பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மறைந்த வன்னியர் சங்க தலைவருமான மாவீரன் ஜெ.குரு அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, தருமபுரி மாவட்ட வன்னியர் சங்கம் சார்பில், தருமபுரி மாவட்ட வன்னியர் சங்க அலுவலகத்தில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் தலைமையில் அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் இ.மா.பாலகிருஷ்ணன், அனைவரையும் வரவேற்றார்.முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கி.பாரிமோகன், பாமக மாநில துணை தலைவர் பெ.சாந்தமூர்த்தி, வன்னியர் சங்க மாவட்ட தலைவர் மு.பாலாஜி, வன்னியர் சங்க கிழக்கு மாவட்ட செயலாளர் பெ. சேட்டு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில், தேர்தல் பணிக்குழு மாவட்ட தலைவர் வாசுநாயுடு, அன்புமணி தம்பிகள் படை மாவட்ட செயலர் கார்த்திகேயன், தருமபுரி நகர செயலாளர் கி.வெங்கடேசன், முன்னாள் நகர செயலாளர்கள் செல்வராஜ், கணேசன் மற்றும் ஹரிகிருஷ்ணன், கனல் சிவா உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்
Current News
ஐஏஎஸ் மாணவி ஹரினியை வாழ்த்திய அஇஅதிமுக இன்னாள் முன்னாள் எம்எல்ஏ எம்பி
ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி மத்தூர் ஒன்றியம் கருங்காலிப்பட்டி பகுதியை சேர்ந்த ஹரிணி சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றார். ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் T.M. தமிழ்செல்வம் MLA, பர்கூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் C.V. ராஜேந்திரன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் C.பெருமாள் ExMP, முன்னாள் மாவட்ட கழக செயலாளர் தென்னரசு மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
காவேரிப்பட்டினம் அருகே போலி பத்திரப் பதிவு செய்து சொத்தை அபகரித்து விட்டதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மூதாட்டி புகார் மனு அளித்து பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார்.
காவேரிப்பட்டினம் அருகே போலி பத்திரப் பதிவு செய்து சொத்தை அபகரித்து விட்டதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மூதாட்டி புகார் மனு அளித்து பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார்.காவேரிப்பட்டினம் அருகே மிட்டஅள்ளிச் சேர்ந்தவர் கலா வயது 71 இவர் தன் குடும்பத்தினருடன் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளார்.என் தந்தை வாசுதேவன் பெயரில் மிட்டஹள்ளியில் 71 செண்ட் நிலம் உள்ளது அவரது மறைவிற்குப் பிறகு நான் உட்பட ஐந்து சகோதரிகள் மற்றும் தம்பி அப்புசாமி என்கின்ற குமரேசன் ஆகியோர் இதில் சுவாதினம் செய்து வந்த நிலையில் எனது தம்பி குமரேசன் இறந்து விட்டார் அவரது மனைவி இந்திரா எங்கள் சொத்துக்களை தன் பெயரில் போலியாக வாரிசு சான்றிதழ் வாங்கி உள்ளார் இது குறித்து நாங்கள் விளக்க நோட்டீஸ் அனுப்பி உள்ள நிலையில் மிட்ட அள்ளிச் சேர்ந்த தசரா என்பவருக்கு தன்னிச்சையாக நிலத்தை விற்றுள்ளார். வாரிசு சான்றிதழ் முறைகேடாக வாங்கி போலியாக அடுத்தவருக்கு பத்திர பதிவு செய்துள்ளார். எனவே அவரது பத்திர பதிவு மற்றும் பட்டா ஆகிவிட்டது ரத்து செய்து. உரிய விசாரனை நடத்திட வேண்டும் எனவும், தற்போது அந்த 71 சென்டில்வீடு கட்டி வந்தோம் அந்த வீட்டினை இரவு திடீரென மர்ம மனிதர்கள் இடித்து உள்ளனர் எங்களுக்கு எங்கள் நிலத்தை மீட்டி தர வேண்டும் எனவும் எங்களுக்கு உயிருக்கு பாதுகாப்பு வேண்டிய கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் வயதான மூதாட்டி கலா புகார் மனு அளித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கள்ளச்சாராய ஒழிப்புமற்றும் தீவிர அமலாக்கப்பணிகள் மேற்கொள்வதுதொடர்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம்.