ஓசூரில் புதிய மருத்துவமனை பாஜக தலைவர் தொடங்கி வைத்தார்கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பெரியார் நகரில் புதிதாக அருண்ஸ் மருத்துவமனை தொடங்கப்பட்டுள்ளது.இந்த விழாவிற்கு பாரதிய ஜனதா கட்சி கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தலைவர் M. நாகராஜ் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைத்தார் உடனிருந்தவர்கள் மருத்துவர் அருண், மற்றும் செவிலியர்கள் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
அரசியல்
பர்கூர் பேரூராட்சியில் நீர்மோர் பந்தலை தே.மதியழகன் எம்எல்ஏ திறந்து வைத்தார்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் பர்கூர் பேரூராட்சியில் கோடை வெப்பத்தை தணிக்கும் பொருட்டு திமுக சார்பில் நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டது. மாவட்ட கழக செயலாளரும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான தே.மதியழகன் எம்எல்ஏ தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு தர்பூசனி, நீர்மோர் வழங்கினார்.இந் நிகழ்ச்சியில் மாவட்ட அவை தலைவர் டி.ஏ.நாகராஜ், மாவட்ட துணை செயலாளர் பி.கே.கோவிந்தசாமி, மாவட்ட பொருளாளர் கதிரவன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெ.கே.கிருபாகரன், பொதுக்குழு உறுப்பினர்கள் பாலன், அஸ்லம், கிருஷ்ணகிரி நகர செயலாளர் எஸ்.கே.நவாப், பர்கூர் பேரூர் செயலாளர் வெங்கடப்பன், பேரூராட்சி தலைவர் சந்தோஷ்குமார், ஒன்றிய செயலாளர்கள் வி.ஜி.ராஜேந்திரன், அறிஞர், கவுன்சிலர் மகேந்திரன், துணை செயலாளர் மகேந்திரன், மாவட்ட பொறியாளர் அணி டி.சி.ஆர்.தினேஷ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்
கட்டிகானப்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு எழுது பொருட்கள் மற்றும் நோட்டு புத்தகங்களை தே.மதியழகன் எம்எல்ஏ வழங்கினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், கட்டிகானப்பள்ளி ஊராட்சியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ – மாணவிகளுக்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தே.மதியழகன்MLA அவர்கள் பேனா, பென்சில், அளவுக்கோல் போன்றவற்றை வழங்கினார். மாவட்ட அவைத்தலைவர் TA.நாகராஜ், மாவட்ட துணை செயலாளர்கள் B.K.கோவிந்தசாமி, சாவித்திரி கடலரசு மூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் அஸ்லம் ரகுமான் ஷரீஃப் , திருமதி.சித்ரா சந்திரசேகர், நகர செயலாளர் SK.நவாப், கிருஷ்ணகிரி மேற்கு ஒன்றிய செயலாளர் தனசேகரன், ஊராட்சி மன்ற தலைவர், கவுன்சிலர், வார்டு கவுன்சிலர்கள் மற்றும் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் கலந்துக்கொண்டனர்.
ஓசூரில் ரூ.48 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் உணவு கூடம் கட்ட பூமி பூஜைY.பிரகாஷ் – S.A.சத்யா துவக்கி வைத்தனர்.
