ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை சார்பாக ரூ.7 கோடியே 13 இலட்சத்து 5 ஆயிரம் மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம்.சரயு இ.ஆ.ப., அவர்கள் இன்று (25.05.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டவெங்கடதாம்பட்டி, ஊத்தங்கரை பேரூராட்சி, சிங்காரப்பேட்டை, மிட்டப்பள்ளி ஆகிய ஊராட்சிகளில் ஊரசு வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை சார்பாக ரூ.7 கோடியே 13 இலட்சத்து 5 ஆயிரம் மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம்.சரயு இ.ஆ.ப., அவர்கள் இன்று (25.05.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வெங்கடாதாம்பட்டி ஊராட்சியில், பாரத பிரதமர் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் (2021-2022) ஊத்தங்கரை முதல் பெருமாள்குப்பம் வரை சுமார் 6 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.2 கோடியே 79 இலட்சத்து 66 ஆயிரம் மதிப்பில் தார்சாலை அமைக்கும் பணி, அச்சாலையின் குறுக்கே 6 கல்வெட்டுகள் அமைக்கும் பணிகள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், தனிநபர் நிலத்தில் ரூ.2 இலட்சம் மதிப்பில் மணவரப்பு அமைக்கும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.தொடர்ந்து, ஊத்தங்கரை பேரூராட்சியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்தில் குழந்தைநேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் (2022-2023) ரூ.44 இலட்சம் மதிப்பில் 3 வகுப்பறைகள் கட்டிட கட்டுமான பணிகளை பார்வையிட்டு, கட்டுமான பணிகளுக்கு தேவையான செங்கல், கம்பி, சிமெண்ட் உள்ளிட்ட பொருட்களின் தரத்தினை ஆய்வு மேற்கொண்டார்.பாம்பாறு அணை வளாகத்தில் உள்ள இலங்கை வாழ் தமிழர் குடியிருப்பு வளாகத்தில் இலங்கை வாழ் தமிழர்களுக்காக ரூ.1 கோடியே 87 இலட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டு வரும் 37 வீடுகளின் கட்டுமான பணிகளையும், இக்குடியிருப்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.63 இலட்சம் மதிப்பில் கூடுதல் வசதிகளாக தெரு விளக்கு, குடிநீர் இணைப்பு, கழிவுநீர் கால்வாய், சிமெண்ட் சாலைகள் அமைக்கப்பட்டு வரும் பணிகளையும், இதர அடிப்படை வசதிகளுக்காக ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ.23 இலட்சம் மதிப்பில் கூடுதல் கட்டுமான பணிகள் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கும் பணிகளை பார்வையிட்டார்.அதனைத்தொடர்ந்து, மிட்டப்பள்ளி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் (2021-2022) 95 மீட்டர் நீளத்திற்கு ரூ.8 இலட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் சிமெண்ட் சாலை மற்றும் கழிவு நீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ள பணிகளையும், மழைநீரை சேகரிக்கும் பொருட்டு அமட்டன்குட்டையில் ரூ.8 இலட்சத்து 21 ஆயிரம் மதிப்பில் தூர்வாரும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, மழைக்காலத்திற்கு முன்பாக குட்டை தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.மேலும், சிங்காரப்பேட்டை ஊராட்சி, ஆவாரங்குட்டையில் மலைவாழ் மக்களுக்கு வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் தலா ரூ.3 இலட்சம் வீதம் 16 இருளர் இன மக்களுக்கு ரூ.48 இலட்சம் மதிப்பில் வீடுகள் கட்டுமான பணிகளையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.12 இலட்சத்து 10 ஆயிரம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டு வரும் அங்கள்வாடி மைய கட்டிட கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.