1980க்கு முன்பு ஜனசங் என்ற பெயரில் இருந்து பாரதிய ஜனதா என்ற பெயருக்கு மாற்றி பெயர் சூட்டி 44 ஆண்டுகள் நிறைவுபெற்று தொடங்கப்பட்ட நாளான நேற்று பல்வேறு நலத்திட்டங்கள் மக்களுக்கு வழங்கும் விழா நடைபெற்றதுகிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம் கெலமங்கலம் தேர்வுநிலை பேரூராட்சி தூய்மை காவலாளர்களுக்கு இனிப்புகள் வழங்கி அவர்களுக்கு மலர் துவி மரியாதை செய்தனர்,இந்த நிகழ்ச்சிக்கு தலைமை பொறுப்பேற்றவர் பாரதியஜனதா கட்சி உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தலைவர் மற்றும் ஜெக்கேரி ஊராட்சி மன்றத் தலைவர் S.ராஜேஷ்குமார், துணைத் தலைவர் ஆனந்த்ரெட்டி, இவர்கள் தலைமையில் நல்லதொரு நிகழ்ச்சி நடைபெற்றது,இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டவர் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தலைவர் M. நாகராஜ் அவர்கள்,இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள்,கிருஷ்ணகிரி மேற்குமாவட்ட பொருளாளர் கர்னூர் சீனிவாஸ், மாவட்ட துணைத் தலைவர் ஸ்ரீநிவாஸ்,மாவட்ட செயலாளர் குருமூர்த்தி, கெலமங்கலம் கணேஷ்,பெட்ரோல் பங்க் உரிமையாளர் மற்றும் கெலமங்கலம் மேற்கு ஒன்றிய செயலாளர் ரூபாஜி அவர்கள், ஒன்றிய பொது செயலாளர் N.மஞ்சுநாத், ஓசூர் தெற்கு ஒன்றிய தலைவர் வீரபத்ரப்பா, மற்றும் விவசாய அணி மாவட்ட செயலாளர்கள் ராஜா, முனிராஜ், விவசாய அணி ஒன்றிய பொதுசெயலாளர் சென்னவீரப்பா, கலை பிரிவு தளி இராமச்சந்திரப்பா, கெலமங்கலம் மேற்கு ஒன்றிய துணைத் தலைவர் ரவிக்குமார், இளைஞர் அணி ஓசூர் வடக்கு செயலாளர் வீரேந்திரன், இளைஞர் அணி ஒன்றிய துணைத் தலைவர்கள் உமேஷ், வினய், தொட்டே கானப்பள்ளி நாகபுஷணம், ஜெக்கேரி சந்திரசேகர், வெங்கடேஷ், ஜெக்கேரி ஊராட்சி துணைத் தலைவர் இராமகிருஷ்ணன், அப்பையா,செட்டிப்பள்ளி முரளி கிருஷ்ணா,கெலமங்கலம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் கோவிந்தம்மா, வயது 80 இவருக்கு ராஜேஷ் குமார் வட்டார மருத்துவர், மற்றும் மருத்துவர் ராஜா இவர்கள், முன்னிலையில் கெக்கேரி ஊராட்சித் தலைவர் எஸ் ராஜேஷ்குமார், அவர்கள் தலைமையில் பாஜக கட்சி நிர்வாகிகள் இணைந்து கோவிந்தம்மா அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி, பூ மாலை அணிவித்து சீருடைகள் மற்றும் நிதி உதவி வழங்கினார்கள்மற்றும் ஏராளமான மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள், பாரதியஜனதா கட்சி தொண்டர்கள், பொதுமக்கள்,இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
அரசியல்
ஓசூர் மாநகராட்சியில் பாஜக சார்பில் நீர் மோர் மற்றும் தர்பூசணி பழங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது
ஓசூர் மாநகராட்சியில் பாஜக சார்பில் நீர் மோர் தர்பூசணி பழங்கள் பொதுமக்களுக்கு வழங்கும் விழா.பாரதிய ஜனதா கட்சி கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் ஓசூர் மேற்கு மாநகரம் சார்பாக 35 வது வார்டு முனீஸ்வர் நகர் சர்க்கிள் மற்றும் அரசனட்டி16 வார் டு சென்னை சில்க்ஸ் அருகில் நீர் மோர் பந்தல் மாநகரத் தலைவர் ஜிம் ரமேஷ் தலைமையில் மாவட்ட தலைவர் திரு எம் நாகராஜ் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு துவங்கி வைத்தார் இதில் மாநகர மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
தருமபுரி மேற்கு மாவட்ட பாமக ஆலோசனை கூட்டம் நாளை நடைபெறும் என மாவட்ட செயலாளர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் அறிக்கை
பாட்டாளி மக்கள் கட்சி தருமபுரி மேற்கு மாவட்டத்தின் ஆலோசனை கூட்டம்.வரும் 08.04.2023 அன்று சனிக்கிழமைகாலை 10.00 மணிதருமபுரி சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தில் நடைப்பெற உள்ளது.இந்த நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சி, தருமபுரி மேற்கு மாவட்டத்தின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் தங்கள் பகுதியை சார்ந்த மாநில, மாவட்ட நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்து கூட்டத்தில் பங்கேற்கவும், தாங்களும், ஒன்றிய, நகர, பேரூர் தலைவர்களும் தவறாமல் கலந்துக் கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளரும் தருமபுரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.வெங்கடேஸ்வரன் அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
