காவேரிப்பட்டினம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் மகேந்திரன் தனது ஒன்றியத்தில் உள்ள 14 ஊராட்சிகளுக்கு 29 கொடிக்கம்பங்களை தனது சொந்த செலவில் வழங்கினார். காவேரிப்பட்டினம் கிழக்கு ஒன்றியம் தட்ரஅள்ளி கிராமத்தில் நடந்த புதிய திமுக உறுப்பினர் செயற்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. திமுக மாவட்ட அவைத்தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட சேர்மன் மணிமேகலை நாகராஜ் முன்னிலை வைத்தார் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் மகேந்திரன் கலந்துகொண்டு தனது சொந்த செலவில் 16 ஊராட்சிகளுக்கு 29 திமுக கொடி கம்பங்கள் வழங்கினார் அப்போது கிழக்கு ஒன்றியத்தில் உள்ள அனைத்து பஞ்சாயத்துகளிலும் உள்ள தலைவர்கள் கவுன்சிலர்கள் திமுக பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து பாடுபட வேண்டும் காவேரிப்பட்டினம் கிழக்கு ஒன்றியத்தில் அதிகமாக உறுப்பினர் களை சேர்க்க அனைவரும் பாடுபட வேண்டும் என தெரிவித்தார். நிகழ்ச்சியில் தலைவர் கவுன்சிலர்கள் திமுக பொறுப்பாளர்கள் உறுப்பினர் கலந்து கொண்டனர்.
அரசியல்
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் கெலமங்கலம் வட்டாரத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டியின் ஆலோசனையின் படி கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் A செல்லக்குமார் MBBS MPஅவர்களின் அறிவுறுத்தலின்படி வட்டார தலைவர் MNசுந்தர்ராஜன் தலைமையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மேற்கு மாவட்ட தலைவர் முரளிதரன் விவசாய அணி தலைவர் ஹரிஷ் பாபு சம்பங்கி ஓசூர் மாநகரத் தலைவர் தியாகராஜன் மாவட்ட பொருளாளர் மகாதேவன் மோகன் குமார் ராமமூர்த்தி ஒன்றிய பொருளாளர் தமிழ் இளைஞர் காங்கிரஸ் மாவட்ட துணை தலைவர் பாண்டியன் கிருஷ்ணமூர்த்தி சூளகிரி காங்கிரஸ் பிரமுகர் நியாஸ் நியாமத் முரளி செல்வம் துரைராஜ் மல்லையன் அஸ்வத் குமார் திம்மராஜ் வெங்கடேஷ் ஆகிய பல நிர்வாகிகள் உறுப்பினர்கள் பொதுமக்கள் கொண்டமைக்கு பொதுமக்களும் கலந்து கொண்டமைக்கு அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி வட்டாரத் தலைவர் M N சுந்தர்ராஜ்
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் பர்கூரில் அதிமுக புதிய உறுப்பினர் சேர்க்கை படிவங்களை முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி வழங்கினார்
தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் சுமார் இரண்டு கோடி சேர்க்கை பணியினை நேற்று முன்தினம் சென்னையில் துவக்கிவைத்தார்.. இதன் அடிப்படையில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் பர்கூரில் அதிமுக சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவம் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
பர்கூர் வடக்கு ஒன்றிய அதிமுக அலுவலகத்தில் ஒன்றிய செயலாளரும், முன்னால் சட்டமன்ற உறுப்பினரும் மான சி.வி.ராஜேந்திரன் தலைமையில் நடைப்பெற்ற இந்த நிகழ்சிக்கு சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்ட முன்னால் அதிமுக அமைச்சரும், மேற்கு மாவட்ட அதிமுக மாவட்ட செயலாளரும் மான பாலகிருஷ்ணாரெட்டி கலந்துக்கொண்டு புதிய உறுப்பினர் சேர்க்கைகான விண்ணப்படிவங்களை வழங்கி அதிமுக கட்சியைப் மீண்டும் பர்கூரில் அதிப்படியான உறுப்பினர் சேர்த்த சட்டமன்றத் தொகுதியாக இருக்க அனைவரும் முனைப்புடன் செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதனை அடுத்து அதிமுகவினர் புதிய உறுப்பினர் சேர்க்கும் விண்ணப்ப படிவங்களை கழக நிர்வாகிகள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.
