Home » கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பாக தேசிய மின்சிக்கன வார விழாவையொட்டி, தேசிய எரிசக்தி பாதுகாப்பு தின விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் வி.ஜெயசந்திர பானுரெட்டி இ.ஆ.ப., அவர்கள் இன்று (17.12.2022) கொடியசைத்து துவக்கி வைத்தார்

கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பாக தேசிய மின்சிக்கன வார விழாவையொட்டி, தேசிய எரிசக்தி பாதுகாப்பு தின விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் வி.ஜெயசந்திர பானுரெட்டி இ.ஆ.ப., அவர்கள் இன்று (17.12.2022) கொடியசைத்து துவக்கி வைத்தார்

by Babukanth V
0 comment

தேசிய எரிசக்தி பாதுகாப்பு தின விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் வி.ஜெயசந்திர பானுரெட்டி இ.ஆ.ப., அவர்கள் இன்று (17.12.2022)

கொடியசைத்து துவக்கி வைத்தார்.

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும், மழை காலங்களில் மின்சாரத்தை பாதுகாப்பாக பயன்படுத்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தகவல்

கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும்

பகிர்மான கழகம் சார்பாக தேசிய மின்சிக்கன வார விழாவையொட்டி, தேசிய எரிசக்தி

பாதுகாப்பு தின விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்

வி.ஜெயசந்திர பானுரெட்டி இ.ஆ.ப., அவர்கள் இன்று (17.12.2022) கொடியசைத்து

துவக்கி வைத்தார். தொடர்ந்து செய்தி மக்கள் தொடர்புத்துறையின் நவீன மின்னனு

வாகனம் மூலம் மின் சிக்கனம் மற்றும் மழை காலங்களில் பாதுகாப்பு விழிப்புணர்வு

குறித்து குறும்படம் ஒளிபரப்பை துவக்கி வைத்து பொதுமக்களுக்கு துண்டு

பிரசுரங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு

தமிழ்நாடு மின் பகிர்மான கழக மேற்பார்வை பொறியாளர் திருமதி.அ.ஏஞ்சலா

சகாயமேரி அவர்கள் முன்னிலை வகித்தார்.

மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் வி.ஜெயசந்திர பானுரெட்டி இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேசிய மின்சிக்கன வார விழா டிசம்பர் 14 முதல் 20 வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சூரிய சக்தியை பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்து, மின் தேவையை குறைத்தல், தேவையில்லாமல் இயங்கம் விளக்குகள், மின் விசிறிகள் மற்றும் தொலைக்காட்சிப் பெட்டிகளை அணைத்தல், சாதாரண குண்டு பல்புக்கு பதிலாக சி.எப்.எஸ், எல்.ஈ.டி விளக்கை பயன்படுத்தி 60 சதவிகிதம் வரை மின்சாரத்தை சேமித்தல், மின் மோட்டாரில் ஐ.எஸ்.ஐ முத்திரையிட்ட மின் தேக்கியைப் பயன்படுத்தி மின்சாரத்தை சேமித்தல், நட்சத்திர குறியீடு கொண்ட மின்சாதனங்களை உபயோகித்து மின்சக்தியினை சேமித்தல், குழல் விளக்குகளில் எலக்ட்ரானிக் சோக்குகளை பயன்படுத்தி மின்சாரத்தை சேமித்தல், சூரிய ஒளி மூலம் நீர் சூடேற்றும் கருவியை பயன்படுத்தி மின்சாரத்தை சேமித்தல் உள்ளிட்ட மின் சேமிப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும்.

மேலும், திறன் மிக்க மின் சாதனங்களை தேர்வு செய்து, நன்கு பராமரித்து மின் செலவைக் குறைக்கலாம். மின் விசிறிகளில் எலக்ட்ரானிக் ரெகுலேட்டர்களைப் பயன்படுத்துதல், மின் மோட்டார்களுக்கு ஐ.எஎஸ்.ஐ முத்திரையிடப்பட்ட கெபாசிட்டர்களைப் பொருத்தல், மும்முனை மின்சாரத்தில் பம்புசெட்டை இயக்குதல், அனைவருக்கும் மின்சாரம் தொடர்ந்து கிடைக்க தேவைக்கேற்ப பம்புசெட்டை இயக்குதல், பம்புசெட்டுகளில் தகுந்த கெப்பாசிடர் பொருத்தி மின்சாரத்தை சேமித்தல்,
மின்சாரத்தை சேமிக்க குண்டு பல்புகளுக்கு பதிலாக குழல் விளக்குகள் / விளக்குகளைப் பயன்படுத்துவதன் மூலம் மின்சாரத்தை சேமிக்கலாம்.

மின் நுகர்வோர்கள் தங்கள் மின் இணைப்பின் மின் கட்டணம் குறித்த சந்தேகங்கள், புதிய மின் இணைப்பு தகவல்கள், பழுதடைந்த மீட்டர்கள், உடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின் கம்பங்கள், பழுதடைந்த மின் பெட்டிகள், ஆபத்தான நிலையில் உள்ள மின்மாற்றிகள், மின்தடை, குறைந்த மின்னழுத்தம் உள்ளிட்ட புகார்களுக்கு 24 மணி நேர சேவை மைய எண் 9498794987 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

மேலும், மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க அனைத்து மின்வாரிய பிரிவு அலுவலகங்களிலும் நவம்பர் 28 -ம் தேதி முதல் டிசம்பர் 31-ம் தேதி வரை சிறப்பு முகாம் நடைபெறும். https://adhar.tnebltd.org/Aadhaar/ என்ற இணையதள முகவரியிலும் தங்களது மின் இணைப்பில் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம்.

எனவே, வீடு, கைத்தறி, விசைத்தறி, குடிசை மற்றும் விவசாய மின் நுகர்வோர்கள் தங்களுடைய மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் வி.ஜெயசந்திர பானுரெட்டி இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

விழிப்புணர்வு பேரணியானது புதிய பேருந்து பேருந்து நிலையத்தில் துவங்கி ராயக்கோட்டை சாலை புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வழியாக மின்பகிர்மான மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தை அடைந்தது. இப்பேரணியில் மின் பகிர்மான கழக பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், மற்றும் அலுவலர்கள் பணியாளர்கள் என 500 க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு மின் பகிர்மான கழக மேற்பார்வை பொறியாளர் திருமதி.ஏஞ்சலா சகாயமேரி, செயற்பொறியாளர்கள் திரு. முத்துசாமி, திரு,கிருபானந்தம், திருமதி.இந்திரா, திருமதி.நிரஞ்சனா, உதவி இயக்குநர்கள் திரு.கந்தசாமி, திரு. அம்பேத்கார், திரு.பழனிவேல், திரு.மணிவேல், திரு.நாகராஜ், திரு.மணி, கிருஷ்ணகிரி வட்டாட்சியர் திரு.சம்பத் மற்றும் திரு.சம்பத் மற்றும் பொறியாளர்கள், அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.

You may also like

Add Comment
error: Content is protected !!