பாலக்கோடு மேற்கு ஒன்றிய திமுக சார்பில் முதல்வரின் 70 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகளை முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன் வழங்கினார்
பாலக்கோடு மேற்கு ஒன்றிய திமுக சார்பில் முதல்வரின் 70 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு 100 க்கும் மேற்பட்ட ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்.தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் வழங்கினார்பாலக்கோடு ஏப்ரல் 06 ; பாலக்கோடு மேற்கு ஒன்றிய திமுக சார்பில் முதல்வரின் 70 ஆவது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக பஞ்சப்பள்ளி, கும்மனூர், சூடனூர் உள்ளிட்ட ஊராட்சிகளில் சுமார் 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்களில் பாலக்கோடு மேற்கு ஒன்றிய செயலாளர் பஞ்சப்பள்ளி அன்பழகன் தலைமையில் தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் அவர்கள் கொடியை ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கி மேலும் நாகனூர் கிராமத்தில் சுமார் 100 க்கும் மேற்பட்ட ஏழை எளிய பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந் நிகழ்ச்சியில் தொகுதி பார்வையாளர் தமிழ்மாறன், மாவட்ட துணைச் செயலாளர் இராஜகுமாரி, பொருளாளர் முருகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம், மத்திய ஒன்றிய செயலாளர் முனியப்பன், மாரண்டஅள்ளி பேரூராட்சி தலைவர் வெங்கடேசன் ,ஒன்றிய நிர்வாகிகள் முருகன், அண்ணாமலை,துரை,முத்துராஜ், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ரவி,துணை அமைப்பாளர் குமார், தொண்டரணி குமார், கவுன்சிலர் ராஜா,ஊராட்சி மன்ற தலைவர்கள் குட்டி,ஆனந்தன், முருகன், ஐ.டி.விங் ஆனந்தன்,ஆதம்,சண்முகம், மற்றும் பாம்பே சக்தி,புதூர் பழனிச்சாமி,விக்கி,ஜோதிவேல்,தளபதி, கண்ணன் ,சந்துரு, உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.நாகனுர் கிராமத்தில் 100 க்கும் மேற்பட்டோருக்கு மாவட்ட கழக செயலாளர் பழனியப்பன் அவர்கள் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு பாஜகவின் 44-ம் ஆண்டு துவக்க விழா கொண்டாட்டம் நடைபெற்றது
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு பாஜக 44ம் ஆண்டு துவக்க விழா நகர மண்டல தலைவர் வேலு தலைமையில் நடைப்பெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட மகளிர் அணி தலைவி சங்கிதா கலந்து கொண்டார். மேலும் 1980ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பாரதிய ஜனதா கட்சி தற்போது தனது நாற்பத்தி மூன்றாம் ஆண்டு நிறைவு பெற்று 44ம் ஆண்டு அடியெடுத்து வைக்கிறது. கடந்த நாற்பத்தி மூன்று ஆண்டுகளில் தனது பணிகளால் நாட்டு மக்களின் ஆதரவைப் பெற்று பேரியக்கமாக மாறி உலகின் பெரிய ஜனநாயக கட்சியாகச் செயல்பட்டு வருகிறது. இந்தியா தொன்மையும் சாதனைகளும் நிறையப் பெற்று உலகின் முதன்மை நாடாக விளங்கி வந்த பெருமைக்குரியது.நாடு முழுவதும் கட்டமைப்புகள் புதியதாக உருவாக்கப்பட்டும், வேகமாக மேம்படுத்தப்பட்டும் வருகின்றன. நாட்டுக்கு ஆதரமாக விளங்கும் விவசாயம் மற்றும் குறு, சிறு, நடுத்தரத் தொழில்களுக்கு சிறப்புத் திட்டங்கள் தீட்டப்பட்டு அவை நல்ல வளர்ச்சியைக் கண்டு வருகின்றன. நாட்டின் ஒவ்வொரு துறைகளுக்கும் கவனம் கொடுக்கப்பட்டு அவற்றை மேம்படுத்தும் திட்டங்களை செயல்படுத்தி வருவதாக தெரிவித்தனர். இதையாடுத்து கட்சி கொடி ஏற்றிய பின்பு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் நகர பொதுச்செயலாளர் பெருமாள், நகர செயலாளர் தமிழ், வேடியப்பன், சுரேஷ்பாபு, ரமேஷ், வர்மா,வேந்தன் உள்ளிட்ட திரளான கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
ஊத்தங்கரையை அடுத்த சாமல்பட்டியில் ரயில் மறியலில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற காங்கிரஸ் கட்சியினரை சாமல்பட்டி போலீசார் கைது செய்தனர்.
