கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் அவர்களின் எளிமை கண்டு வியந்த மக்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் ஒன்றியம் ஆவத்துவாடி கிராமத்தை சேர்ந்தவர் பெரியண்ணன் ஈஸ்வரி மற்றும் குமாரன் அலமேலு அவர்களின் இல்ல குடும்ப திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. கலெக்டர் அலுவலக முன்னாள் ஊழியர் இல்ல திருமணத்தில் கலந்து கொண்ட கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் மணமக்களான தமிழ்மொழி நவீன்குமார் ஆகியோரை வாழ்த்தினார். திருமண விழாவிற்கு வந்திருந்தத உறவினர்கள் பொதுமக்கள் மாவட்ட ஆட்சித் தலைவரின் எளிமையான செயல்பாடுகளால் வியந்து பாராட்டினர்
அரசியல்
பாஜக தேசிய தலைவருடன் அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி தலைமையில் கே.பி.முனுசாமி உள்ளிட்டோருடன் டெல்லியில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை
அஇஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் நேற்று பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அமிஷா அவர்களை புதுடெல்லியில் நேரில் சந்தித்து வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை கூட்டணி மற்றும் தமிழகத்தில் நடைபெறும் திமுக அரசின் செயல்பாடுகளையும் பற்றி கலந்த ஆலோசித்தார்கள். கழக துணை பொதுச்செயலாளர் கே. பி.முனுசாமி அவர்களும் தமிழக பாரதிய ஜனதா கட்சியினுடைய தலைவர் கே.அண்ணாமலை அவர்களும் முன்னாள் அமைச்சர்கள் சி.வி. சண்முகம், வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்
வன்னியர்களுக்கு 10.5% தனி இடஒதுக்கிடூ வழங்கிட கோரி கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட சூளகிரி ஒன்றிய பாமக சார்பாக சூளகிரி அஞ்சல் அலுவலகத்தில் இருந்து தபால்கள் அனுப்பப்பட்டது.
வேப்பனம்பள்ளி சட்டமன்ற தொகுதி சூளகிரி ஒன்றியத்தின் சார்பாக வன்னியர்களுக்கான கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5%இட ஒதுக்கீடு வேண்டி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கட்சியின் மாநில தலைவர் திரு அன்புமணி ராமதாஸ் MP அவர்களின் ஆணைக்கிணங்ககிருஷ்ணகிரி மத்திய மாவட்ட செயலாளர் அண்ணன் இளங்கோ அவர்களின் வழிகாட்டுதலில் இன்று சூளகிரி ஒன்றியத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் திரு மு க ஸ்டாலின் அவர்களுக்கும், மாண்புமிகு நீதியரசர் வி .பாரதிதாசன் ,தலைவர் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அவர்களுக்கும் முதற்கட்டமாக சுமார் 300 தபால்கள் அனுப்பப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சூளகிரி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெகதீசன், மேற்கு ஒன்றிய செயலாளர் மாதேஷ், வடக்கு ஒன்றிய செயலாளர் சங்கர் APS முன்னிலை வகுத்தனர், திரு வெங்கடேஷ் செட்டியார் மாநில துணைத்தலைவர், திரு தியாகராஜ நாயுடு மாவட்ட தலைவர் மத்திய மாவட்டம், திரு வரதராஜன் கொள்கை பரப்பு செயலாளர்,திருமதி தமிழ்ச்செல்வி வரதராஜன், த.கி நந்தகுமார் மாவட்ட இளைஞரணி செயலாளர் ,சிவக்குமார் கவுடா சூளகிரி கிழக்கு ஒன்றிய தலைவர், திரு ராஜ்குமார் அன்புமணி தம்பிகள் படை மாவட்ட துணை செயலாளர், திரு ராமசாமி, திரு முருகன் OMM, திரு பாலாஜி செட்டியார், சம்பத் ஐயங்கார், திரு ராமமூர்த்தி, திரு ஆறுமுகம், திரு திருப்பதி, திரு கேபிள் சேட்டு, திரு சக்தி, திரு கிருஷ்ணன், திரு முனியப்பன், திரு சௌந்தர், திரு ரகு, திரு நாகராஜ், திரு விஜயன், முனியப்ப கவுண்டர், ஆகியோர் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி அடுத்த சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தேவ சமுத்திரம் மேம்பாலம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது
