Home » கிருஷ்ணகிரி மாவட்டம் ஜெகதேவி அருகேவிவசாய கிணற்றில் தவறிவிழுந்த 4புள்ளி மான்களை தீயணைப்பு வீரர்கள் போராடி உயிருடன் மீட்டனர்,மீட்கப்பட்ட புள்ளிமான்கள் தொகரப்பள்ளி காப்பு காட்டுக்கு கொண்டு சென்றுவிடப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஜெகதேவி அருகேவிவசாய கிணற்றில் தவறிவிழுந்த 4புள்ளி மான்களை தீயணைப்பு வீரர்கள் போராடி உயிருடன் மீட்டனர்,மீட்கப்பட்ட புள்ளிமான்கள் தொகரப்பள்ளி காப்பு காட்டுக்கு கொண்டு சென்றுவிடப்பட்டது.

by Babukanth V
0 comment

கிருஷ்ணகிரி மாவட்டம் ஜெகதேவி அருகே
விவசாய கிணற்றில் தவறிவிழுந்த 4
புள்ளி மான்களை தீயணைப்பு வீரர்கள் போராடி உயிருடன் மீட்டனர்,மீட்கப்பட்ட புள்ளிமான்கள் தொகரப்பள்ளி காப்பு காட்டுக்கு கொண்டு சென்றுவிடப்பட்டது.
………………………………………………
கிருஷ்ணகிரி மாவட்டம் மூன்றில் ஒரு பங்கு வனப்பகுதிகளை கொண்டுள்ளது இந்த வனப்பகுதியில் காட்டு யானைகள் சிறுத்தை புலி கரடி மான் போன்ற விலங்குகள் வாழ்கின்றன இவை அவ்வப்போது வனப்பகுதியை விட்டு உணவு மற்றும் தண்ணீரை தேடி வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களுக்குள் நுழைவது வழக்கமாக உள்ளன அவ்வாறு கிராமங்களுக்குள் வரும் விலங்குகள் கிணற்றில் தவறி விழுவது பயிர்களை சேதம் செய்வதும் வாடிக்கையாக உள்ளது.
இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஜெகதேவி அருகே உள்ள
கீழ் சீனிவாசபுரம் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சூரியா சென்னப்பன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் கடலை சாகுபடி செய்து உள்ளார் அவற்றை பார்வையீட இன்று காலை சென்றபோது அப்போது அவருக்கு சொந்தமான 60 அடி ஆழம் கொண்ட வறண்ட விவசாய கிணற்றில் எதே சத்தம் வந்துள்ளது அருகில் சென்று பார்த்தபோது கிணற்றில் மூன்று பெண் மான் ஒரு ஆண் மான் என நான்கு புள்ளி மான்கள் கிணற்றில் தவறி விழுந்து உள்ளதை கண்டுள்ளார் இதனையடுத்து உடனடியாக கிருஷ்ணகிரி வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார்.தகவல் அறிந்து உடனடியாக வனத்துறை மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பிறகு கயிறு மூலமாக கிணற்றில் இறங்கி உள்ளே இருந்த புள்ளி மான்களை மீட்டனர் பிறகு தொகரப்பள்ளி வனப்பகுதியில் விட்டனர். தொகரப்பள்ளி காப்பு காட்டில் ஏராளமான மான்கள் உள்ளது இவை இரவு நேரங்களில் உணவுக்காக வெளியே வரும் போது நாய்கள் துரத்துவதால் மான்கள் மயந்து ஒடும்போது இதுபோல் சம்பவங்கள் நடப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
மேலும் இப்பகுதியில் வனவிலங்குகளால் விவசாயம் செய்ய முடியவில்லை ஆகையால் தொகரப்பள்ளி காப்பு காட்டில் இருந்து வரும் வனவிலங்குகளை முள்வேலிகள் அமைத்து விவசாயத்தை காக்கப்பட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

You may also like

Add Comment
error: Content is protected !!