அப்போது மாவட்ட அவைத்தலைவர் பெருமாள், ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணன், ஜெயபாலன், முன்னால் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் மாதையன், மாவட்ட மாணவரணி செயலாளர் வெற்றிச்செல்வன், நகர செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்..
மேலும் இந்த நிகழ்ச்சியின்போது தகவல்தொழில்நுட்ப மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், கவுன்சிலர், முரளி, தூயமணி,பழனி சரவணன், திருமால், வெள்ளையன், சக்ரவர்த்தி, உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்துக் கொண்டனர்கள்.
பர்கூர் பேரூராட்சியில் திமுக உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் BLA-2 ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
பர்கூர் பேரூராட்சியில்கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர்,பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன் MLA அவர்களின் வழிகாட்டுதலுடன் திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் BLA-2 ஆலோசனைக் கூட்டம் மாவட்ட அவை தலைவர் டி.ஏ.நாகராஜ், பர்கூர் தொகுதி பொறுப்பாளர் டி.எம்.அரியப்பன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜே.கே.கிருபாகரன் தலைமையில் நடைபெற்றது. மாநில விவசாய அணி துணை செயலாளர் மற்றும் தொகுதி பார்வையாளர் அரியப்பன், மாநில பொதுக்குழு உறுப்பினர் நாகராசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பொதுக்குழு உறுப்பினர் பாலன்,பேரூராட்சி செயலாளர் வெங்கடப்பன், பேரூராட்சி தலைவர் சந்தோஷ், பேரூர் துணை செயலாளர், பேரூராட்சி உறுப்பினர்கள் அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், ஒன்றிய அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கிளை கழக செயலாளர்கள், BLA-2 நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக மூத்த முன்னோடிகள் என அனைவரும் கலந்து கொண்டனர்
ஓசூரில் அதிமுக உறுப்பினர்கள் சேர்க்கைக்கான படிவங்களை கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் பி.பாலகிருஷ்ணரெட்டி வழங்கினார்
ஓசூரில் அதிமுக உறுப்பினர்கள் சேர்க்கைக்கான படிவங்களை நிர்வாகிகளிடம் முன்னாள் அமைச்சர் வழங்கினார்கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி, தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அதிமுகவின் கூட்டம் நடைப்பெற்றது..மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணா ரெட்டி தலைமையில் நடைப்பெற்ற இக்கூட்டத்தில்புதியதாக உறுப்பினர்கள் சேர்க்கைகான படிவங்களை மாவட்ட,மாநகர,ஒன்றிய நிர்வாகிகளிடம் வழங்கி புதியதாக உறுப்பினர்களை சேர்க்க அனைவரும் உழைக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்..பின்னர் அவர் பேசுகையில்;1.50 கோடி தொண்டர்களை கொண்ட மாபெரும் இயக்கம் தான் அதிமுக, அதிமுக தொடங்கப்பட்ட பிறகு அதிக நாட்கள் ஆட்சிப்பொறுப்பில் இருந்து தமிழ்நாட்டை வழிநடத்தி உள்ளது..