தொடர்ந்து, நார்சாம்பட்டி ஊராட்சியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்திற்காக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.7 இலட்சத்து 43 ஆயிரம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டு வரும் சமயலறை கட்டிட கட்டுமான பணிகளையும், சிங்காரப்பேட்டை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்தில் குழந்தைநேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் (2022-2023) ரூ.30 இலட்சத்து 45 ஆயிரம் மதிப்பில் கூடுதலாக இரண்டு வகுப்பறை கட்டிடங்களின் கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பள்ளிகள் துவங்க உள்ள நிலையில் மாணவர்களின் வசதிக்காக கட்டுமான பணிகள் விரைந்து முடிக்க வேண்டும்.ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் சாலைப்பணிகளை மழைக்காலம் துவங்குவதற்கு முன்பாக முடித்திட வேண்டும். பொதுமக்களுக்கு தடையில்லா குடிநீர் வழங்கும் பணிகளை உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம்.சரயு இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்,முன்னதாக, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றிய அலுவலத்தை ஆய்வு மேற்கொண்டு, பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்தும், மேற்கொண்டு செயல்படுத்தப்பட வேண்டிய அடிப்படை கட்டமைப்பு பணிகள் குறித்து, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய குழு தலைவர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் கேட்டறிந்தார்.இந்த ஆய்வுகளின்போது, ஒன்றிய குழு தலைவர் திருமதி.உஷா குமரேசன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் திரு.ரஜினிசெல்வம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.வேடியப்பன், திரு.சிவபிரகாசம், ஒன்றிய பொறியாளர் திரு.மாதையன், ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள் திரு.இலட்சுமணன், திரு.மகாராஜா, திரு.முருகன், திரு.கண்ணன், ஊராட்சி மன்ற தலைவர்கள் திருமதி.சத்யவாணி ராஜா (கொண்டம்பட்டி), திருமதி.சின்னதாயி (மிட்டப்பள்ளி) மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Current News
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனைத்து துறைகள் சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம்
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், அனைத்து துறைகள் சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம்.சரயு இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் இன்று (25.05.2023) நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.செ.ராஜேஸ்வரி, கூடுதல் ஆட்சியர் திருமதி.வந்தனா கார்க் இ.ஆ.ப. மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (பொது) திரு.கோ.வேடியப்பன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் உள்ளனர்.
தமிழகத்தில் நுழைந்து போச்சம்பள்ளி அருகே இரு வேறு இடங்களில் பால் கொள்முதல் நிலையத்தை அமைத்த அமுல் – ஆவின் நிறுவனத்தை பாதிக்குமா?