கிருஷ்ணகிரி அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட செயற்குழு கூட்டம்கிருஷ்ணகிரி அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றதுகிருஷ்ணகிரி அடுத்த சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தேவ சமுத்திரம் மேம்பாலம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் கனியமுதன் மேற்கு மாவட்ட செயலாளர் மாயவன் ஆகியோர் கூட்டுத் தலைமை வகித்தனர். மாவட்ட துணை செயலாளர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் முனிராவ், தொகுதி செயலாளர் தியாகு ஆகியோர் முன்னிலை வகித்தனர். .சிறப்பு அழைப்பாளர்களாக தலைமை நிலைய செயலாளர் தகடூர் தமிழ்செல்வன், மாநில அமைப்பு செயலாளர்கோவேந்தன், மண்டல செயலாளர் நந்தன், திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் சுபாஷ், கோட்டை கலைவாணன்ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்கூட்டத்தில் மாநிலத் துணைச் செயலாளர்கள்.அசோகன், ஜெயலட்சுமி.சூளகரை அம்பேத்கார், தேக்கூர் நாகராஜ், பாராளுமன்ற தொகுதி செயலாளர் செந்தமிழ், தொகுதிச் செயலாளர்கள்சரவணன்,செம்பட்டி சிவா,பிரபாகரன்,முனிசந்திரன், வேங்கைவளவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இந்த கூட்டத்தில் வருகின்ற 22ம் தேதி ஆவண கொலைகளை தடுக்க சட்டம் இயற்றக்கோரி நடைபெறும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆர்ப்பாட்டத்திற்கு வருகை தர உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது, 22ம் தேதி நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு 10,000 பேர் கலந்து கொள்வது, கடந்த 14 ஆம் தேதி சனநாயகம் காப்போம் என்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பேரணியை வெற்றி செய்தவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது முன்னதாக காவேரிப்பட்டினம் முன்னாள் ஒன்றிய செயலாளர் செல்வராஜ் அவர்களின் இறப்புக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.கூட்டத்தில் நிர்வாகிகள்துரைவளவன்,சிவக்குமார், மாயகண்ணன், ஒன்றியச் செயலாளர்கள்.ஆலப்பட்டி ரமேஷ், சூளகிரி தியாகு, பாக்கியராஜ், மூர்த்தி.மாதையன். மகேந்திரன்.சசிகுமார். இளையராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பர்கூர் சட்டமன்ற தொகுதியில் நீண்டநாட்களாக தீர்க்கபடாத பல முக்கிய கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன் எம்எல்ஏ சட்டபேரவையில் கோரிக்கை
பர்கூர் சட்டமன்ற தொகுதியில் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாத முக்கியமான கோரிக்கைகளை தங்களின் மேலான பார்வைக்கு கொண்டு வருகின்றேன்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள படேதலா பெரிய ஏரியிலிருந்து பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 2000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெரும் வகையில் வெண்ணம்பள்ளி,ஓரப்பம், காட்டகரம் ஏரி உட்பட 11 ஏரிகளுக்கு தண்ணீர் வழங்க வெட்டப்பட்ட கால்வாயினை மறுசீரமைப்பு செய்து ஆழமான பகுதிகளில் கட்டுமானம் மேற்கொண்டும்,மேலும் அச்சமங்கலம்ஏரியிலிருந்துபுதிதாக கால்வாய் வெட்டி குட்டூர் ஏரிக்கும், காகங்கரை ஏரிக்கும்தண்ணீர் கொண்டு செல்ல ஆவண செய்யுமாறு வேண்டி கேட்டுக் கொள்கின்றேன்.
