Home » கேவிஎஸ் குழுமம் சார்பில் காவேரிப்பட்டணத்தில்இணையதள வசதியுடன் கூடிய மாதிரி டிஜிட்டல் நூலகம் அமைக்க மாவட்ட ஆட்சியரிடம் மனு!

கேவிஎஸ் குழுமம் சார்பில் காவேரிப்பட்டணத்தில்இணையதள வசதியுடன் கூடிய மாதிரி டிஜிட்டல் நூலகம் அமைக்க மாவட்ட ஆட்சியரிடம் மனு!

by Babukanth V
0 comment

காவேரிப்பட்டணத்தில்
இணையதள வசதியுடன் கூடிய மாதிரி டிஜிட்டல் நூலகம் அமைக்க மனு
கிருஷ்ணகிரி
காவேரிப்பட்டணத்தில் இணையதள வசதியுடன் கூடிய மாதிரி டிஜிட்டல் நூலகம் அமைத்து தருவதற்கு இடம் ஒதுக்கீடு செய்து தரக்கோரி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் கேவிஎஸ் குழுமத்தை சேர்ந்த திமுக பிரமுகர் கேவிஎஸ் சீனிவாசன், கேஎம் சுவாமிநாதன் ஆகியோர், மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டியிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அம்மனுவில் கூறியிருப்பதாவது. கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் நகரில் 50 ஆண்டுகளுக்கு மேலாக நூலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நூலகம் மூலம் காவேரிப்பட்டணம் அதன் சுற்றுப்புற கிராமங்களில் வசிக்கும் பலர் பயன்பெற்று வந்தனர். இந்நிலையில், நூலக கட்டிடம் போதிய பராமரிப்பு இல்லாமல், கட்டிடங்களின் மேற்கூரை விரிசல் அடைந்தும், சிமெண்ட் பூச்சிகள் பெயர்ந்துள்ளது சிதலமடைந்து காணப்படுகிறது.
இதனால் நூலகத்திற்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. இங்கு, போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களுக்கான தேவையான போதிய புத்தகங்கள் இல்லை. இருக்கும் நூல்களை வாசிக்கவும் வருபவர்களுகம் அச்சத்துடன் உள்ளே அமர வேண்டிய சூழல்நிலை தான் இருக்கிறது. எனவே, காவேரிப்பட்டணம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் வசிக்கும் இளைஞர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் நூலகம் அமைக்க இடம் கொடுத்தால், எங்களது சொந்த செலவில் கணினி மையமாக்கப்பட்ட மாதிரி டிஜிட்டல் நூலகமாக அமைத்து தருகிறோம். நூலக கட்டிடம், வாசகர்களுக்கு தேவையான கணினிகள், இணையதள வசதியை ஏற்படுத்தி தருகிறோம். இதன் மூலம் கிராமபுற இளைஞர்கள் பல்வேறு போட்டிகளுக்கு தங்களை தயார் செய்துக் கொள்ள முடியும். எனவே, மாவட்ட நிர்வாகம் நூலகம் அமைக்க இடம் ஒதுக்கீடு செய்து தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You may also like

Add Comment
error: Content is protected !!