காதலனை பிரிந்த விரக்தியில் காதலி தூக்குபோட்டு தற்கொலை .தற்கொலைக்கு தூண்டியதாக காதலன் வீட்டார் சாலை மறியல் .தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே முனுசாமிகொட்டாய் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி சிவன் இவருக்கு 3 மகள்கள் ஒரு மகன் உள்ளனர்.மூன்றாவது மகள் நதியா (வயது.19), பென்னாகரம் அரசு கலைக் கல்லூரியில் பி.எஸ்.சி. கணிதம் இரண்டாமாண்டு படித்து வந்தார்.கடந்த ஏப்ரல் 29ம் தேதி கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை இது குறித்து தந்தை மாரண்டஅள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்,அடுத்த நாள் ஏப்ரல் 30ம் தேதி நதியாவும் அதே கல்லூரியில் படிக்கும்5வது மைல்கல் கிராமத்தை சேர்ந்த விஜய்அரசு ( வயது. 20) இருவரும் மாரண்டஅள்ளி காவல் நிலையத்தில் ஆஜராகி இருவரும் காதலித்து வருவதாகவும் திருமணம் செய்ய இருப்பதாகவும் கூறினர்.இருதரப்பு பெற்றோர்களையும் அழைத்து போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் இருவரும் படிப்பு முடியாததால் படித்து முடித்ததும் தாங்களே திருமணம் செய்து வைப்பதாக கூறினர்.இதனை ஏற்று காதலர்கள் இருவரும் பெற்றோருடன் சென்றனர்.கடந்த சில நாட்களாக காதலனை பிரிந்த சோகத்தில் இருந்த நதியா நேற்று முன்தினம் இரவு வீட்டில் உள்ள உத்தரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.தகவலறிந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில் நேற்று காதலன் வீட்டார் காதலியின் வீட்டின் முன்பு குவிந்தனர்.காதலியை கட்டாயப்படுத்தி தற்கொலைக்கு தூண்டியதாகவும், காதலியின் தாய் மற்றும் தந்தையை கைது செய்ய வேண்டும் என கூச்சலிட்டவர்கள் திடிரென பெல்ரம்பட்டி – பாலக்கோடு சாலையில் ஆத்துக் கொட்டாய் பகுதியில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.சம்பவ இடத்திற்க்கு வந்த பாலக்கோடு டி.எஸ்.பி சிந்து இது குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.இதனால் சுமார் 2மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.