10 ஆண்டுகளுக்கு முன்பே போச்சம்பள்ளிக்கு வட்டார வளர்ச்சி அலுவலகம் (BDO) அறிவிக்கப்பட்டது, இது நாள்வரை இத்திட்டம் நிலுவையிலே உள்ளது. அதற்கான அலுவலகத்தை கட்டி உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர மாண்புமிகு முதல்வர் அவர்கள் ஆவண செய்ய வேண்டுகிறேன்.
பர்கூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராஜ கால்வாயின் ஆக்கிரமிப்புகளை அகற்றி மழை நீர் வடிகால் அமைத்து தர ஆவண செய்யுமாறு வேண்டி கேட்டுக் கொள்கின்றேன்.
காவேரிப்பட்டிணம் ஒன்றியத்துக்குட்பட்ட சந்தனூர் ஏரியிலிருந்து உபரிநீரை கொட்டாவூர், பாப்பாரப்பட்டி, சின்ன புளியம்பட்டி வையம்பட்டி,இருமத்தூர்,காராமூர் மற்றும் சாமாண்டப்பட்டி ஆகிய ஏரிகளுக்கு தண்ணீர் வழங்க ஆவண செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாழும் இருளர் மற்றும் ஆதிதிராவிடர் மக்கள் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் குடியிருக்கும் வீடுகள் மிகவும் பழமையானதாகவும், எந்த நேரத்திலும் இடிந்து விழும் சூழ்நிலையில் உள்ளதாலும் இவர்களுக்கு புதிய வீடுகளை கட்டித் தந்து அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.
தமிழக அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கையில் கிருஷ்ணகிரி மாவட்டம் அரசம்பட்டி தென்னைக்கும் மற்றும் கிருஷ்ணகிரி பன்னீர் ரோஜாவுக்கும் புவிசார் குறியீடு பெற்று தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதற்காக கிருஷ்ணகிரி விவசாயிகளின் சார்பாக மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்
மாங்கனி மாவட்டமான கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான மாமரங்களில் தற்போது த்ரிப்ஸ் (சிறு பூச்சிகள் ) பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் மாங்காய் விளைச்சல் குறைந்தது மட்டுமல்லாமல் தரமும் குறைந்து காணப்படுகிறது.
ஆதலால் “மா” மற்றும் “தென்னைக்கு” சிறந்த வேளாண் விஞ்ஞானிகளை வைத்து சிறப்பு ஆராய்ச்சி மையம் அமைத்து விவசாயிகளுக்கு தேவையான பூச்சிக்கொல்லிகள், சாகுபடி மற்றும் அறுவடை பற்றிய விழிப்புணர்வை வழங்கவும், “மா” செடிக்கு காப்பீடு தொகை வழங்க ஆவணச் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.
சட்டத்திற்கு புறம்பாகவும் பொதுமக்களளின் நலனுக்கு எதிராகவும் இருக்கும் கிருஷ்ணகிரி சுங்கசாவடியை உடனடியாக அகற்றிட மக்களின் காவல் தெய்வம் மாண்புமிகு முதல்வர் தளபதியார் அவர்கள் ஆவண செய்யவேண்டும்என வேண்டி கேட்டுக்கொள்கின்றேன்.
