Home » ஒசூர் அரசுப்பள்ளி மாணவி, 20 வயதிற்குட்பட்ட இந்திய கைப்பந்து அணியில் இடம்பிடித்து சாதனை: மாநகர மேயர் வீராங்கனைக்கு வாழ்த்து

ஒசூர் அரசுப்பள்ளி மாணவி, 20 வயதிற்குட்பட்ட இந்திய கைப்பந்து அணியில் இடம்பிடித்து சாதனை: மாநகர மேயர் வீராங்கனைக்கு வாழ்த்து

by Babukanth V
0 comment

ஒசூர் அரசுப்பள்ளி மாணவி, 20 வயதிற்குட்பட்ட இந்திய கைப்பந்து அணியில் இடம்பிடித்து சாதனை: மாநகர மேயர் வீராங்கனைக்கு வாழ்த்து

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி கோபிகா, 12ஆம் வகுப்பு படித்து வரும்நிலையில்

ஈகல்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் கைப்பந்து போட்டிகளுக்கான பயிற்சி பெற்று விளையாடி வந்தார், பல்வேறு பகுதிகளில் நடைப்பெற்ற போட்டிகளில் வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த நிலையில்

20வயதிற்குட்பட்டோருக்கான இந்திய கைப்பந்து அணியில் இடம் பிடித்து ஒசூருக்கு மட்டுமல்ல, தமிழகத்திற்கே பெருமை சேர்க்கும் வகையில் சாதனை படைத்துள்ளார்..

கஜகஸ்தானின் சமே நகரில் வருகிற ஜூலை மாதம் 4 – 11ஆம் தேதிவரை நடைப்பெற உள்ள ஏசியன் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாட உள்ளார்

இந்தநிலையில், வீராங்கணை கோபிகா, இன்று ஒசூர் மாநகர வணக்கத்திற்குரிய மேயர் S.A.சத்யா அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்

மாணவியிடம் பேசிய மேயர் S.A.சத்யா:

நமக்கு கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்டு பெற்றோருக்கும், சுற்றாருக்கும் பெருமை சேர்க்கும் வகையில் வெற்றிகளை குவித்திட தனது சார்பில் உதவிகளை வழங்குவதாக ஊக்கப்படுத்தினார்

You may also like

Add Comment
error: Content is protected !!