சரயு தலைமையில் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கள்ளச்சாராய ஒழிப்பு மற்றும் தீவிர அமலாக்கப் பணிகள் மேற்கொள்வது தொடர்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம்.சரயு இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் (24.05.2023) அன்று நடைபெற்றது.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் கள்ளச்சாராயம் குறித்த தகவல்களை 6374000754 என்ற துணை காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு கள்ளத்தனமாக சாராயம் விற்பனை செய்வது மற்றும் தயாரித்த நபர்களின் விவரம் குறித்து தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம்.சரயு இ.ஆ.ப., அவர்கள் தகவல்.கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கள்ளச்சாராய ஒழிப்பு மற்றும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளுதல் மற்றும் ஒருங்கிணைந்து அமலாக்கப் பணிகள் மேற்கொள்வது தொடர்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம்.சரயு இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் 24.05.2023 அன்று நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சரோஜ் குமார் தாகூர் இகாப அவர்கள் முன்னிலை வகித்தார்.மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம்.சரயு இ.ஆ.ப., அவர்கள்தெரிவித்ததாவது:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் (ID Arrack), ஊறல் (Fermented Wash), இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மது (IMFL), உதிரி விற்பனை மது (Loose Sale), அனுமதி பெறாத மதுபானக்கூடம் (Illegal Bars) ஆகிய 5 இனங்களின்மீது கவனம் செலுத்தி கள்ளச்சாராயத்தை தடுக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.மாவட்ட மேலாளர் (டாஸ்மாக்) அவர்கள் டாஸ்மாக் கடைகள் திறக்கும் நேரம் மற்றும் மூடும் நேரம் ஆகியவற்றை சரியாக பின்பற்ற வேண்டும். டாஸ்மாக் கடைகளுக்கு அருகில் ஏதேனும் அனுமதியற்ற மதுபானக்கூடம் செயல்படுகிறதா அல்லது திறந்தவெளியில் மதுப்பிரியர்கள் மதுகுடிக்கிறார்களா என்பதை கண்காணித்து அவற்றிற்கு அனுமதிக்கக் கூடாது. டாஸ்மாக் கடைகளில் ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு அரசின் வழிகாட்டுதலை மீறி விற்பனை செய்ய அனுமதிக்க கூடாது. இத்தகவலை அனைத்து டாஸ்மாக் கடை விற்பனையாளர்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள் ஆகியோருக்கு ஆய்வுக்கூட்டம் நடத்தி தெளிவான அறிவுரை வழங்கிட வேண்டும்.ஒரு டாஸ்மாக் கடைக்கும் மற்றொரு கடைக்கும் இருக்கும் அதிகபட்ச தூரம் உள்ள கடைகளை கண்டறிந்து அதுபோன்ற இரண்டு கடைகளுக்கு இடையில் புதியதாக ஒரு கடையை அமைக்க சாத்தியக்கூறுகள் உள்ளதா என்பதை மாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கை அனுப்ப வேண்டும். தாபா ஓட்டல்களில் மதுபான விற்பனை மற்றம் மதுக்கூடங்கள் செயல்பட வாய்ப்புகள் அதிகம் என்பதால்கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தாபா ஓட்டல்களின் விபரபட்டியலை காவல் துணை கண்காணிப்பாளர் (கலால்), கிருஷ்ணகிரி அவர்களிடம் வழங்கிட வேண்டும்.கிருஷ்ணகிரி மவாட்டத்தில் செயல்பட்டு வரும் 119 டாஸ்மாக் கடைகளில் விற்பனை விபரத்தை சேகரித்து குறைவான விற்பனைப் பகுதிகளில் அந்தந்த பகுதி விற்பளை மேற்பார்வையாளர் மூலம் விபரம் சேகரித்து கள்ளச்சாராயம் புழக்கத்தில் உள்ளதா என்பதை உறுதிசெய்து காவல் துறை, உதவி ஆணையர் (ஆயம்) ஆகியோருடன் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சில்லரை மதுபான கடைகளில் மதுக்களை பெற்று அருகில் உள்ள இடங்களில் அமர்ந்து மது அருந்துவதை தவிர்திடும் பொருட்டு தொடர்ந்து கண்காணித்து Loose Sale நடைபெறுவதை பறிமுதல் செய்யப்பட வேண்டும். அனைத்து சில்லரை மதுபான கடைகளில் மொத்த விற்பனை கண்காணித்திட வேண்டும்.