தினந்தோறும் பொதுமக்கள்சென்று வரக்கூடிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல்துறை அலுவலகம், மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை, வட்டார போக்குவரத்து அலுவலகம், வேளாண்மை அலுவலகம், சுகாதார அலுவலகம் மற்றும் பல்வேறு மாவட்ட அரசு அலுவலகங்கள் ஆகியவற்றிற்கு சென்று வருவதற்கு பெரும் இடையூறாகவும், ஒவ்வொரு முறையும் ரூபாய் 100க்கும் மேலாக செலவிட வேண்டியுள்ளது. குறிப்பாக பழைய மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு 2800க்கும் மேற்பட்ட நோயாளிகள் தினந்தோறும் வந்து பயன்பெற்ற நிலையில் தற்பொழுது இந்த சுங்க சாவடியைதாண்டியே புதிய மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு செல்ல வேண்டியுள்ளதால் பாதிக்கும் குறைவாக 1500 க்கும் குறைவான நோயாளிகளே வந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது கிருஷ்ணகிரி நகர மக்களின் அடிப்படை சேவையையே முடக்கும் வகையில் அமைந்துள்ளது. சட்டத்திற்கு புறம்பாகவும் பொதுமக்களளின் நலனுக்கு எதிராகவும் இருக்கும் இந்த சுங்க சாவடியை அகற்றிட பலமுறை முயன்றும் தேசிய நெடுஞ்சாலை துறை கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறது. ஆகையால் மக்களின் காவல் தெய்வம் மாண்புமிகு முதல்வர் தளபதியார் அவர்கள் இந்த சுங்கசாவடியை உடனடியாக அகற்றிட ஆவண செய்யவேண்டும் என மிகவும் வேண்டி கேட்டுக்கொள்கின்றேன்.
ஒசூர் மாநகராட்சி 22வது வார்டில் மாநகர மேயர் எஸ்.ஏ.சத்யா அவர்கள் அதிகாரிகளுடன் திடீர் ஆய்வு மேற்க்கொண்டு, பொதுமக்களின் குறைகளை மனுக்களாக பெற்றுக்கொண்டார்
ஒசூர் மாநகராட்சி 22வது வார்டிற்குட்பட்ட அன்னைநகர் உள்ளிட்ட பகுதிகளில் மாநகர மேயர் அதிகாரிகளுடன் திடீர் ஆய்வு மேற்க்கொண்டு, பொதுமக்களின் குறைகளை மனுக்களாக பெற்றுக்கொண்டார்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி 22வது வார்டிற்குட்பட்ட அன்னை நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஓசூர் மாநகர மேயர் S.A.சத்யா அவர்கள், மாநகர ஆணையாளர் சிநேகா உள்ளிட்டோருடன் திடீர் ஆய்வு மேற்க்கொண்டார்
சாலை வசதி, குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்ததுடன் பொதுமக்களின் குறைகளை கோரிக்கை மனுக்களாக பெற்றுக்கொண்டார்
அப்போது 22வது மாமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் மற்றும் குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்
கிருஷ்ணகிரி நகர் பகுதியில்திமுக உறுப்பினர் சேர்க்கை தீவிரம்!நகர செயலாளர் எஸ்.கே.நவாப் அவர்களுக்கு முன்னாள் அமைச்சர் பாராட்டு
கிருஷ்ணகிரி நகராட்சியில்
திமுக உறுப்பினர் சேர்க்கை தீவிரம்
நகர செயலாளருக்கு முன்னாள் அமைச்சர் பாராட்டு
கருணாநிதியின் 100வது ஆண்டு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, ஒரு கோடி உறுப்பினர்களை தி.மு.க.,வில் இணைக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் எம்.எல்.ஏ.,வுமான மதியழகனின் வழிகாட்டுதல் படி, கிருஷ்ணகிரி நகரத்திற்கு 10,200 உறுப்பினர்களை சேர்க்க வேண்டுமென ஆலோசனை வழங்கினார். மேலும் பூத் கமிட்டி நுாறு ஓட்டுக்கு ஒரு ஆள், கட்சி உறுப்பினர் படிவம் சேர்த்தல், இப்பணிகள் சிறப்பாக நடைபெற, கிருஷ்ணகிரி தொகுதிக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சரும், கொள்கை பரப்புத் துணைச் செயலாளர் மருத்துவர் விஜய் மற்றும் கிருஷ்ணகிரி நகர செயலாளர் நவாப், மாநில தலைமை செயற்குழு உறுப்பினரும், நகர் மன்ற தலைவருமான பரிதாநவாப், கிருஷ்ணகிரி தொகுதி பொறுப்பாளர் கோவிந்தசாமி, கிருஷ்ணகிரி பொறுப்பாளர் சித்ரா சந்திரசேகர் ஆகியோர் மேற்கொண்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி நகரத்தில் ஒதுக்கப்பட்ட 10 ஆயிரத்து 200 உறுப்பினர் சேர்க்கையில் இதுவரை, 5,450 பேர் உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் 15 பேர் கொண்ட பூத்து கமிட்டி முழுமையாக முடிக்கப்பட்டுள்ளது. நுாறு ஓட்டுக்கு ஒரு ஆள் கணக்கும் தரப்பட்டுள்ளது. தொடர்ந்து கிருஷ்ணகிரி நகரத்தில் பல்வேறு இடங்களில் இக்குழுவினர் ஆய்வுகளை மேற்கொண்டனர்.
கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கல்லூரியில் கணினி (PowerPoint presentation ) நிகழ்த்துகைப் போட்டித் தொடக்க விழா
கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா
கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஒரு நாள் (PowerPoint presentation ) கணினி நிகழ்த்துகை போட்டி தொடக்க விழா புதன்கிழமை (19.0 4 .2023 ) அன்று நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் முனைவர் சு.தனபால் அவர்கள் தலைமை தாங்கினார். தன்னுடைய தலைமை உரையில், மாணவ மாணவியர்கள் கணினி தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்க வேண்டும். புதிய மென்பொருள்களை கண்டறிதல் வேண்டும். மாணவ மாணவியர்களுக்கு பயன்படும் வகையில் காலத்திற்கு ஏற்ற முறையில் புதிய புதிய கணினியில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்று பேசினார்.
சிறப்பு விருந்தினராக சி பி சி ஐ டி காவல்துறை உதவி ஆய்வாளருமான திரு சரவணன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். தன்னுடைய சிறப்பு உரையில், கணினி சார்ந்த மென்பொருள் களை நல்ல செயல்களுக்கு பயன்படுத்துதல் வேண்டும் என்று பேசினார். கல்லூரியின் மாணவ மாணவியர்களின் தனித் திறன்களை கண்டறியும் பொருட்டு அனைத்து போட்டிகளுக்கும் முனைவர் மா. ஜெகன் அவர்கள் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வருகிறார் . கல்லூரியின் கணினி அறிவியல் துறையின் உதவிப் பேராசிரியர் திரு முருகதாஸ் அவர்கள் கணினி நிகழ்த்துகை போட்டிகளுக்கான ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போட்டிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு அறிஞர் அண்ணா கல்லூரியின் முதல்வர் சு.தனபால் அவர்கள் அவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
வன்னியர்களுக்கு 10.5% தனி இடஒதுக்கிடூ வழங்கிட கோரி தருமபுரி பாமக சார்பாக தருமபுரி அஞ்சல் அலுவலகத்தில் இருந்து தபால்கள் அனுப்பப்பட்டது
பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் ஆணைக்கிணங்க வன்னியர்களுக்கு 10.5% உள்ள ஒதுக்கிட வழங்கிட கோரி
தமிழக முதல்வர் ஸ்டாலின்
அவர்களுக்கும்
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணைய
தலைவர் நீதியரசர் வீ. பாரதிதாசன் அவர்களுக்கும் தர்மபுரி தலைமை தபால் நிலையத்தில் உள்ள தபால் பெட்டியில் தபால்கள் அனுப்பும் நிகழ்வு பாட்டாளி இளைஞர் சங்கத்தின் முன்னாள் மாவட்ட செயலாளர் முனைவர் தகடூர் தமிழன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பென்னாகரம் தொகுதி அமைப்பாளர் சுதாகிருஷ்ணன், அன்புமணி தம்பிகள் படை மாவட்ட செயலாளர் கார்த்திக்கேயன் , மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் மாற்று சமுதாயத்தினை சார்ந்தவர்கள் உடன் இருந்தனர்.