சாமல்பட்டியில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற காங்கிரஸ் கட்சியினர் 50 க்கும் மேற்பட்டோர் கைது.
ஊத்தங்கரை, மார்ச் . 29: ஊத்தங்கரை அடுத்த சாமல்பட்டி ரயில் நிலையத்தில், ராகுல்காந்தி எம்பி பதவியை டிஸ்மிஸ் செய்ததை கண்டித்து, ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற காங்கிரஸ் நிர்வாகிகள் 50 க்கும் மேற்பட்டோரை சாமல்பட்டி போலீஸôர் புதன்கிழமை கைது செய்தனர்.
போராட்டத்திற்க்கு காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளர் ஜெ.எஸ். ஆறுமுகம் தலைமை வகித்தார். சாமல்பட்டி ரயில் நிலையத்தில் புதன்கிழமை காலை சுமார் 9.50 மணிக்கு வரக்கூடிய இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே போலீஸôர் மற்றும் ஊத்தங்கரை வட்டாட்சியர் திருமலைராஜன், ஊத்தங்கரை காவல் துணை கண்காணிப்பாளர் அ.அமல அட்வின் தலைமையில் 50 க்கும், மேற்பட்ட போலீஸôர், ரயில் மறியலில் ஈடுபட முயன்ற காங்கிரஸ் கட்சியினரை, தடுத்து நிறுத்தி குண்டுகட்டாக தூக்கி சென்று கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். இதில் வட்டாரத் தலைவர்கள் திருமால், ரவிச்சந்திரன், நகர தலைவர் விஜயகுமார், மத்தூர் வட்டார தலைவர் மின்டிகிரி ரவி, கிருஷ்ணகிரி நகர தலைவர் லிலித் ஆண்டனி, முன்னாள் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் முத்து, வட்டார துணைத் தலைவர்கள் சுப்பிரமணி, முருகேசன்,துணைத் தலைவர் விவேகானந்தன், சமூக ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவர் கமலக்கண்ணன், சிங்காரப்பேட்டை ஊராட்சி மன்ற தலைவர் அகமத்பாஷா மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் தேவராஜன், சொக்கலிங்கம், இளையராஜா, கோவிந்தசாமி, மகி, அண்ணாதுரை, சபாபதி உள்பட காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளர் ஜெ.எஸ். ஆறுமுகம் செய்தியாளர்களிடம் கூறும்போது.
மோடி தலைமையிலான ஆட்சி ஜனநாயக படுகொலை மற்றும் சர்வதிகார ஆட்சி நடந்து வருகிறது. அரசியல்வாதிகளின் குரல்வலையை நசுக்குகிறது. இவ்வாறு அடக்குமுறை தொடர்ந்தால், காங்கிரஸ் கட்சியின் சார்பில், நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்பதை எச்சரிக்கையுடன் தெரிவித்தார்.
வேப்பனப்பள்ளி தொகுதி சூளகிரி ஒன்றியம் குண்டுகுறிக்கி கிராமத்தில் தனியார் நிறுவனம் சார்பாக 200 மரக்கன்றுகளை சூளகிரி சேர்மென் லாவண்யா ஹேம்நாத் வைத்து தண்ணீர் ஊற்றினார்
வேப்பனஹள்ளி தொகுதி சூளகிரி ஒன்றியத்திற்குட்பட்ட குண்டுகுறுக்கி கிராமம் அருகேயுள்ள குட்டையில் சூளகிரி ஒன்றிய சேர்மென்
திருமதி லாவண்யா
ஹேம்நாத்
அவர்களின்
தலைமையில்
TOYOTA BOSHOKU Automotive Private Limited நிறுவனத்தின் சார்பாக
200 மரக் கன்றுகளை வைத்தார். பின்னர் Toyota நிறுவனதிற்குள்
சென்று எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது என்று ஊழியர்களிடம் கேட்டுதெரிந்து கொண்டனர்.