காவல் துணை கண்காணிப்பாளர்(மதுவிலக்கு அமல் பிரிவு) ஒசூர் அவர்கள், கிருஷ்ணகிரி மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளில் காவலர்கள் எண்ணிக்கை அதிகப்படுத்தி மாவட்டத்திற்குள் கள்ளச்சாராயம் மற்றும் மதுபாட்டில்கள் எடுத்து வருவதை தொடர்ந்து கண்காணித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டத்தின் வழியாக கடத்தப்பட்டு, வேறு மாவட்டத்தில் பறிமுதல் செய்யப்பட்ட மதுவகைகள் எந்த சோதனை சாவடி வழியாக கடந்து சென்றது என்பதை கண்டறிந்து அந்த சோதனை சாவடிகளில் தீவிர களர்காணிப்பு மேற்கொள்ள வேண்டும். மாவட்டத்தில் அனுமதி பெறாத, சந்துக்கடைகள் மற்றும் மது விற்பனை செய்யும் தாபாக்களை சீல் வைத்து உரிமையாளர்களின் மீது சட்டபூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.தளி, தேன்கனிக்கோட்டை, கிருஷ்ணகிரி ஆகிய மலை கிராம பகுதிகளில் ஊறல்(fermented wash) விற்பனை அதிகம் நடைபெற வாய்ப்புள்ளதால் அதனை தொடர்ந்து கண்காணித்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அரசு அனுமதி பெறாத மதுபான கடைகளை உதவி ஆணையர்(ஆயம்) ஆகியோருடன் கூட்டு புலத்தணிக்கை செய்து மூடி முத்திரை வைக்கப்பட வேண்டும்.உதவி ஆணையர்(ஆயம்) அவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2023-2024-ம் ஆண்டிற்கு புதுப்பிக்கப்படாத நிலுவையில் உள்ள இனங்களில் மீது நடவடிக்கை மேற்கொண்டு விரைவில் புதுப்பித்திட அறிவுறுத்தப்பட வேண்டும். RL, DL உபயோகப்படுத்தப்படும் நிறுவனங்களில் திடிர் தணிக்கை செய்து அவர்களிடம் உள்ள இருப்பு மற்றும் உபயோகப்படுத்தப்பட்ட அளவினை கண்காணித்தும் அவர்கிளிடமிருந்து வெளியே விற்பனை நடைபெறாததை உறுதிபடுத்திட வேண்டும். அரசு அனுமதி பெறாத மதுபான கடைகளை கண்டறிந்து அதனை மூடி முத்திரையிட வேண்டும். RL, DL, உரிமம் பெற்ற நிறுவனங்களை அழைத்து ஆய்வு கூட்டம் நடத்தப்பட வேண்டும்.சார் ஆட்சியர்/வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் கோட்டங்களில் பணிபுரியும் வட்டாட்சியர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாளர் ஆகியோர்களுக்கு கள்ளச்சாராயம் தாயரிப்பது மற்றும் விற்பனை செய்துவரும் நபர்களை கண்காணித்து உடன் தகவல் தெரிவித்திட ஆய்வு கூட்டம் நடத்த அறிவுறுத்தப்பட வேண்டும்.மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் கள்ளச்சாராயம் குறித்த தகவல்களை 6374000754 என்ற துணை காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு கள்ளத்தனமாக சாராயம் விற்பனை செய்வது மற்றும் தயாரித்த நபர்களின் விவரம் குறித்து தெரிவிக்கலாம். தகவல் தெரிவிக்கும் பொது மக்களின் விவரங்கள் இரகசியமாக வைக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம்.சரயு இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.கோ.வேடியப்பன், கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் திரு.பாபு, உதவி ஆணையர் (ஆயம்) (பொ) திரு.சுகுமார், துணை காவல் கண்காணிப்பாளர் திரு.சிவலிங்கம், மாவட்ட மேலாளர் (டாஸ்மாக்) திரு.ஐயப்பன் மற்றும் கோட்ட ஆய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்! எஸ்.பி.ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமையில் நடைபெற்றது
தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்ட நிகழ்ச்சிக்கு காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்டீபன் ஜேசுபாதம் அவர்கள் தலைமை வகித்தார். மாவட்டம் முழுவதிலும் இருந்து பொதுமக்கள் பல்வேறு பிரச்சனைகளுக்காக மனு அளிக்க வந்திருந்தவர்களிடம் இருந்து 134 மனுக்கள் பெறப்பட்டு. அதில் 111 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. மேலும் நிலுவையில் உள்ள மனுக்கள் மீது முறையான விசாரணை மேற்கொண்டு உரிய தீர்வு வழங்கும்படி அதிகாரிகளுக்கு காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவிட்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (தலைமையிடம்) திரு.பாலசுப்பிரமணியன் அவர்கள் , கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.இளங்கோவன் அவர்கள், காவல் துணைக் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அஇஅதிமுககிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள்அமைச்சருமான P.பாலகிருஷ்ண ரெட்டி அவர்களின் அறிக்கை
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட கழக செயலாளரும்,முன்னாள்அமைச்சருமான P.பாலகிருஷ்ண ரெட்டி அவர்களின் அறிக்கைஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கிருஷ்ணகிரி மேற்குமாவட்ட கழகத்தின் சார்பில் தமிழகத்தில் தொடரும் ஊழல் முறைகேடுகள், கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபானங்களால் இறப்பு, கொலை, கொள்ளை, வழிப்பறி, போதைப்பொருட்கள் புழக்கம் உள்ளிட்ட சட்டம்- ஒழுங்கு சீர்கேடுகளைக் கட்டுப்படுத்தத் தவறியவிடியா திமுக அரசைக் கண்டித்தும், இவைகளுக்கு முழு பொறுப்பேற்று முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் உடனடியாக பதவி விலக வலியுறுத்தியும் அனைத்திந்திய அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.பாலகிருஷ்ண ரெட்டி அவர்களின் தலைமையில்,29.05.2023 திங்கட்கிழமை காலை 10.00 மணியளவில்,ஓசூர் மாநகராட்சி, ராயக்கோட்டை சாலை மின்வாரிய அலுவலகம் எதிரில் , அனைத்து ஒன்றிய, நகர பேரூர் கழக செயலாளர்கள்முன்னிலையில், கழக துணை பொதுசெயலாளர் முன்னாள் அமைச்சர் திரு கே.பி.முனுசாமி அவர்களும் மற்றும் மாநிலங்களவை எம்பியும் கழக கொள்கை பரப்பு செயலாளருமான திரு மு.தம்பிதுரை ஆகியோர், ஆர்பாட்டத்தை துவக்கி வைத்து கண்டனபேரூரையாற்ற உள்ளனர்.அதுசமயம் கழக இந்நாள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்,மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர், கழக செயலாளர்கள், பொதுக்குழுஉறுப்பினர்கள், மற்றும் சார்பமைப்பு நிர்வாகிகள், கிளை கழக பொறுப்பாளர்கள்உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், கழக தொண்டர்கள் மற்றும்பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்…
பாலக்கோடு பேரூராட்சி சார்பில் மக்களை தேடி மருத்துவம் சிறப்பு முகாம்.
பாலக்கோடு பேரூராட்சி சார்பில் மக்களை தேடி மருத்துவம் சிறப்பு முகாம்.தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி மற்றும் பொது சுகாதாரத்துறை இணைந்து நடத்தும் மக்களை தேடி மருத்துவ சிறப்பு முகாம் பேரூராட்சி தலைவர் பி.கே. முரளி தலைமையில் நடைபெற்றது. இதில் பாலக்கோடு பேரூராட்சி 18 வார்டுகளில் வசிக்கும் பொது மக்களின் வீடுகள் தோறும் சென்று ஒவ்வொரு வீட்டில் உள்ள முதியவர்கள் இளைஞர்கள் பெண்கள் என ஒவ்வொரு தனி நபருக்கும் சிறப்பு மருத்துவ சேவை மூலம் ரத்த அழுத்தம் சர்க்கரை நோய் கேன்சர் மற்றும் இதர நோய்களை குணப்படுத்தும் விதமாக மருத்துவர்களைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்படும். இந்த சிகிச்சையின் மூலம் பேரூராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பல்வேறு நோய்களிலிருந்து விடுபட பேரூராட்சி நிர்வாகம் முனைப்புடன் செயல்படுத்தப்படும் என்று பேரூராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் செயல் அலுவலர் டார்த்தி மருத்துவர் நவீன், இளங்கோ, சுகாதார ஆய்வாளர் தமிழ்ச்செல்வன் மற்றும் துப்புரவு ஆய்வாளர் ரவீந்திரன் வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர்.
ஊத்தங்கரையில் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேக விழா ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.