தமிழகத்தில் நுழைந்து போச்சம்பள்ளி அருகே இரு வேறு இடங்களில் பால் கொள்முதல் நிலையத்தை அமைத்த அமுல் – ஆவின் நிறுவனத்தை பாதிக்குமா?தமிழகத்தில் முதல்முறையாக கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள தட்டக்கல் கிராமத்தில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு குஜராத் மாநிலத்தை தலைமையிடமாக கொண்டுள்ள அமுல் பால் நிறுவனம் தனது பால் கொள்முதல் நிலையத்தை துவங்கியுள்ளது. அதேபோல் போச்சம்பள்ளி அருகே தாதம்பட்டி கிராமத்திலும் பால் கொள்முதல் நிலையத்தை துவக்கியுள்ளது. துவக்கப்பட்ட 15 நாட்களில் தாதம்பட்டி கிராமத்தில் உள்ள கொள்முதல் நிலையத்தில் நாளொன்றுக்கு 5000 லிட்டர் பாலும், தட்டக்கல் கிராமத்தில் உள்ள கொள்முதல் நிலையத்தில் 2000 லிட்டர் பாலும் கொள்முதல் செய்யப்படுவதால், ஆவின் நிறுவனத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துமா என்கிற அச்சம் எழுந்துள்ளது. ஆவின் நிறுவனத்தைவிட லிட்டர் ஒன்றுக்கு கூடுதலாக ரூ.1 முதல் ரூ.2 வரை அதிகம் விலை கொடுப்பதாக விவசாயிகள் அமுல் நிறுவனத்திற்கு அதிக அளவு பால் கொடுத்து வருகின்றனர். இங்கிருந்து பெறப்படும் பால் ஆந்திர மாநிலத்திற்கு அனுப்பப்படுகிறது. இதேபோல் தமிழகத்தின் அனைத்து இடங்களிலும், அமுல் நிறுவனம் துவக்கப்பட்டால் ஆவின் நிறுவனத்தை பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தும் என சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.இதுகுறித்து தட்டக்கல் கிராமத்தை சேர்ந்த சமூக ஆர்வலரும் விவசாயியுமான சிவகுரு தெரிவிக்கையில், வெளி மாநில வியாபாரிகள் தமிழகத்திற்குள் கால் பதித்து லிட்டருக்கு கூடுதல் ₹2 ரூபாய் கொடுப்பதால் விவசாயிகள் அவர்களிடம் பால் கொடுத்து வருகின்றனர். இதனால் ஆவின் நிறுவனத்திற்கு பால் கொள்முதல் படிப்படியாக குறைந்து, நாளடையில் செயல்படாமல் போகும் வாய்ப்பு உள்ளது. தமிழக அரசும், பால்வளத்துறை அமைச்சரும் அமுல் நிறுவனத்தை தமிழகத்திற்குள் நுழைய எப்படி அனுமதித்தனர். அமுல் நிறுவனம் கூடுதலாக லிட்டருக்கு ரூ.2 வரை கொடுக்கும்போது, ஆவின் நிறுவனத்தால் ஏன் கொடுக்க முடியவில்லை. மேலும் வரும் நாட்களில் அமுல் நிறுவனம் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் கொள்முதல் நிலையம் அமைக்க திட்டமிட்டுள்ளது. அதற்குள்ளாக தமிழக அரசு விழித்துக்கொள்ள வேண்டுமென கூறினார்.இதுகுறித்து தமிழ்நாடு அமுல் நிறுவன தலைமை அதிகாரி மணிவேல் அவர்களிடம் கேட்டபோது, ஆவின் நிறுவன விலையை ஒத்தே அமுல் நிறுவன பால் விலையும் இருக்கும் என்பதால் ஆவின் நிறுவனத்திற்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என தெரிவித்தார்.
அகரம் ஸ்ரீ பெரியாண்டவர் கோவிலின் உண்டியலை உடைத்து ரொக்கம் ரூ.20,000/- கொள்ளை
அகரம் ஸ்ரீ பெரியாண்டவர் கோவிலின் உண்டியலை உடைத்து ரொக்கம் ரூ.20,000/- கொள்ளை கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த அகரம் கிராமத்தில் அமையப்பெற்றுள்ள ஸ்ரீ பெரியாண்டவர் கோவிலின் உண்டியலை உடைத்து ரொக்கம் ரூ.20,000/- கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. அகரம் மற்றும் 6 கிராமங்களை சேர்ந்த ஒரு குல மக்களின் குலதெய்வமாக வழிபட்டும் வரும் இக்கோவிலில் வாரம்தோரும் வெள்ளிக்கிழமை பூஜைகள் செய்வது வழக்கம். அகரம் கிராமத்திலிருந்து தனியாக அமையப்பெற்றுள்ள இக்கோவிலின் உண்டியலை கொக்கி உதவியுடன் கிரில் கேட்டு வரை இழுத்து உண்டியலை மட்டும் உடைத்து அதிலிருந்த ரூபாய் நோட்டுக்களை மட்டும் எடுத்துக்கொண்டு, சில்லரைகளை விட்டு சென்றுள்ளனர். கடந்த மூன்று மாதங்களாக உள்ள உண்டியல் பணம் தோராயமாக ரூ.20,000/- ரொக்க பணத்தை கொள்ளையர்கள் எடுத்து சென்றுள்ளதாக பூசாரி பெரியண்ணன் தெரிவித்தார். இக்கொள்ளை சம்பவம் குறித்து நாகரசம்பட்டி போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள அரசு விளையாட்டு மைதானத்தில் யூத் ஸ்போர்ட்ஸ் அகாடமி மற்றும் பேரொளி சிலம்பம் இணைந்து நடத்திய கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம்