ரூ.48 லட்சத்தில் சுற்றுச்சுவர், உணவு கூடம்எம்.எல்.ஏ., மேயர் பூமிபூஜை செய்து துவக்கி வைத்தனர் ஓசூர் மாநகராட்சி அந்திவாடி அரசு உயர்நிலைப்பள்ளியில் தமிழக அரசு மற்றும் டி.வி.எஸ்., நிறுவனத்தின் சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை சார்பில் நமக்கு நாமே திட்டத்தில் 48 லட்சம் ரூபாய் மதிப்பில் சுற்றுச்சுவர் மற்றும் உணவு கூடம் அமைக்கும் பணியை கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க., செயலாளரும் ஓசூர் எம்.எல்.ஏ.,வுமான பிரகாஷ், மாநகர செயலாளரும் மேயருமான சத்யா, மாநகராட்சி ஆணையாளர் சினேகா IAS ஆகியோர் பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தனர். துணை மேயர் ஆனந்தய்யா, சென்னீர்ப்பா தலைவர் வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழு பெற்றோர் ஆசிரியர் கழகம்( PTA PRESIDENT ) கவுன்சிலர்கள் பாக்கியலட்சுமி, மாதேஸ்வரன், தேவி மாதேஸ், இந்திராணி, மாவட்ட பிரதிநிதி நாகராஜ், வெங்கடசாமி, டி.வி.எஸ்., குழும தொழிற்சங்க தலைவர் குப்புசாமி, சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை மேலாளர் கமலகண்ணன்,தலைமை ஆசிரியர் ராணி, ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள்,மாணவ மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் இராயக்கோட்டையில் ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிப்புக்கு எதிப்பு தெரிவித்து கண்டன ஆர்பாட்டம்
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் இராயக்கோட்டையில் இளம் தலைவர் ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிப்புக்கு எதிப்பு தெரிவித்து கண்டன ஆர்பாட்டம் நடைப்பெற்றது…………………. . . . . . . . . . . . . . . . . . .கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில்ராகுல் காந்தியின் மீது தேவையற்ற வழக்கு போட்டு சிறத்தண்டனையும், பதவி பறிப்பு செய்த மத்திய அரசை கண்டித்து கண்டன போராட்டம் நடைப்பெற்றது.ராயக்கோட்டை அண்ணாசிலை முன்பாக நடைப்பெற்ற இந்த கண்டன ஆர்பாட்டத்திற்கு மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன் தலைமை தாங்கினார், ஓசூர் மாநகர தலைவர் தியாகராஜன், விவசாய அணியின் மாவட்டத் தலைவர் ஹரிஸ் பாபு, வட்டாரத் தலைவர் சுந்தராஜன் ஆகியோர் முன்னிலை வகித்து கண்டன உரை ஆற்றினார்கள்.அப்பேது மாவட்ட பெருளாலர் மகாதேவன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்தமோகன்குமார், ராமமூர்த்தி, பாண்டியன், செல்வம், முரளி, கிருஷ்ணமூர்த்தி அஸ்வந்த், ரியாஸ், நியாமத், மல்லையன், தமிழ், துரைராஜ் உள்ளிட்டஏராளமானவர்கள் கலந்துக்கொண்டனர்.
தருமபுரி மேற்கு மாவட்ட பாமக செயற்குழு கூட்டம் தருமபுரி எம்எல்ஏ எஸ்.பி.வெங்கடேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
பாட்டாளி மக்கள் கட்சியின் தருமபுரி மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் தருமபுரியில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினரும், தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளருமான எஸ்.பி.வெங்கடேஷ்வரன் தலைமையில் தருமபுரி சட்டமன்ற அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பாட்டாளி மக்கள் கட்சி மாநில துணை தலைவர்கள் பி.சாந்தமூர்த்தி, பாடிசெல்வம், மாநில அமைப்பு செயலாளர் ப.சண்முகம், மாநில இளைஞர் சங்க செயலாளர் எம்.முருகசாமி, மாநில மகளிர் சங்க தலைவி நிர்மளாராசா, மாவட்ட தலைவர் மு.செல்வகுமார் ஆகியோர் இக்கூட்டத்திற்கு முன்னிலை வகித்தனர்.இந்த கூட்டத்தில், இ.மா.பாலகிருஷ்ணன் க.நம்பிராஜன், ஒ.கே.சுப்ரமணியம், த.காமராஜ், ரெ.மு.மனோகரன், சுதாகிருஷ்ணன், சி.வி.மாது, க.மாது, கே.இ.கிருஷ்ணன், ஆ.