கிருஷ்ணகிரி மாவட்டம், அரசு ஆடவர் கலைக்கல்லுாரி வளாகத்தில், கிருஷ்ணகிரி வட்டார போக்குவரத்து துறை சார்பாக பள்ளி வாகனங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பராமரிப்பு பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கே.எம்.சரயு இ.ஆ.ப. அவர்கள் இன்று (27.05.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் திரு.எஸ்.பாபு, துணை காவல் கண்காணிப்பாளர் (கிருஷ்ணகிரி) திருமதி.நா.தமிழரசி, கிருஷ்ணகிரி வட்டார போக்குவரத்து அலுவலர் திரு.எம்.பி.காளியப்பன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.
Poovizhi R
கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம், பள்ளிக்கல்வித்துறையுடன் இணைந்து நடத்திய “கோடை மகிழ்ச்சி கொண்டாட்டம்” சிறப்பு முகாம் நிறைவு விழாவில் மாவட்ட ஆட்சியர்கே.எம்.சரயு அவர்கள் மாணவ மாணவியர்களுடன் கலந்துரையாடினார்.
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. நீர்வளத்துறை விருந்தினர் மாளிகை வளாகத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம், பள்ளிக்கல்வித்துறையுடன் இணைந்து நடத்திய “கோடை மகிழ்ச்சி கொண்டாட்டம்” சிறப்பு முகாம் நிறைவு விழாவை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம்.சரயு இ.ஆ.ப., அவர்கள் (26.05.2023) அன்று துவக்கி வைத்து மாணவ மாணவியர்களுடன் கலந்துரையாடினார். உடன் ஒசூர் மாநகராட்சி ஆணையாளர் திரு.தி.சினேகா இ.ஆ.ப., ஒசூர் சார் ஆட்சியர் திருமதி.ஆர்.சரண்யா இ.ஆ.ப, மாவட்ட கல்வி அலுவலர் திருமதி.மணிமேகலை, மாவட்ட அருங்காட்சியக காப்பாச்சியர் திரு.கோவிந்தராஜ், மாணவ மாணவியர்கள் மற்றும் ஆசிரிய பெருமக்கள் உள்ளனர்.
காதலனை பிரிந்த விரக்தியில் காதலி தூக்குபோட்டு தற்கொலை .தற்கொலைக்கு தூண்டியதாக காதலன் வீட்டார் சாலை மறியல் .தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே முனுசாமிகொட்டாய் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி சிவன் இவருக்கு 3 மகள்கள் ஒரு மகன் உள்ளனர்.மூன்றாவது மகள் நதியா (வயது.19), பென்னாகரம் அரசு கலைக் கல்லூரியில் பி.எஸ்.சி. கணிதம் இரண்டாமாண்டு படித்து வந்தார்.கடந்த ஏப்ரல் 29ம் தேதி கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை இது குறித்து தந்தை மாரண்டஅள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்,அடுத்த நாள் ஏப்ரல் 30ம் தேதி நதியாவும் அதே கல்லூரியில் படிக்கும்5வது மைல்கல் கிராமத்தை சேர்ந்த விஜய்அரசு ( வயது. 20) இருவரும் மாரண்டஅள்ளி காவல் நிலையத்தில் ஆஜராகி இருவரும் காதலித்து வருவதாகவும் திருமணம் செய்ய இருப்பதாகவும் கூறினர்.இருதரப்பு பெற்றோர்களையும் அழைத்து போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் இருவரும் படிப்பு முடியாததால் படித்து முடித்ததும் தாங்களே திருமணம் செய்து வைப்பதாக கூறினர்.இதனை ஏற்று காதலர்கள் இருவரும் பெற்றோருடன் சென்றனர்.கடந்த சில நாட்களாக காதலனை பிரிந்த சோகத்தில் இருந்த நதியா நேற்று முன்தினம் இரவு வீட்டில் உள்ள உத்தரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.தகவலறிந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில் நேற்று காதலன் வீட்டார் காதலியின் வீட்டின் முன்பு குவிந்தனர்.காதலியை கட்டாயப்படுத்தி தற்கொலைக்கு தூண்டியதாகவும், காதலியின் தாய் மற்றும் தந்தையை கைது செய்ய வேண்டும் என கூச்சலிட்டவர்கள் திடிரென பெல்ரம்பட்டி – பாலக்கோடு சாலையில் ஆத்துக் கொட்டாய் பகுதியில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.