Home » பர்கூர் நகரில் சாலையோர வியாபாரிகள் 447 பேருக்கு அடையாள அட்டையுடன் தலா ரூ.10 ஆயிரம் என 47 இலட்சம் ரூபாய் கடன் உதவிகளை எம்எல்ஏ டி.மதியழகன் வழங்கினார்.

பர்கூர் நகரில் சாலையோர வியாபாரிகள் 447 பேருக்கு அடையாள அட்டையுடன் தலா ரூ.10 ஆயிரம் என 47 இலட்சம் ரூபாய் கடன் உதவிகளை எம்எல்ஏ டி.மதியழகன் வழங்கினார்.

by Babukanth V
0 comment

பர்கூர் நகரில் சாலையோர வியாபாரிகள் 447 பேருக்கு அடையாள அட்டையுடன் தலா ₹ 10 ஆயிரம் கடன் உதவிகள் எம்எல்ஏ மதியழகன் வழங்கினார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் டவுன் பஞ்சாயத்து சார்பில் சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா இன்று பர்கூர் எம்எல்ஏ மதியழகன் தலைமையிலும் டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் சேம் கிங்ஸ்டன் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த விழாவில் பர்கூர் நகரில் சாலையோர காய்கறிகள் பழங்கள் மலர்கள் பூக்கள் துணிகள் உணவகங்கள் நடத்தும் 447 சிறு வியாபாரிகளுக்கு டவுன் பஞ்சாயத்து சார்பில் சிறு சாலையோர வியாபாரி என்று தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு அங்கீகார அடையாள அட்டை உடன் தலா ஒருவருக்கு 10 ஆயிரம் வீதம் 47 லட்ச ரூபாய் வங்கி கடனை எம்எல்ஏ மதியழகன் வழங்கினார்.

விழாவில் பேசிய எம்எல்ஏ மதியழகன் சாலையோர வியாபாரிகள் என்னை சந்தித்து முதலீடு இல்லாத காரணத்தினால் வியாபாரம் செய்வதில் சிரமப்படுவதாகவும் வங்கிகளில் கடன் உதவி கேட்டால் தொழில் செய்வதற்கு அங்கீகாரம் கேட்பதாகவும் தெரிவித்தனர். இதை அடுத்து அவர்களின் சிரமத்தை போக்கவும் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் இன்று டவுன் பஞ்சாயத்து சார்பில் சாலையோர வியாபாரிகள் 447 பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது மேலும் நீங்கள் உங்கள் வியாபாரத்தை பெருக்கும் வகையில் இந்த அடையாள அட்டை மூலமாக தேசிய வங்கிகள் மூலமாக கடன் உதவிகள் வழங்கப்பட்டு உள்ளது இதனை முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் குறைந்த வட்டியில் வழங்கபடும் இந்த கடனை தவறாமல் திரும்ப செலுத்தி பிறகு அடுத்தடுத்த கடன்களை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்தார்.

இந்த விழாவில் முன்னாள் எம்.பி.கள் சுகவனம் வெற்றிச்செல்வன் மாவட்ட துணைச் செயலாளர் நாகராஜ் பொருளாளர் ராஜேந்திரன் மாநில விவசாய அணி துணை செயலாளர் டேம் வெங்கடேசன் பருகூர் டவுன் பஞ்சாயத்து முன்னாள் சேர்மன் பாலன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

You may also like

Add Comment
error: Content is protected !!