கோடைக்கால சிறப்பு விளையாட்டு முகாம் நிறைவு விழாகிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள அரசு விளையாட்டு மைதானத்தில் யூத் ஸ்போர்ட்ஸ் அகாடமி மற்றும் பேரொளி சிலம்பம் இணைந்து நடத்திய கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு விழா நடைபெற்றது.கடந்த 10.05.2023 முதல் 24.05.2023 வரை நடைபெற்ற கோடைகால விளையாட்டு பயிற்சி முகாமில் கூடைப்பந்து, சிலம்பம் மற்றும் கால்பந்து போன்ற விளையாட்டுகள் முறையாக பயிற்றுவிக்கப்பட்டது. இந்த பயிற்சி முகாமில் அளிக்கப்பட்ட பயிற்சிகள் குறைந்தது 6 மாத கால பயிற்சி முறைகளை காலை 2 மணி நேரமும், மாலை 2 மணி நேரமும் இந்த 15 நாட்கள் மாணவர்களுக்கு அனுபவமிக்க பயிற்சியாளர்களை கொண்டு சிறப்பாக பயிற்றுவிக்கப்பட்டது. ஒவ்வொரு மாணவர்களும் பயிற்சிகளை சிறப்பாகவும் முறையாகவும் கற்றுக்கொண்டனர். எதிர்வரும் நாட்களில் அரசு சார்பில் ஏதேனும் போட்டிகள் நடைபெற்றால் அதில் பங்குபெறும் அளவிற்கு சில மாணவர்கள் சிறப்பாக ஈடுபாட்டுடன் பயின்றனர். மேலும் இந்த பயற்சிகளை இத்துடன் நிறுத்திவிடாமல் தொடர்ந்து பயிற்சி எடுக்கவும், விளையாட்டுகள் முறையாக கற்றுக்கொள்வதினால் அவர்களின் எதிர்காலத்திற்கு என்ன பயன் என்றும் மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. 6 மாத கால பயிற்சியை இந்த குறுகிய காலத்தில் இத்தனை சிறப்புடனும், கடுமையான உழைப்புடன் கற்றுதேர்ந்த மாணவ, மாணவிகளை பாராட்டும் வகையில் அவர்களுக்கு பாராட்டு விழா மற்றும் சான்றிதழ் அளிக்கும் விழா நடைபெற்றது. மாணவர்களை மேலும் ஊக்குவிக்க கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இவர்களுக்கு சான்றிதழ் வழங்கியது இதில் மேலும் சிறப்பு.நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளர்களாக கெரிகேப்பள்ளி தலைமையாசிரியர் வீரமணி, செ.நாச்சிப்பட்டு தலைமையாசிரியர் சேகர், இணை இயக்குநர் (ஓய்வு) குப்புசாமி, ஸ்டேட் வங்கி மேலாளர் ராஜகுமாரன், முன்னாள் மாநில கபடி வீரர் கண்ணன், விளையாட்டு மைதான பொறுப்பாளர் அந்தோணி ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை கூடைபந்து பயிற்சியாளரும் தீயணைப்பு வீரருமான முனுசாமி அவர்கள் வரவேற்புரை வழங்கி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் எம்.எஸ்.எம். அகாடமி சுரேஷ், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர். விழாவில் சிறப்பு விருந்தினர்கள் பேசுகையில் விளையாட்டு பயிற்சி எடுத்துக்கொண்டால் மேற்படிப்பு, வேலைவாய்ப்பு போன்றவற்றையின் முன்னுரிமை குறித்து பேசினர். மேலும் சென்ற ஆண்டு முதல் கூடைப்பந்து பயிற்சி எடுத்துவரும் செந்தில், அஜய், ஹர்ஜீத் ஆகியோர்கள் அந்த பயிற்சியினால் இந்த ஆண்டு விளையாட்டு பள்ளியில் படிக்க இடம்பெற்றுள்ளனர். அவர்களை அனைவரும் பாராட்டினார். மேலும் கபடி பயிற்சி அளித்து காவல்துறை பணியில் சேர இருக்கும் அஜித் அவர்களுக்கு பாராட்டு செய்யப்பட்டது. நிகழ்ச்சியின் இறுதியாக 60 மாணவ-மாணவிகளுக்கும், மேலும் எம்.