சட்டமன்ற தேர்தலில் சிறிய சறுக்கல் தான், நமது இயக்க ஆட்சியின் சாதனைகளை பொதுமக்களுக்கு எடுத்துகூறி நாடாளுமன்ற தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அதிக வாக்குகள் பெற கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அதிமுகவினர் இப்போதே தயாராக வேண்டுமென பேசினார்இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட துணை செயலாளர் மதன், மேற்கு மாவட்ட பொருளாளர் கந்தன்,மாவட்ட இணை செயலாளர் அலமேலு, ஓசூர் கிழக்கு பகுதி செயலாளர் ராஜு என்கின்ற ராஜா, ஓசூர் தெற்கு பகுதி செயலாளரும் மாமன்ற நகரமைப்பு குழு தலைவர் அசோகா ரெட்டி, மேற்கு பகுதி செயலாளர் வாசுதேவன், பகுதி கழக செயலாளர் மாமன்ற உறுப்பினருமான மஞ்சு, ஓசூர் மாநகராட்சியின் மண்டல குழு தலைவர் ஜெய் பிரகாஷ்,ஓசூர் முன்னாள் நகர செயலாளர் மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவருமான நாராயணன்,தேன்கனிக்கோட்டை பேரூராட்சி கவுன்சிலர் பழனி, கெலமங்கலம் பேரூராட்சி தேவராஜ்,ஓசூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் ஹரிஸ் ரெட்டி, ரவிக்குமார் ஜெயபால் கணேஷ் ஜாகிர் உசேன், ஓசூர் மாநகராட்சியின் கல்விக் குழு தலைவர் ஸ்ரீதரன், ஓசூர் ஒன்று குழு தலைவர் சசி வெங்கடசாமி,சார்பு அணி மாவட்ட செயலாளர்கள் சீனிவாசன், சிட்டி ஜெகதீஷ், சென்ன கிருஷ்ணன்,ஓசூர் மாமன்ற உறுப்பினர் வட்ட கழக செயலாளர் லட்சுமி ஹேம குமார் , ஓசூர் மாநகராட்சியின் மாமன்ற உறுப்பினரும் ஷில்பாசிவகுமார்,ஓசூர் உறுப்பினர்கள்ரஜினிகாந்த், ஓசூர் மாமன்ற உறுப்பினர் சிவராமன்,தேன்கனிக்கோட்டை நகர செயலாளர் ஜெயராமன், திருமங்கலம் பேரூராட்சி செயலாளர் மஞ்சு, ஒன்றிய கழகத் துணை செயலாளர் நவீன் ரமேஷ்,வட்டக் கழக செயலாளர் ஆனந்தபாபு, சீனிவாசன், முன்னாள் நகர மன்ற உறுப்பினர்கள் நாராயண ரெட்டி முரளி, ஹரி பிரசாத்,சீனிவாசன் , ஓசூர் ஒன்றிய குழு உறுப்பினர், ஊராட்சி மன்ற தலைவர் சரித்திர அருண்குமார்,சிவலிங்கம், பாசறை மாவட்ட நிர்வாகி சுரேஷ், அம்மா பேரவை ஒன்றிய நிர்வாகிகோவர்தன்,பாசறை நகர செயலாளர்இம்ரான் பாஷா, மாவட்ட பிரதிநிதி அச்சு என்கின்ற லட்சுமணன்,சாச்சு என்கின்ற ஆயாஸ், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்,
காவேரிபட்டிணத்தில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்களை துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி MLA திறந்து வைத்தார்
வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மக்களின் தாகம் தீர்க்கும் வகையில்காவேரிப்பட்டணம் பாலக்கோடு கூட்டுரோட்டிலும் மற்றும் காவேரிப்பட்டணம் பஸ் நிலையத்திலும்அஇஅதிமுக துணை பொதுச் செயலாளரும் வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினருமான K்P.முனுசாமி அவர்கள்தண்ணீர் பந்தல் திறந்து வைத்தார்கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட கழக செயலாளரும் கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினருமான K.அசோக்குமார்MLA அவர்கள் தலைமையிலும்மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் KPM.சதீஷ்குமார் அவர்களும்காவேரிப்பட்டணம் மேற்கு ஒன்றிய கழக செயலாளரும் ஒன்றிய குழு தலைவருமான பையூர் ரவி அவர்களும்கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மாணவரணி மாவட்ட செயலாளர் கே. பி.மோகன், பையூர் கூட்டுறவு சங்கத் தலைவர் அவர்களும்காவேரிப்பட்டணம் பேரூராட்சி கழக செயலாளர் விமல் அவர்களும்கரடி அள்ளி ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் கணேசன் ஆகியோர்முன்னிலை வகித்தார்கள்.மற்றும் கழக நிர்வாகிகளும் உடன்பிறப்புகள் மற்றும் பொது மக்களும் கலந்து கொண்டு சிறப்பித்ததார்கள்..
மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அவர்களை மு.தம்பிதுரை MP சந்தித்தார்
வர்த்தகம் மற்றும் தொழில்துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம், ஜவுளி துறைகளுக்கான அமைச்சர் மாண்புமிகு ஸ்ரீ பியூஷ் கோயல் அவர்களை மரியாதை நிமித்தமாக மாநிலங்களவை உறுப்பினர் முன்னாள் மத்திய மாநில அமைச்சர் மு.தம்பிதுரை சந்தித்து பேசினார்.
அஇஅதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி எம்எல்ஏ கிருஷ்ணகிரியில் உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்களை வழங்கினார்
இன்று 7-4-2023 கிருஷ்ணகிரி மாவட்டஅதிமுக அலுவலகத்தில்கிருஷ்ணகிரி கிழக்குமாவட்ட கழக செயலாளர் கே.அசோக்குமார் எம்எல்ஏ தலைமையில்அஇஅதிமுக துணைபொதுச் செயலாளர்வேப்பனஹள்ளி சட்டமன்றஉறுப்பினர் கே.பி.முனுசாமிMLA அவர்கள்உறுப்பினர் சேர்க்கைக்கானவிண்ணப்ப படிவம் வழங்கினார்நிகழ்ச்சியில்மாவட்ட, ஒன்றிய நகர கழக, கிளைக்கழக பொறுப்பாளர்கள் கூட்டுறவு சங்க தலைவர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள் மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர்கள் கழகத்தின் தொண்டர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
கே.பி.முனுசாமி MLA அவர்கள் கிருஷ்ணகிரி ரவுண்டனாவில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார்
இன்று (07/04/2023) அஇஅதிமுக துணை பொதுச் செயலாளரும், வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.முனுசாமி MLA அவர்கள் கிருஷ்ணகிரி ரவுண்டனாவில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் கே.அசோக்குமார் MLA அவர்கள் முன்னிலையிலும் நகரக் கழகச் செயலாளர் பி.என்.ஏ.கேசவன் தலைமையில் நடைபெற்றது.
வெயில் காலத்தில், வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்களின் தாகம் தனியும் பொருட்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து தர்பூசணி பழம், மோர், தண்ணீர், குளிர்பானம், சாத்துக்குடி, வெள்ளரிக்காய் ஆகியவை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அவைத் தலைவர் காத்தவராயன், முன்னாள் மாவட்ட செயலாளர் தென்னரசு, கிருஷ்ணகிரி ஒன்றிய செயலாளர்களும், சார்பு அணி நிர்வாகிகளும், மாவட்ட / ஒன்றிய / நகர கழக நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள்.
போச்சம்பள்ளியில் திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம் ஒன்றிய செயலாளர் சாந்தமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.
போச்சம்பள்ளி அம்மன் திருமண மண்டபத்தில்கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர்,பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன் MLA அவர்களின் வழிகாட்டுதலுடன் திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் BLA-2 ஆலோசனைக் கூட்டம் போச்சம்பள்ளிஒ ன்றிய கழக செயலாளர் சாந்தமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. மாநில விவசாய அணி துணை செயலாளர் மற்றும் தொகுதி பார்வையாளர் அரியப்பன், மாநில பொதுக்குழு உறுப்பினர் நாகராசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் போச்சம்பள்ளி ஒன்றிய கழகத்தைச் சார்ந்த ஒன்றிய நிர்வாகிகள்,மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், ஒன்றிய அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கிளை கழக செயலாளர்கள், BLA-2 நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக மூத்த முன்னோடிகள் என அனைவரும் கலந்து கொண்டனர்.