Home » கெலமங்கலம் பேரூராட்சி கணேசா காலணி ஊராட்சி ஒன்றிய தமிழ் தொடக்கப்பள்ளியில் ரூ69.70 இலட்சம் மதிப்பீட்டில் 4 வகுப்பறை கட்டிடம் கட்ட தளி எம்எல்ஏ டி.ராமச்சந்திரன் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்

கெலமங்கலம் பேரூராட்சி கணேசா காலணி ஊராட்சி ஒன்றிய தமிழ் தொடக்கப்பள்ளியில் ரூ69.70 இலட்சம் மதிப்பீட்டில் 4 வகுப்பறை கட்டிடம் கட்ட தளி எம்எல்ஏ டி.ராமச்சந்திரன் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்

by Poovizhi R
0 comment

கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியம் கெலமங்கலம் பேரூராட்சி கணேசா காலணியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தமிழ் தொடக்கப்பள்ளியில் பேராசிரியர் க அன்பழகன் குழந்தைகள் நேய பள்ளிக் கட்டட நிதி ரூ. 69.70 இலட்சத்தில் 4 வகுப்பறைகள் கட்ட தளி சட்டமன்ற உறுப்பினர் டி.ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டினார் இவ்விழாவில் தேன்கனிக்கோட்டை உதவி செயற் பொறியாளர் கே இராஜேந்திரன் தலைமை தாங்க வட்டாரக் கல்வி அலுவலர் கிருஷ்ண தேஜஸ் , துணை வட்டார வளர்ச்சி அலுவலர் விவேகானந்தன் , பேரூராட்சித் தலைவர் தேவராஜ் முன்னிலை வகிக்க, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திம்மராயப்பா பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் பள்ளி மேலாண்மைக் குழு பொறுப்பாளர்கள் , பெற்றோர் பொதுமக்கள் பெருந்திரளாக பங்கேற்றனர் கட்டட ஒப்பந்ததாரர் சக்தி பில்டர்ஸ் சேகர் சிறப்பு விருந்தினர்களுக்கு கதராடை அணிவிக்க பள்ளி தலைமை ஆசிரியர் சீனி சாரதி அனைவரையும் வரவேற்க ஆசிரியர்கள் சத்துணவு அமைப்பாளர் விழா ஏற்பாடுகளை சிறப்புற செய்தனர் இறுதியில் ஆசிரியர் கு பிரதீபா நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது

You may also like

Add Comment
error: Content is protected !!