எஸ்.எம். அகாடமி கபடி மாணவர்களுக்கும் பதக்கங்கள் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாபமாக சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. சிலம்பம் ஆசிரியர் சதாசிவம் பயிற்சி முகாமில் பயிற்சிபெற்ற மாணவர்களை கொண்டு சிறப்பான சிலம்ப நிகழ்ச்சியினை நிகழ்த்தி காட்டினார்கள். சிலம்பம் பயிற்சியாளரும் தீயணைப்பு வீரருமான முனுசாமி, நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை யூத் ஸ்போர்ட்ஸ் அகாடமி உறுப்பினர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
கிருஷ்ணகிரி அருகே வரட்டனப்பள்ளியில் பொதுமக்கள் சுடுகாட்டு வழி பிரச்சினை முன்னிட்டு சாலையில் அமர்ந்து தர்ணாப் பேராட்டம்
கிருஷ்ணகிரி அருகே வரட்டனப்பள்ளியில் பொதுமக்கள் காலம் காலமாக சுடுகாட்டுக்கு பயன்படுத்தி வந்த பொதுவழிப் பாதையை ஊராட்சி மன்றத் தலைவர் முள்வேலி கொண்டு அடைக்க கல்தூண்கள் நடப்பட்டதால் கிராம மக்கள் சாலையில் அமர்ந்து தர்ணாப் பேராட்டத்தில் ஈடுப்பட்டதால் பரப்பரப்பு ஏற்பட்டது.கிருஷ்ணகிரி அருகே உள்ள வரட்டனப்பள்ளி பகுதியை சேர்ந்தபொதுமக்களுக்கு சொந்தமான சுடுகாடுபனம்போப்பு என்ற இடத்தில் உள்ளது.இந்த சுடுகாட்டிற்கு செல்ல அப்பகுதியை சேர்ந்த மக்கள் இந்தப்பொதுவழிப்பாதையை பயன்படுத்தி வந்துள்ளனர்.இந்த நிலையில் பொதுமக்கள் கடந்த பல தலைமுறையாக பயன்படுத்தி வந்தபொதுவழிப்பாதையை ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி மகாலட்சுமி என்பவர் தனக்கு சொந்தமான நிலம் இதனை யாருக்கும் விட்டு கொடுக்க மாட்டேன் என பொது வழிப்பாதையில் கம்பி வேலிகளை இரவோடு இரவாக அமைத்துள்ளதை கண்ட அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட பெண்களும் ,ஆண்களும், ஒன்றுசேர்ந்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள் இடத்தில் தர்ணாப் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.இந்த சம்பவம் குறித்து தகவல் அறித்த காவல்துறையினர் ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி மகாலட்சுமி மற்றும் கிராம மக்களிடம் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டனர்.அப்போது காலம் காலமாக அனைத்து மக்களும் பங்களிப்புடன் சென்று வரும் பொதுவழிப்பாதையை முள் வேலி கொண்டு அடைத்துள்ளதை அகற்ற வேண்டும் என காவல்துறையினர் ஊராட்சி மன்றத் தலைவரிடம் கேட்டுக்கொண்டனர்.பின்னர் இதற்கு ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி மகாலட்சுமி ஒப்புக்கொண்டதால் காவல்துறையினர் முன்னிலையில்முள் வேலிகள் அகற்றப்பட்டது.
செல்வி.கே.ஆர்.ஹரிணி இந்திய குடிமை பணித் தேர்வில் (ஐ.ஏ.எஸ்.) வெற்றி ! கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு, ஹரிணி இல்லத்திற்கு நேரில் சென்று பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், மத்துார் கருங்காலிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த செல்வி.கே.ஆர்.ஹரிணி அவர்கள் இந்திய குடிமை பணித் தேர்வில் (ஐ.ஏ.எஸ்.) வெற்றி பெற்றதையடுத்து, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம்.சரயு இ.ஆ,ப. அவர்கள் இன்று (25.05.2023) ஹரிணி அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
மகேந்திரமங்கலம் கிராமத்தில் கணவன் சந்தேகப்பட்டதால் காதல் மனைவி கைக்குழந்தையுடன் மாயம்.
