Home » போச்சம்பள்ளி மாங்காய் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் மாவில் பூச்சி கட்டுப்படுத்துவது குறித்து விழிப்புணர்வு கூட்டம்

போச்சம்பள்ளி மாங்காய் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் மாவில் பூச்சி கட்டுப்படுத்துவது குறித்து விழிப்புணர்வு கூட்டம்

by Poovizhi R
0 comment

போச்சம்பள்ளி மாங்காய் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் மாவில் பூச்சி கட்டுப்படுத்துவது குறித்து விழிப்புணர்வு கூட்டம் – 200க்கும் மேற்பட்ட மா விவசாயிகள் பங்கேற்புகிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி மாங்காய் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பாக இன்று தனியார் மண்டபத்தில் மாவில் பூச்சி கட்டுப்படுத்துவது குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திதை தலைமையேற்று நடத்திய போச்சம்பள்ளி மாங்காய் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் சிற்றரசு பேசியதாவது, மாவில் பூச்சிகளின் தாக்குதல் அதிகமாக உள்ளது. இதனால் இந்த ஆண்டு மா உற்பத்தி பெருமளவு பாதிப்படைந்துள்ளது. மாவில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி, மா உற்பத்தியை அதிகரிப்பது எப்படி என்பது குறித்து சிறப்பு வல்லுனர்களை வைத்து மா விவசாயிகளுக்கு விளக்க இக்கூட்டம் நடைபெற்று வருகிறது என தெரிவித்தார். மா விவசாயத்தில் பூச்சி மற்றும் நோய் ஏற்படுத்தும் காரணிகள் மற்றும் அவற்றை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து சசிகுமார் விளக்கினார். தாவர வளர்ச்சி, ஊக்கி மற்றும் மா உற்பத்தி அதிகரிப்பு குறித்து பவித்ர அயன்ராஜ் அவர்கள் விளக்கினார். போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

You may also like

Add Comment
error: Content is protected !!