அன்பழகன், வாசுநாயுடு, மின்சாரம் சின்னசாமி, ப.சி.சிவக்குமார், கா.சித்துராஜ், தேவேந்திரன், பெருமாள், சங்கர், து.சத்தியமூத்தி, கமலேசன், ரவி, த.சக்தி, தகடூர்தமிழன், ஆர்.கே.சின்னசாமி, செந்தில், பாலச்சந்தர், சாந்தி, பெரியம்மாநாகு, தமிழ்செல்வி, எஸ்,ஏ.தங்கராஜி, எம்.ஆர்.சண்முகம், இரா.மாது, மே.தங்கராஜ், கு.சங்கர், வையாபுரி, சி.வெங்கடாசலம், இளையமுருகன், தீர்த்தமலை, சாமிகண்ணு, ஜெயக்குமார், ஈஸ்வரன், மாதப்பன், தமிழரசன், மகிமைநாதன், தாமரைசெல்வன், கலீம், ஸ்ரீதர், தக்காளி மணி மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் தலைவர்கள், செயலாளர் உள்ளிட்ட பலர்கலந்துக் கொண்டு சிறப்பித்தனர். இறுதியில், நகர செயலாளர் கி.வெங்கடேசன் நன்றி கூறினார். இந்த செயற்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன அவை,1. தமிழ்நாட்டில் தமிழைக் காக்க வேண்டும் என்பதற்காக தமிழைத்தேடி என்ற தலைப்பில் விழிப்புணர்வு பயணத்தையும், அதன் தொடர்ச்சியாக தமிழைக் காப்பதற்காக அரசுக்கும், வணிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் வலியுறுத்தி வரும் பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களுக்கு தருமபுரி மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறது.2. தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணையின் படி, தருமபுரி மாவட்டத்திலுள்ள அனைத்து வணிக நிறுவனங்களும் தமிழை முதன்மைப்படுத்தி பெயர்ப் பலகைகளை அமைக்க வேண்டுமென வணிகர்களை செயற்குழு கூட்டம் வலியுறுத்துகிறது.3. தருமபுரி மாவட்ட விவசாயிகளின் வாழ்வு செழிக்க காவிரி உபரிநீர்த் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசை இச்செயற்குழு வலியுறுத்துகிறது. 4. கடகத்தூர் ஏரி, சோகத்தூர் ஏரி, இராமக்கா ஏரி, பாலவாடி ஏரி, பாப்பாரப்பட்டி ஏரி ஆகிய ஏரிகளுக்கு பஞ்சப்பள்ளி அணை சின்னாற்றில் இருந்து தண்ணீர் வரும் நீர்வரத்துக் கால்வாயை 1000 கனஅடி அளவில் தண்ணீர் வரும் வகையில் அகலப்படுத்தி, தூர்வாரி, மேம்படுத்திட இச்செயற்குழு வலியுறுத்துகிறது.5. தருமபுரி மாவட்டத்தில் வேளாண் கல்லூரி அமைக்க தமிழக அரசை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பாஜக முன்னாள் கோட்ட பொறுப்பாளர் ரங்கநாத் பிறந்தநாள் விழா கெலமங்கலத்தில் கொண்டாடப்பட்டது
பாரதிய ஜனதா கட்சி முன்னாள் கோட்டை பொறுப்பாளர் ரங்கநாத் அவர்களுக்கு பிறந்தநாள் விழா.கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை முன்னாள் கோட்டை பொறுப்பாளர் ரங்கநாத் அவர்களுக்கு பிறந்தநாள் விழா கெலமங்கலம் பட்டாளம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இந்து தர்மத்திற்காக பள்ளியில் படிக்கும் போதே தேன்கனிக்கோட்டையில் 1990வது வருடம் நடைபெற்ற ஸ்ரீராம ஜோதி ஊர்வலத்தில் ஏற்பட்ட கலவரத்தில் காவல்துறையிடம் அடிவாங்கி, என்னோடு சேலம் மத்திய சிறையில் இருந்து தொடர்ந்து இந்து தர்மத்திற்காக பணியாற்றி வரும் இந்துவீரர் தேன்கனிக்கோட்டை சேர்ந்த ரங்கநாத் அவர்களுக்கு பிறந்தநாளை முன்னிட்டு பொன்னாடை போர்த்தி பூமாலை அணிவித்து மரியாதை செய்தனர். இந்த பிறந்தநாளில் வளமுடனும், நலமுடனும் நீடூழி வாழ ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்கள் பாரதிய ஜனதா கட்சி கெலமங்கலம் மேற்கு ஒன்றிய இளைஞர்அணி தலைவர் கிருஷ்ணன், மாவட்ட செயலாளர் குருமூர்த்தி, விவசாய அணி மாவட்ட செயலாளர் ராஜா, அஜந்தா டைலர் கிருஷ்ணப்பா, சென்னீரப்பா, நாகபூஷணம், சந்திரசேகர், சிவப்பா, மற்றும் ஏராளமான பாரதியார் ஜனதா கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
கிருஷ்ணிரி ஒன்றியஅதிமுக சார்பில் தண்ணீர் பந்தலை மாவட்ட செயலாளர் கே.அசோக் குமார் எம்எல்ஏ திறந்து வைத்தார்.