ஊத்தங்கரையில் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழா ஏராளமான பக்தர்கள் பங்கேற்புஊத்தங்கரை மே 24கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை கல்லாவி மெயின் ரோட்டில் உள்ள வள்ளி தெய்வநாயகி சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். கும்பாபிஷேகத்தை ஒட்டி கடந்த 19 ஆம் தேதி முதல் யாக வேள்விகள் நான்கு காலங்களாக நடைபெற்றது. கோபூஜை கஜ பூஜை நடைபெற்று ஊத்தங்கரை ஸ்ரீ காசி விஸ்வநாதர் ஆலயத்தில் இருந்து ஊர்வலமாக யானை மீது புனித நீர் எடுத்து வரப்பட்டது. இன்று அதிகாலை திருக்கோவிலில் உள்ள கணபதிகள் பரிவார தேவதைகள் ஆகியோருக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது பின்னர் மூலவர் விமானம் ராஜகோபுரம் ஆகியவைகளுக்கு சிவாச்சாரியார்கள் சர்வ சாதகம் சிவசுப்பிரமணிய சிவம் சிவப்பிரசாத்சிவம் மணிகண்ட சிவம் ஆகியோர் அபிஷேகம் செய்தார்கள். சிறப்பு வழிபாடுகளுக்குப் பின் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது பின்னர் வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி திருக்கல்யாண வடிவம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளில் ரத்தினகிரி பாலமுருகன் சுவாமிகள் கூனம்பட்டி ஆதீனம் ராஜ சரவண மாணிக்க வாசகர் சுவாமிகள் எலவனாசூர் கோட்டை பகவதி சுவாமிகள் கந்திகுப்பம் பைரவ சாமிகள் ஆகியோர் பங்கேற்று பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செங்குந்த மகாஜன சங்கத் தலைவர் மாதேஸ்வரன் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்தனர். கும்பாபிஷேக நிகழ்ச்சியில் பிரதான பக்தர்கள் பங்கேற்று முருகனை வழிபட்டனர்.
வாடிக்கையாளர்களை ஒருமையில் பேசும் ஊத்தங்கரை இந்தியன் வங்கி ஊழியர்கள்.
வாடிக்கையாளர்களை ஒருமையில் பேசும் ஊத்தங்கரை இந்தியன் வங்கி ஊழியர்கள்.ஊத்தங்கரை, மே. 24: ஊத்தங்கரையில் இயங்கி வரும் இந்தியன் வங்கி கிளையில் பணிபுரியும் ஊழியர்கள், வங்கியின் வாடிக்கையாளர்களை ஒருமையில் பேசி வருகின்றனர். வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்களை, காலை முதல் மாலை வரை அலைக்கழித்து, பணிகளை விரைந்து முடிக்காமல் மிகவும் கேவலமாக நடத்தி வருகின்றனர். மேலும் வாடிக்கையாளர்கள் ஏதாவது சந்தேகங்களை கேட்டால், அவர்களை யோ, நீ, வா,போ என ஒருமையில் பேசி ரவுடிசத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோல் பணி புரியும் பணியாளர்களால், இந்தியன் வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்கள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர். செவ்வாய்கிழமை இந்தியன் வங்கி வாடிக்கையாளர் ஒருவரை அவமரியாதையாக பேசியதால், வாடிக்கையாளருக்கும் வங்கி ஊழியருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இது சம்பந்தமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுபோல், உள்ள பணியாளர்களால் இந்தியன் வங்கிக்கு மிகவும் அவபேர் ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட வங்கி மேலாளர் மற்றும் பணியாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Dr.AMR கிரிக்கெட் கோப்பை கிரிக்கெட் தொடர் போட்டி! பென்னாகரத்தில் ஜி.கே.மணி எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தர்மபுரி மாவட்டம் அதியமான் கிரிக்கெட் கிளப் நடத்தும் மாவட்ட அளவிலான Dr.AMR கிரிக்கெட் கோப்பை மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டிகள் தர்மபுரி மேற்கு மாவட்டம் பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் பென்னாகரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஜி.கே.மணி அவர்கள் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் தருமபுரி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் , வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் இ.மா.பாலகிருஷ்ணன் , பாமக மாவட்ட தலைவர் செல்வகுமார், பாட்டாளி இளைஞர் சங்க மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி , ஒன்றிய தலைவர்கள் அருள்மொழி, வெற்றி, ஒன்றிய செயலாளர்கள் , முருகன் ,அன்பு ராசா,நகர தலைவர் சந்தோஷ், வன்னியர் சங்க பொறுப்பாளர் எம்.பிரேம்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.