சம்பவ இடத்திற்க்கு வந்த பாலக்கோடு டி.எஸ்.பி சிந்து இது குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.இதனால் சுமார் 2மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வனத்துறையின் சார்பில் தருமபுரி மாவட்டத்தில் முதல் முறையாக அமைக்கப்பட்டுள்ள சூரிய ஒளியில் இயங்ககூடிய தொங்கும் மின்வேலி முடிவுற்ற பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், பேவுஅள்ளி ஊராட்சி, ஈச்சம்பள்ளத்தில் வனத்துறையின் சார்பில் தருமபுரி மாவட்டத்தில் முதல் முறையாக அமைக்கப்பட்டுள்ள சூரிய ஒளியில் இயங்ககூடிய தொங்கும் மின்வேலி முடிவுற்ற பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப, அவர்கள் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், பேவுஅள்ளி ஊராட்சி, ஈச்சம்பள்ளத்தில் வனத்துறையின் சார்பில் தருமபுரி மாவட்டத்தில் முதல் முறையாக அமைக்கப்பட்டுள்ள சூரிய ஒளியில் இயங்ககூடிய தொங்கும் மின்வேலி முடிவுற்ற பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் இன்று (27.05.2023 பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம். பேவுஅள்ளி ஊராட்சி ஈச்சம்பள்ளத்தில் கடந்த 2022 அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை 6 மாதங்களாக யானைகள் காப்பு காட்டில் இருந்து வெளியே வந்து விவசாயிகளின் பயிர்களை சேதம் செய்வதால் சட்டமன்ற உறுப்பினர்கள், பஞ்சாயத்து தலைவர்கள், மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ரூ.16.00 இலட்சம் மதிப்பீட்டில் 2.5 கி.மீ சுற்றளவில் அமைக்கப்பட்டுள்ள சூரிய ஒளியில் இயங்ககூடிய தொங்கும் மின்வேலி முடிவுற்ற பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.இந்த ஆய்வின் போது தருமபுரி வன அலுவலர் திரு.கே.வி.அப்பல்ல நாயுடு. இ.வ.ப., வன சரக அலுவலர் திரு.நடராஜன், பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.சுருளிநாதன். ஊராட்சி மன்ற தலைவர் திரு.பிரகாஷ் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உடனிருந்தனர்.
காரிமங்கலம் கிழக்கு ஒன்றியத்தில் கருணாநிதி நூற்றாண்டு விழா கிரிக்கெட் போட்டி! முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன் தொடங்கி வைத்தார்
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் கிழக்கு ஒன்றியம் அடிலம் பஞ்சாயத்து சென்னம்பட்டி கிராமத்தில் கிரிக்கெட் போட்டி தொடக்க விழா நடந்தது. கிழக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன் வரவேற்றார். அவைத்தலைவர் மனோகரன், மாவட்ட துணை செயலாளர் வக்கீல் மணி, ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணன், வக்கீல் கோபால், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் மாரியப்பன், இளைஞரணி மகேஷ் குமார் உட்பட பலன் முன்னிலை வகித்தனர். மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் தலைமை வகித்து கிரிக்கெட் போட்டியை தொடங்கி வைத்து பேசினார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய துணை செயலாளர் சண்முகம், மாவட்ட மகளிர் தொண்டரணிஅமைப்பாளர் ஜெயா, விவசாய அணி ஜலபதி, நிர்வாகிகள் செந்தில் குமார், ஐயப்பன், நகர இளைஞரணி அருள், கிரிக்கெட் போட்டி அமைப்பாளர் ஹரிகரன், ஐ டி விங் ஆதம், மௌலி உட்பட பல கலந்து கொண்டனர்.
