Home » கெலமங்கலத்தில் மாபெரும் இலவச மருத்துவ முகாம்………

கெலமங்கலத்தில் மாபெரும் இலவச மருத்துவ முகாம்………

by Admin
0 comment

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கணிக்கோட்டை வட்டம் கெலமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் கெலமங்கலம் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம், முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டம் மற்றும் பெங்களூர் ராஜ ராஜேஸ்வரி மருத்துவ கல்லூரி மருத்துவ மனை இணைந்து மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில்   கர்பிணி தாயமார்கள் மற்றும் குழந்தைகள் பரிசோதனை, கண் பரோசோதனை, ரத்த பரிசோதனை, எலும்பு மற்றும் மூட்டு பரிசோதனை, எய்ட்ஸ், TB, சிறுநீர் பரிசோதனை, தோல் வியதிகள் பரிசோதனை மற்றும் அறுவை சிகிச்சை போன்ற பரிசோதனைகள் நடைபெற்றது. முகாமில் கெலமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ் குமார், மருத்துவர் கோபி, கண் பரிசோதகர் டேவிட் செல்லப்பாண்டியன், ராஜ ராஜேஸ்வரி மருத்துவமனை மருத்துவர் நவீன் போன்ற பலர் கலந்துகொண்டனர்.Attachments area

You may also like

Add Comment
error: Content is protected !!