்கோட்டை சாலை புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வழியாக மின்பகிர்மான மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தை அடைந்தது. இப்பேரணியில் மின் பகிர்மான கழக பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், மற்றும் அலுவலர்கள் பணியாளர்கள் என 500 க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு மின் பகிர்மான கழக மேற்பார்வை பொறியாளர் திருமதி.ஏஞ்சலா சகாயமேரி, செயற்பொறியாளர்கள் திரு. முத்துசாமி, திரு,கிருபானந்தம், திருமதி.இந்திரா, திருமதி.நிரஞ்சனா, உதவி இயக்குநர்கள் திரு.கந்தசாமி, திரு. அம்பேத்கார், திரு.பழனிவேல், திரு.மணிவேல், திரு.நாகராஜ், திரு.மணி, கிருஷ்ணகிரி வட்டாட்சியர் திரு.சம்பத் மற்றும் திரு.சம்பத் மற்றும் பொறியாளர்கள், அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் தொடர் மழைக்கு மூதாட்டியின் கூரை வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சேதம். நல்வாய்ப்பாக தப்பிய மூதாட்டிக்கு உடனடியாக நிதி உதவி அளித்த ஊராட்சி மன்ற தலைவர்
போச்சம்பள்ளி தொடர் மழைக்கு மூத்தாட்டியின் கூரை வீட்டின் சுவர் இடிந்து சேதம் – நல்வாய்ப்பாக தப்பிய மூதாட்டி – உடனடியாக பண உதவி அளித்த ஊராட்சி மன்ற தலைவர்
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த திருவயலூர் கிராமத்தை சேர்ந்தவர் சகுந்தலா (67). கணவரை இழந்த இவர் கடந்த 4 ஆண்டுகளாக தனது கூரை வீட்டில் தனிமையில் வசித்து வருகிறார். மாண்டஸ் புயல் காரணமாக போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் நேற்று விட்டுவிட்டு சாரல் மழை பெய்து வந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை சகுந்தலா வீட்டின் ஒரு பக்க சுவர் இடிந்து விழுந்தது. வீடு இடிந்து விழும் சப்தம் கேட்டு வெளியே வந்த மூதாட்டி, வீடு இடிந்து விழுந்திருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் பக்கத்து குடியிருப்பில் தற்காலிகமாக தஞ்சமடைந்தார். இன்று காலை ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.ரங்கநாதன் நேரில் பார்வையிட்டு மூதாட்டிக்கு பண உதவி செய்தார். கூரை வீடு மேலும் சேதமடைந்து இருப்பதால் வீட்டில் வசிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டதோடு, மூதாட்டியை தற்காலிகமாக மாற்று இடத்தில் தங்க ஏற்பாடு செய்து கொடுத்தார்.
வேளாண்மை அறிவியல் மையம் , கிருஷ்ணகிரி ICAR – NBAIR பெங்களூரு வேளாண்மை துறை , கிருஷ்ணகிரி திருப்பத்தூர் மாவட்டம் இணைந்து நடத்திய மண்வள பாதுகாக்க நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் தே.மதியழகன் MLA அவர்கள் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
உலக மண்வள தினத்தை முன்னிட்டு காவேரிப்பட்டணம் பையூர் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில். வேளாண்மை அறிவியல் மையம் , கிருஷ்ணகிரி ICAR – NBAIR பெங்களூரு வேளாண்மை துறை , கிருஷ்ணகிரி திருப்பத்தூர் மாவட்டம் இணைந்து நடத்திய மண்வள பாதுகாக்க நிகழ்ச்சியில்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான திரு.D.மதியழகன்.,MLA அவர்கள் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். உடன்
மாநில விவசாய அணி துணை செயலாளர் டேம்.வெங்கடேசன் அவர்கள் , மாவட்ட துணை செயலாளர் கோவிந்தசாமி அவர்கள், மாவட்ட பொருளாளர் கதிரவன் அவர்கள், அரசு அலுவலர்கள், மாவட்ட கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், கவுன்சிலர்கள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கிளை செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் கலந்துக்கொண்டனர்.
NCC பவள விழாவினையொட்டி, “தேசிய ஒற்றுமையை” வலியுறுத்தி தொடர் ஜோதி ஓட்டமாக ஒசூருக்கு வந்த ராணுவ கர்ணலுக்கு மாநில எல்லையில் மேயர் எஸ்.ஏ.சத்யா பூங்கொத்து வழங்கி வரவேற்றார்
NCC பவள விழாவினையொட்டி, “தேசிய ஒற்றுமையை” வலியுறுத்தி தொடர் ஜோதி ஓட்டமாக ஒசூருக்கு வந்த ராணுவ கர்ணலுக்கு மாநில எல்லையில் மேயர் பூங்கொத்து வழங்கி வரவேற்றார்
NCC பவளவிழாவினையொட்டி, “தேசிய ஒற்றுமையை” வலியுறுத்தி இந்திய ராணுவ K.S.பத்வார்
கடந்த நவம்பர் மாதம் 20ம் தேதி கன்னியாகுமாரியில் இருந்து புதுடெல்லியை நோக்கி தொடர் ஓட்டத்தை தொடங்கினர்..
