Home » வேலை வாய்ப்பில் 80% சதவிதம் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கே வழங்கப்படும் என்று டாடா நிறுவனம் உறுதியளித்துள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

வேலை வாய்ப்பில் 80% சதவிதம் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கே வழங்கப்படும் என்று டாடா நிறுவனம் உறுதியளித்துள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

by Babukanth V
0 comment

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகாவில் அமைந்துள்ள டாடா எலெக்ட்ரானிக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் தமிழ்நாட்டைச் சார்ந்த நபர்களுக்கு

வேலைவாய்ப்பு அளித்தல் தொடர்பாக மாண்புமிகு தொழில் துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்களின் அறிக்கை!!

டாடா எலெக்ட்ரானிக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், மின்னணு பொருட்களை உற்பத்தி செய்வதற்காக
தனது
தொழிற்சாலையை
கிருஷ்ணகிரி
தேன்கனிக்கோட்டை தாலுகாவில் அமைந்துள்ள
GMR தொழிற்பூங்காவில், சுமார் 500 ஏக்கர் நிலப்பரப்பில் அமைத்து வருகிறது.

4684 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்பட்டுவரும்

இத்தொழிற்சாலையின் மூலம் ஏறத்தாழ 18000 நபர்களுக்கு
வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தொழிற்சாலையில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அதிக
அளவில் வேலைவாய்ப்பு
அளிக்கப்பட்டுவருவதாக பத்திரிக்கை செய்திகளும் புகார்களும் அரசிற்கு வந்துகொண்டிருக்கின்றன.

இந்நிறுவனம் தற்போது வரை தமிழ்நாட்டைச் சார்ந்த ஏறத்தாழ 5500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்துள்ளதாக தெரிவித்துள்ளது. வணிக ரீதியிலான உற்பத்தியினைத் தொடங்கும் போது பணியாளர் தேவையில் ஏறத்தாழ 80 விழுக்காடு பணியிடங்களுக்கு தமிழ்நாட்டைச்
சார்ந்தவர்களை நியமிக்க படுவார்கள் என்று டாடா எலெக்ட்ரானிக்ஸ்
நிறுவனம் பொறுப்புறுதி அளித்துள்ளது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்

You may also like

Add Comment
error: Content is protected !!