Home » ஊத்தங்கரையை அடுத்த சாமல்பட்டியில் ரயில் மறியலில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற காங்கிரஸ் கட்சியினரை சாமல்பட்டி போலீசார் கைது செய்தனர்.

ஊத்தங்கரையை அடுத்த சாமல்பட்டியில் ரயில் மறியலில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற காங்கிரஸ் கட்சியினரை சாமல்பட்டி போலீசார் கைது செய்தனர்.

by Babukanth V
0 comment

சாமல்பட்டியில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற காங்கிரஸ் கட்சியினர் 50 க்கும் மேற்பட்டோர் கைது.

ஊத்தங்கரை, மார்ச் . 29: ஊத்தங்கரை அடுத்த சாமல்பட்டி ரயில் நிலையத்தில், ராகுல்காந்தி எம்பி பதவியை டிஸ்மிஸ் செய்ததை கண்டித்து, ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற காங்கிரஸ் நிர்வாகிகள் 50 க்கும் மேற்பட்டோரை சாமல்பட்டி போலீஸôர் புதன்கிழமை கைது செய்தனர்.
போராட்டத்திற்க்கு காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளர் ஜெ.எஸ். ஆறுமுகம் தலைமை வகித்தார். சாமல்பட்டி ரயில் நிலையத்தில் புதன்கிழமை காலை சுமார் 9.50 மணிக்கு வரக்கூடிய இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே போலீஸôர் மற்றும் ஊத்தங்கரை வட்டாட்சியர் திருமலைராஜன், ஊத்தங்கரை காவல் துணை கண்காணிப்பாளர் அ.அமல அட்வின் தலைமையில் 50 க்கும், மேற்பட்ட போலீஸôர், ரயில் மறியலில் ஈடுபட முயன்ற காங்கிரஸ் கட்சியினரை, தடுத்து நிறுத்தி குண்டுகட்டாக தூக்கி சென்று கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். இதில் வட்டாரத் தலைவர்கள் திருமால், ரவிச்சந்திரன், நகர தலைவர் விஜயகுமார், மத்தூர் வட்டார தலைவர் மின்டிகிரி ரவி, கிருஷ்ணகிரி நகர தலைவர் லிலித் ஆண்டனி, முன்னாள் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் முத்து, வட்டார துணைத் தலைவர்கள் சுப்பிரமணி, முருகேசன்,துணைத் தலைவர் விவேகானந்தன், சமூக ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவர் கமலக்கண்ணன், சிங்காரப்பேட்டை ஊராட்சி மன்ற தலைவர் அகமத்பாஷா மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் தேவராஜன், சொக்கலிங்கம், இளையராஜா, கோவிந்தசாமி, மகி, அண்ணாதுரை, சபாபதி உள்பட காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளர் ஜெ.எஸ். ஆறுமுகம் செய்தியாளர்களிடம் கூறும்போது.

மோடி தலைமையிலான ஆட்சி ஜனநாயக படுகொலை மற்றும் சர்வதிகார ஆட்சி நடந்து வருகிறது. அரசியல்வாதிகளின் குரல்வலையை நசுக்குகிறது. இவ்வாறு அடக்குமுறை தொடர்ந்தால், காங்கிரஸ் கட்சியின் சார்பில், நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்பதை எச்சரிக்கையுடன் தெரிவித்தார்.

You may also like

Add Comment
error: Content is protected !!