கிருஷ்ணிரி ஒன்றியஅதிமுக சார்பில் அமைக்கப்பட்ட நீர், மோர் பந்தலை சட்டமன்ற உறுப்பினர் அசோக் குமார் திறந்துவைத்து பொதுமக்களுக்கு நீர்,மோரினை வழங்கினார்………………………………………………தமிழகம் முழுவதும் கோடை காலம் துவங்கும் முன்பாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது.இந்த வெயிலினால் பாதசாரிகள் மற்றும் மக்கள் மிகவும் இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர்.இதனைப் போக்கிடும்வகையில் தமிழகம் முழுவதும் நீர்மோர் பந்தல்கள் திறந்து பொதுமக்களின் தாகத்தினை தீர்க்க வேண்டும் முன்னால் முதல்வரும் அதிமுக கழக பொதுச்செயலாளரும் மான எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் உத்தரவிட்டு இருந்தார்.இதன் அடிப்படையில்கிருஷ்ணகிரி ஒன்றியஅதிமுக சார்பில் கிருஷ்ணகிரி ராயக்கோட்டை மேம்பாலம் அருகில் பொதுமக்களின் தாகம் தீர்க்கும் நீர்மோர் பந்தல் திறப்பு விழா நடைப்பெற்றது.கிருஷ்ணகிரி ஒன்றிய அதிமுக செயலாளர் சோக்காடி தலைமையில்நடைப்பெற்ற இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்ட அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினரும்மானஅசோக்குமார் கலந்துக் கொண்டு பொதுமக்களின்தாகம் தீர்க்கும் நீர்மோர் பந்தலை திறந்துவைத்தார்,இதனை அடுத்து பொதுமக்கள் மற்றும் பாதசாரிகளுக்கு பானகாரம், நீர், மோர், தர்பூசணி உள்ளிட்ட தாகம் தீர்கும் பழங்களை வழங்கினாகள்.அப்போது முன்னால் சட்டமன்ற உறுப்பினர்கள்திருமதி மனோரஞ்சிதம் நாகராஜன், முனி வெங்கடப்பன்,முன்னால் மாவட்ட செயலாளர் தென்னரசு, கூட்டுறவு சங்கத் தலைவர் சைலேஷ்கருஷ்ணன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் திருமதி ஜெய ஆஜி உள்ளிட்ட அதிமுகவை சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்துக்கொண்டனர்கள்.
மாநில பா.ஜ.க தலைவர் K.அண்ணாமலை அறிவிப்பின் படி அனைத்து பூத்களிலும் தாமரை சின்னம் வரைதல் நிகழ்ச்சி.
2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 400 மேற்பட்ட இடங்களில் வெற்றிபெற்று மீண்டும் நரேந்திர மோடி பிரதமராக தொடர்வார் என்பதை உணர்த்த இன்று கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பா.ஜ.க சார்பில் மாநில பா.ஜ.க தலைவர் திரு.K.அண்ணாமலை அவர்களின் அறிவிப்பின் படி அனைத்து பூத்களிலும் தாமரை சின்னம் வரைதல் நிகழ்ச்சியினை மாவட்ட தலைவர் திரு.M.நாகராஜ் அவர்கள் தனது சொந்த பூத்தில் துவங்கினர்.இதேபோல் மாவட்ட முழுவதும் 1000 இடங்களில் பாஜக நிர்வாகிகள் தாமரை சின்னம் வரைவார்கள் என தெரிவித்தார் , உடன் மாவட்ட பொருளாளர் ஸ்ரீனிவாசன் செயலாளர் பிரவீன் மாநகர தலைவர் மணிகண்டன் ஆகியோர் இருந்தனர்.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் முழுவதும் தண்ணீர் பந்தல்கள் அமைத்திட வேண்டும்மென திமுக மாவட்ட கழக செயலாளர் தே.மதியழகன்MLA அறிக்கை.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் தண்ணீர் பந்தல்கள் அமைத்திட வேண்டும்மென திமுக மாவட்ட கழக செயலாளர் தே.மதியழகன்MLA அறிக்கை!திராவிட முன்னேற்றக் கழக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான தளபதியார் அவர்களின் ஆணைப்படி, தமிழ்நாட்டில் கோடை வெப்பம் அதிகரித்துள்ளதால் தமிழக மக்களை கோடை வெப்பத்திலிருந்து காக்கும் வகையில் திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தில் உள்ள நகர, ஒன்றிய, பேரூர், வட்ட, கிளைக் கழக செயலாளர்கள், நிர்வாகிகள், அனைத்து அணிகளின் நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கோடை காலம் முழுவதும் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும், சாலை மற்றும் தெரு ஓரங்களிலும், பொதுமக்கள் சந்திக்கும் இடங்களிலும், பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் தண்ணீர் பந்தல் அமைத்து குடிநீர், நீர்மோர், இளநீர், குளிர்பானம், தர்பூசணி போன்ற கோடை வெப்பத்தை தணிக்கும் பொருட்களை பொது மக்களுக்கு வழங்கி அவர்களுடைய தாகத்தை தனித்திட வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.குறிப்பு: தாங்கள் அமைக்கும் தண்ணீர் பந்தல்களின் விவரங்களை மாவட்ட கழகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.