தினந்தோறும் 50கிமீ தூரத்தை ராணுவ கர்ணல் ஓட்டம் மேற்க்கொண்டு வரும்நிலையில், இன்று காலை
கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப்பள்ளி பகுதியிலிருந்து கர்ணல் பத்வார் ஓட்டத்தை தொடங்கி ஒசூர் வழியாக தமிழக – கர்நாடகா மாநில எல்லை அத்திப்பள்ளிக்கு வருகை தந்தார் அப்போது ஜூஜூவாடி பகுதியில் பள்ளி மாணவர்கள் தேசியக்கொடி ஏந்தி வரவேற்றனர்..
பின்னர் ஒசூர் மாநகர மேயர் S.A.சத்யா அவர்கள் பூங்கொத்து வழங்கி வரவேற்று வழி அனுப்பி வைத்தார்.. ராணுவ கர்ணல் K.S.பத்வார் கர்நாடகா மாநில எல்லைக்குள் ஜோதி ஏந்தி புறப்பட்டார்
வருகிற ஜனவரி மாதம் 18ம் தேதியன்று புதுடெல்லியில் தொடர் ஓட்டம் நிறைவடைய உள்ளது
ஓட்டத்தை தொடங்கிய ராணுவ கர்ணல் K.S.பந்துவார் அவர்கள் இன்று தமிழக மாநில எல்லை ஜூஜூவாடி பகுதிக்கு வருகை தந்த நிலையில் மாணவர்கள்,ராணுவ அதிகாரிகள் வரவேற்பு வழங்கினர்
இந்நிகழ்ச்சியில் துணை மேயர் ஆனந்தய்யா, தகவல் தொழில் நுட்ப அணியை சார்ந்த வடிவேல், கலைவாணன் மற்றும் பொதுமக்களுடன் இருந்தனர்
ஓசூரில் அரசு விளையாட்டரங்கம் அருகில் திடக்கழிவு மேலாண்மை மையம் அமைக்கக்கூடாது. அமைக்க முயற்ச்சித்தால் மாநகராட்சி எதிர்த்து அஇஅதிமுக சார்பில் பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி தெரிவித்துள்ளார்
ஓசூர் கிருஷ்ணகிரி மாவட்டம்.
ஓசூரில் அரசு விளையாட்டரங்கம் அருகில் திடக்கழிவு மேலாண்மை மையம் அமைக்கக்கூடாது. மக்களுக்கு விரோதமாக செயல்பட்டால் மாநகராட்சி எதிர்த்து பெரிய போராட்டம் நடத்தப்படும். அதிமுக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி எச்சரிக்கை.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அந்தி வாடி பகுதியில் கடந்த அதிமுக ஆட்சியின் பொழுது பல கோடி ரூபாய் மதிப்பில் உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு அரங்கத்தை தமிழக அரசின் சார்பில் அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த பி பாலகிருஷ்ண ரெட்டி முயற்சியால் அமைக்கப்பட்டது. பின்னர் இந்த விளையாட்டு அரங்கத்தில் தடகளம் மற்றும் கால்பந்து கைப்பந்து உள்ளிட்ட விளையாட்டுகளை நடத்துவதற்கு ஏதுவாக பல்வேறு மேம்பாட்டு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் தற்போதைய மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அந்த விளையாட்டு அரங்கத்திற்கு அருகாமையிலே குப்பைகளை தரம் பிரிக்கும் திடக்கழிவு மேலாண்மை மையத்தை அமைப்பதற்கான பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. இதற்கு விளையாட்டு வீரர்கள் அப்பகுதி குடியிருப்போர் மற்றும் சமூக ஆர்வலர்கள் என பல தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக ஏற்கனவே விளையாட்டு வீரர்கள் மாநகராட்சி நிர்வாகத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர் மேலும் இந்த திட்டத்தை அந்தப் பகுதியில் நிறைவேற்றுவதை கைவிட்டு மாற்று இடத்தில் அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் மாநகராட்சி நிர்வாகத்திடம் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் அரசு விளையாட்டு அரங்கத்தை நேரில் சென்று ஆய்வு செய்த முன்னாள் அதிமுக அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது,
சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் பகுதியில் அறக்கட்டளைக்கு சொந்தமான இந்த நிலத்தில் விளையாட்டு அரங்கம் அமைப்பதற்காகவே பிரத்தியேகமாக திட்டமிடப்பட்டு அவைகளும் கடந்த ஆட்சியில் சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துவங்கப்பட்டது. பின்னர் உள்விளையாட்டு அரங்கம் மற்றும் பல்வேறு இதர விளையாட்டுகளுக்கு உண்டான அம்சங்கள் மேம்படுத்தப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தன. மேலும் இங்கு நடை பயிற்சி மேற்கொள்வதற்கான வாக்கர்ஸ் பாத் , கூடைப்பந்து, நீச்சல் குளம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளை நடத்துவதற்கு ஏதுவாக மேம்படுத்தப்பட்டு இந்த பகுதி முழுவதுமாக விளையாட்டுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்ற நிலைக்கு மாற்றி அமைக்கப்பட்டது.