இந்நிகழ்வில்-
வட்டார வளர்சி அலுவலர்-
விமல் ரவிகுமார்,
ஊராட்சி மன்ற தலைவர்-
திருமதி.கோபம்மா சக்கார்லப்பா,
TOYOTA நிறுவன மேலாளர் சதிஷ்,
HR.மேலாளர் குமார்,
Asst HR பிரபாகரன்,
மற்றும் ஊழியர்கள், தாஜ்,
Cleark ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என ஹை கோர்ட் தீர்ப்பு வழங்கியதை அடுத்து காரியமங்கலத்தில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என ஹை கோர்ட் தீர்ப்பு வழங்கியதை அடுத்து அதிமுகவினர் பட்டாசு வெடித்துபொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி உற்சாகம் தெரிவித்தனர். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என சென்னை ஹைகோர்ட் நேற்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து காரிமங்கலம் ராமசாமி கோவில், எம்ஜிஆர் சிலை அருகே ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் தலைமையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் காவேரி, கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குனர் ரவிசங்கர், நகர செயலாளர் காந்தி, அவைத் தலைவர் மகாலிங்கம் பஞ்சாயத்து தலைவர்கள் சாந்தி சம்பத், நந்தினி பிரியா செந்தில் குமார், ராதிகா காசிராஜன், கவிதா நாகராஜ் ஒன்றிய கவுன்சிலர்கள் காவேரி அம்மாள் மாணிக்கம், கணபதி, மாது, அண்ணா தொழிற்சங்க மண்டல தலைவர் சிவம், கூட்டுறவு சங்க தலைவர் சந்திரன், வழக்கறிஞர் பாரதி, நகர அவைத் தலைவர் உதயசங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சி துப்புரவு பணியாளர்களின் பிள்ளைகள் ஹாக்கி போட்டியில் தென்னிந்திய அளவில் சாதனை.
பாலக்கோடு பேரூராட்சி துப்புரவு பணியாளர்களின் பிள்ளைகள் ஹாக்கி போட்டியில் தென்னிந்திய அளவில் சாதனை.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சியில் துப்புரவு பணியாளர்கள் முருகன் மற்றும் மங்கா, ஆகியோரின் பிள்ளைகள் சீனிவாசன் (18) கனிமொழி (17) ஆகியோர்’ கடந்த 20ம் தேதி முதல் 26ம் தேதி வரை இராமநாதபுரத்தில் நடைப்பெற்ற தென்னிந்திய அளவிலான ஜூனியர் ஹாக்கி போட்டியில் தமிழகஅணி வெற்றி பெற்று முதலிடம் பிடித்தது,
இதில் ஆடவர் அணியில் சீனிவாசன் கேப்டனாக சிறப்பாக விளையாடி தமிழக அணிக்கு தங்கப் பதக்கம் பெற்று தந்தார்.
அதே போன்று மகளிர் பிரிவில் கனிமொழி அணி வெள்ளி பதக்கம் பெற்றது.
இவர்களை பாராட்டும் விதமாக பாலக்கோடு பேரூராட்சி சார்பாக பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் பி.கே.முரளி சீனிவாசன், கனிமொழி மற்றும் இவர்களின் பெற்றோர்களுக்கு நினைவு பரிசு மற்றும் கேடயம் வழங்கி பாராட்டி கெளரவித்தார்.
இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் திருமதி.டார்த்தி, துப்புரவு மேற்பார்வையாளர் ரவீந்திரன், உடற்கல்வி ஆசிரியர் ரங்கநாதன், பேரூராட்சி துணைத் தலைவர் தாஹசீனா இதயத்துல்லா, கவுன்சிலர்கள் சரவணன், பெரியசாமி, ரூஹித், பத்தேகான், சாதிக் மற்றும் துப்புரவு பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டு பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
இன்று உயர் நீதிமன்ற தீர்ப்பை அடுத்து அஇஅதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி கே.பழனிச்சாமி. துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்
இன்று பொதுக்குழுவை பற்றி வெற்றி தீர்ப்பு வந்த பின்பு எடப்பாடி கே.பழனிச்சாமி அஇஅதிமுக பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டதையடுத்து துணை பொதுச்செயலாளர் கேபி முனுசாமி எம்எல்ஏ பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைமை கழகத்தில் நேற்று விழாக்கோலம் பூண்டிருந்தது