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் ஏ.ஜெட்டிஅள்ளியில் பயணியர் நிழற்கூடம் அமைக்க பணிக்கு தருமபுரி எம்எல்ஏ எஸ்.பி.வெங்கடேஷ்வரன் பூமி பூஜை
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் ஏ.ஜெட்டிஅள்ளி ஊராட்சி மாவட்ட தொழில் மையம் அருகில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத்திட்ட நிதியில் ரூபாய் 5.00 இலட்சம் மதிப்பீட்டில் பயணியர் நிழற்கூடம் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. நிழற்கூடம் அமைக்கும் பணியை தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஒ.கே. சுப்ரமணியம், ஒன்றிய செயலாளர்கள் ஒ.கே.கிருஷ்ணமூர்த்தி, பெ.சக்தி, ஒன்றிய கவுன்சிலர் சோனியாகாந்திவெங்கடேசன், பசுமை தாயக பொறுப்பாளர் சரவணன், முனுசாமி, துரை, கண்ணதாசன், சிவக்குமார், சிவச்சந்திரன், செல்வம், பெரியசாமி, சரவணன் உள்ளிட்ட பொதுமக்கள் பலர் கலந்துக்கொண்டனர்
தருமபுரி மாவட்டம் பாரதிய ஜனதா கட்சி சார்பாக தருமபுரி மற்றும் மொரப்பூர் ஒன்றியங்களில் புதிய பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்
தருமபுரி மாவட்டம் பாரதிய ஜனதா கட்சி சார்பாக தருமபுரி மற்றும் மொரப்பூர் ஒன்றியங்களில் புதிய பொறுப்புகள் அறிவிக்கப்பட்டது இந்த நிகழ்வு தருமபுரி பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் மாவட்ட தலைவர் திரு. A.பாஸ்கர் Ex.MLA தலைமையில் நடைபெற்றது திரு. ராஜசேகர் (மொரப்பூர் ஒன்றிய தலைவர் ),திரு. ராஜ்குமார் ,திரு. சபரேசன்,(மொரப்பூர் ஒன்றிய துணைத் தலைவர்கள்),, திருமதி. அஜந்தா (மொரப்பூர் ஒன்றிய செயலாளர் ) ,பொருளாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், ஆகியோர்களுக்கு புதிய பொறுப்புகள் அறிவிக்கப்பட்டது தருமபுரி மாவட்ட கிழக்கு தலைவர் திரு. களிர்கண்ணன் மொரப்பூர் கிழக்கு ஒன்றிய தலைவர் திரு. பிரபு ஆகியோர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம் கெலமங்கலம் பேருந்து நிலையத்தில் மத்திய அரசை கண்டித்து எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம் கெலமங்கலம் பேருந்து நிலையத்தில் மத்திய அரசை கண்டித்து எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் கெலமங்கலம் பேருந்து நிலையத்தில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக் கொள்கை எதிர்த்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் திருமுறை பிரச்சாரம் செய்தனர்.இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை பொறுப்பேற்றவர்கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தலைவர் அஸ்கர் அலி,சிறப்புரையாற்றினார்,கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட துணை தலைவர் சபியுல்லா கண்டன கோஷங்களை எழுப்பினர், உடனிஇருந்தவர்கள்கெலமங்கலம் நகரத் தலைவர் சபீர், துணை தலைவர் மௌலா, மற்றும் செயற்குழு உறுப்பினர் ஏ.ஆர் இம்ரான், ஹமித், மற்றும் கட்சி நிர்வாகிகள் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம்மாவட்ட செயலாளர் ஒசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ்MLA அறிவிப்பு!
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம்மாவட்ட செயலாளர் ஒசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ்MLA அறிவிப்பு!கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் அ.யுவராஜ் தலைமையில் இன்று 28.05.2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணியளவில் ஒசூர் மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற உள்ளது.இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், மாநகர, ஒன்றிய, பேரூர், பகுதி செயலாளர்கள் மட்டும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.பொருள்: 1. முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா குறித்து,2. கழக உறுப்பினர் சேர்க்கை3.கழக ஆக்கப்பணிகள்என்று மாவட்ட செயலாளர் ஒய்.பிரகாஷ்MLAதனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுகவினருக்கு மாவட்ட செயலாளர் தே.மதியழகன் எம்எல்ஏ அறிக்கை.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுகவினருக்குஒரு முக்கிய அறிவிப்பு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்எல்ஏ அறிக்கை.கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் 29-05-2023 திங்கள்கிழமை அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.தவிர்க்க முடியாத காரணத்தினால் இந்த கூட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது. மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும்.