அதேபோல கடந்த அதிமுக ஆட்சியில் ஓசூர் மாநகராட்சி பகுதியிலிருந்து அப்புறப்படுத்தப்படும் குப்பைகள் அள்ளப்பட்டு ஊருக்கு வெளிப்புறத்தில் சுமார் 100 டன்னுக்கு மேல் வெளியேற்றப்பட்டு வந்தது. ஆனால் தற்பொழுது ஆட்சி காலத்தில் ஓசூர் மாநகர் முழுவதுமே குப்பை கிடங்காகவே காட்சி அளிக்கிறது. மாநகராட்சி சார்பில் தற்பொழுது சொத்து வரி உள்ளிட்ட வரிகள் இரண்டு மடங்குக்கு மேல் உயர்த்தப்பட்டு வருவாயும் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் ஓசூர் மாநகராட்சியின் மேம்பாடும் பராமரிப்பும் மிகவும் தரம் தாழ்ந்து வருகிறது. இங்கு மாவட்ட தலைநகரை விட மக்கள் தொகை அதிகமாக உள்ள இந்த பகுதியில் தொழிற்சாலைகளும் ஏராளமாக உள்ளன.
இந்த நிலையில் இந்த விளையாட்டு அரங்கம் முழுவதுமாக விளையாட்டிற்கு என்றே ஒதுக்கப்பட்ட நிலையில் அருகாமையில் திடக்கழிவு மேலாண்மை மையத்தை அமைப்பதற்காக மாநகராட்சி நிர்வாகம் பணிகளை மேற்கொண்டு வருகிறது என்பதற்கு இந்த பகுதியில் பொதுமக்கள் சார்பில் கடுமையான எதிர்ப்பு நிலவி வருகிறது. எனவே மக்களுக்கான ஆட்சியில் மக்களுக்கு விரோதமான நடவடிக்கைகளை மேற்கொள்வது இந்த அரசு உடனடியாக கைவிட வேண்டும்.
ஏற்கனவே இதுபோன்ற திடக்கழிவு மேலாண்மை மையத்தை ஓசூர் காமராஜ் காலனி பகுதியில் அமைக்கப்பட்டு அங்கிருந்து வெளியேறிய நச்சுத்தன்மை கொண்ட விஷவாயு காரணமாக அருகில் உள்ள பள்ளி மாணவர்கள் அண்மையில் கடுமையாக பாதிக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே. இதுவரை அதற்கான காரணம் என்னவென்பது குறித்து உரிய விளக்கங்கள் அளிக்கப்படவில்லை.
இவ்வாறான சூழ்நிலைகளில் மீண்டும் இது போன்ற மக்களை பாதிக்கக்கூடிய மக்களுக்கு விரோதமான திடக்கழிவு மேலாண்மை மையம் அமைக்கும் பணியை மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக கைவிட்டு மாற்று இடத்தில் அமைக்க முன்வர வேண்டும். இல்லையென்றால் அதிமுக சார்பில் மாநகராட்சி நிர்வாகத்தை எதிர்த்து மிகப் பெரிய போராட்டத்தை நடத்த வேண்டி இருக்கும் என அவர் எச்சரித்துள்ளார்.
ஓசூர் தெற்கு பகுதி கழக செயலாளர் வாசுதேவன் , ஓசூர் மாநகராட்சி நான்காவது மண்டல குழு தலைவர் ஜெய் பிரகாஷ் ,வடக்கு பகுதி கழக செயலாளரும் ஓசூர் மாநகராட்சியின் நகரமைப்புக்குழு தலைவருமான அசோகா ,கிழக்கு பகுதி செயலாளர் ராஜா , ஒன்றிய கழக செயலாளர் ஹரிஷ் ரெட்டி,பேரவை மாவட்ட செயலாளர் சிட்டி ஜெகதீஷ், 38 வது வார்டு வட்ட கழக செயலாளர் கோபால ராமச்சந்திரன், மாமன்ற உறுப்பினர் குபேர சங்கர் , ரகுமான்,பாசறை மாவட்ட துணை செயலாளர் சுரேஷ், வட்டக் கழக செயலாளர் பிரகாஷ் ராமச்சந்திரன் , கிருஷ்ணன் சாக்கப்பா மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்