Home » கிருஷ்ணகிரி அருகே முருக்கம்பள்ளம் கிராமத்தில் 8 ஊர் மக்கள் இணைந்து நடத்திய அர்சுணன் தபசு விழாவில் குழந்தைப் பாக்கியம் மற்றும் கிராம மக்கள்நலம்பெற வேண்டி தபசு மரத்தினை வழிப்பட்ட கிராம மக்கள்.

கிருஷ்ணகிரி அருகே முருக்கம்பள்ளம் கிராமத்தில் 8 ஊர் மக்கள் இணைந்து நடத்திய அர்சுணன் தபசு விழாவில் குழந்தைப் பாக்கியம் மற்றும் கிராம மக்கள்நலம்பெற வேண்டி தபசு மரத்தினை வழிப்பட்ட கிராம மக்கள்.

by Babukanth V
0 comment

கிருஷ்ணகிரி அருகே முருக்கம்பள்ளம் கிராமத்தில் 8 ஊர் கிராமமக்கள் இணைந்து நடத்திய அர்சுணன் தபசு விழாவில் குழந்தைப் பாக்கியம் மற்றும் கிராம மக்கள்நலம்பெற வேண்டி க தபசு மரத்தினை வழிப்பட்ட கிராம மக்கள்.
…………………………………..
கிருஷ்ணகிரி அருகே உள்ள
முருக்கம்பள்ளம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு திரெளபதி அம்மன் திருகோயிலின்
48-ம் ஆண்டு மகாபாரத பெருவிழா கடந்த 9 -ம் தேதி துவங்கி மகாபாரத பெருவிழா நடைபெற்று வருகிறது.
நாள்தோறும் அம்மனுக்கு அபிஷேகங்கள் ஆராதனைகளுடன் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. இதனைத்தொடர்ந்து பென்னாகரம் பகுதியை சேர்ந்த வெற்றிவேல் நாடக கலைக்குழு சார்பில் மகாபாரத நாடகங்களும் நடைபெற்று வருகிறது.
இவ்விழாவின் முக்கிய நிகழ்வான அர்சுணன் தபசு விழாவினை
முருக்கம் பள்ளம் பாலேப்பள்ளி, எலத்தகிரி, காத்தாடிகுப்பம், வெண்ணம்பள்ளி, ஜோடுகொத்தூர், மாதனகுப்பம்,
மேல் அக்ரஹாரம் ஆகிய 8 கிராமங்களை சேர்ந்த மக்கள் இணைந்து நடத்தினார்கள்.
இதில் மகாபாரதப்போரில்
கெளரவர்களை அழிக்க சிவப்பெருமானிடம்
ஆயுதம் பெற வேண்டி அர்சுணன்
தபசு மரத்தின் கீழ் சிவப்பெருமானுக்கு
சிறப்பு பூஜைகள் செய்த பின் தபசு மரத்தில் ஏறும் நிகழ்வு வெகுவிமர்சியாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில்
குழந்தைப் பாக்கியம் வேண்டியும் நல்ல மழை பெய்து ஏரி, குளம் நிரம்பவேண்டும் எனவும் கிராம மக்கள் அனைவரும் நலமுடன் வாழவேண்டி ஆண்களும் பெண்களும் தபசுமரத்தினை வழிப்பட்டனர்.
இரவு துவங்கி பகல் முற்பகல் வரை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியினை தாய் கிராமமான முருக்கம் பள்ளம் உள்ளிட்ட 8 கிராமங்களை சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்துக்கொண்டனர்

You may also like

Add Comment
error: Content is protected !!