மகேந்திரமங்கலம் கிராமத்தில் கணவன் சந்தேகப்பட்டதால் காதல் மனைவி கைக்குழந்தையுடன் மாயம்.தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மகேந்திரமங்கலம் கிராமத்தில் வசித்து வருபவர் சந்தோஷ் (வயது. 24) இவர் அதே பகுதியில் மளிகை கடைநடத்தி வருகிறார்இவர் கடந்த 2 வருடத்திற்க்கு முன்பு நல்லம்பள்ளி அருகே உள்ள சேசம்பட்டியை சேர்ந்த சுஜி (வயது.19) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு 1 வயதில் தர்னிஷ் என்ற ஆண் குழந்தை உள்ளது.இந்நிலையில் சுஜி அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். இதனால் சந்தேகப்பட்டு மனைவியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தவர் நேற்று மனைவி செல்போனில் பேசிக் கொன்டிருந்த போது செல்போனை பிடுங்கி பார்த்துள்ளார், அப்போது மனைவி அவரது அம்மாவிடம் பேசி கொண்டிருந்தது தெரிந்தது.கணவரின் இந்த செயலால் மணமுடைந்த மனைவி கைக்குழந்தையுடன் மாயமானார்..எங்கு தேடியும் கிடைக்காததால் மனைவி மற்றும் குழந்தையை கண்டுபிடித்து தர கணவர் மகேந்திரமங்கலம் போலீசில் புகார் அளித்துள்ளார்.இது குறித்து மகேந்திரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான தாயும், குழந்தையையும் தேடி வருகின்றனர்.
2023 ஆம் ஆண்டிற்கு தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ குமரருகு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் “அரூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில்’ பயிற்சியில் சேர 24.05.2023 முதல் 07.06.2023 வரை சேர்க்கை நடைபெற்று வருகிறது.
அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், அருர்.இளைஞர்களுக்கு பயனுள்ள வேலைவாய்ப்பு பெற்று தருவதற்கும் தொழிற்சாலைகளுக்கு ஏற்றவாறு இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி அளித்து வேலைவாய்ப்பு உருவாக்கிடவும், 2023 ஆம் ஆண்டிற்கு தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ குமரருகு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் அரூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சியில் சேர 24.05.2023 முதல் 07.06.2023 வரை சேர்க்கை நடைபெற்று வருகிறது.வயர்மேன் பிரிவிற்கு 8ஆம் வகுப்பிலும், ரெப்ரிஜிரேசன் & AC டெக்னீசியன், பிட்டர், மெக்கானிக் ஆட்டோபாடி ரிப்பேர் போன்ற பிரிவுகளுக்கு 10-ஆம் வகுப்பிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.நேரடி சேர்க்கைக்கு வரும்பொழுது : கைபேசி எண், மின்னஞ்சல் முகவரி பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ஆதார் அட்டை மாற்றுச்சான்றிதழ், சாதிச்சான்றிதழ் மற்றும் முன்னுரிமை இருப்பின் அதற்கான சான்றிதழ் ஆகியன அசல் சான்றிதழ்களுடன் கொண்டு வரவேண்டும். விண்ணப்ப கட்டணம் மற்றும் இதரக்கட்டணம் ரூ 245/- ஆகும் பயிற்சி கட்டணம் இல்லை.அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்ந்து பயிற்சி பெறும் மாணவர்களுக்கு இலவசமாக சைக்கிள், சீருடை. பாடநூல். வரைபட கருவி, காலணி, பஸ்பாஸ், மாதாந்திர உதவித் தொகை ரூ.750/- மற்றும் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் தகுதியுள்ளோர்க்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும். மேலும் பயிற்சி முடித்தபின் (Campus Interview) வளாகத் தேர்வு மூலம் முன்னனி நிறுவனங்களில் வேலைப் பெற்று பெற்று தரப்படும் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புடன் கூடிய பயிற்சியும் வழங்கப்படும்.மேலும் விவரங்களுக்கு ஸ்ரீ குமரகுரு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் இயங்கி வரும் அரூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தின் முதல்வரை நேரிலோ அல்லது 9443470656, 7548844547 மற்றும் 9488853102 ஆகிய கைபேசி மூலமாகவோ தொடர்பு கொண்டு விவரங்களை தெரிந்துக்கொள்ளலாம்.இவ்வாறு தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
கட்சியினர் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களுக்கு தே.மதியழகன் MLA வாழ்த்து தெரிவித்தார்
நேற்று 25.05.2023 கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பகுதிகளில் நடைபெற்ற கழக இல்ல கோவில், திருமண விழாக்களில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர், பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான தே.மதியழகன் MLA அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.