Home » கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள எக்சோட்டிக் மாம்பழ கூழ் தொழிற்சாலையில் காவேரிப்பட்டணம் ரெட் கிராஸ் சார்பில் முதலுதவி பயிற்சி

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள எக்சோட்டிக் மாம்பழ கூழ் தொழிற்சாலையில் காவேரிப்பட்டணம் ரெட் கிராஸ் சார்பில் முதலுதவி பயிற்சி

by Poovizhi R
0 comment

ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் எக்சோட்டிக் மாம்பழ கூழ் தொழிற்சாலையில் முதலுதவி பயிற்சி நடத்தப்பட்டது.கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள எக்சோட்டிக் மாம்பழ கூழ் தொழிற்சாலையில் காவேரிப்பட்டணம் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் முதலுதவி பயிற்சி நடத்தப்பட்டது. இந்த பயிற்சியை தொழிற்சாலை மேலாளர் திரு.C.காசி, தரக்கட்டுப்பாட்டு மேலாளர் திரு. K.செந்தில்குமரன் ஆகியோர் முன்னிலையில் தொழிற்சாலை பொது மேலாளர் திரு ஜித்தேந்தர் சிங் துவக்க வைத்தார், இந்த முதலுதவி பயிற்சியில் பயிற்சியாளர்கள் திரு.S.M.வெங்கட்டாசலம், திரு.K.பழனிவேல், திரு.N.செந்தில்குமார் ஆகியோர் தொழிற்சாலை மற்றும் பொது இடங்களில் நடைபெறும் விபத்து காலங்களில் நாம் எவ்வாறு நம்மை தற்காத்துக் கொண்டு பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அவசர முதலுதவி அளித்து அவர்களை காப்பாற்றுவது என்றும் மாரடைப்பு, பாம்புக்கடி, தீக்காயங்கள் மற்றும் விபத்துக்களில் நாம் அங்கு இருக்கும் பொருட்களை கொண்டு முதலுதவி அளிப்பது என்று செயல் முறை விளக்கங்களுடன் விரிவாக பயிற்சி அளித்தனர் இந்த பயிற்சியில் தொழிற்சாலையில் பணிபுரியும் 30 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.*

You may also like

Add Comment
error: Content is protected !!