Home » ரமலான் பண்டிகை முன்னிட்டு கிருஷ்ணகிரி குந்தாரப்பள்ளி சந்தையில் ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனை

ரமலான் பண்டிகை முன்னிட்டு கிருஷ்ணகிரி குந்தாரப்பள்ளி சந்தையில் ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனை

by Poovizhi R
0 comment

ரமலான் பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் விற்பனை களைகட்டி உள்ளது. கிருஷ்ணகிரி அருகே குந்தாரப்பள்ளி ஆட்டுசந்தையில் ஒரே நாளில் ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகியுள்ளது. உலக முழுவதும் ரமலான் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது இதை ஒட்டி தமிழ்நாட்டில் உள்ள முக்கிய சந்தைகளில் ஆடுகள் விற்பனை களைகட்டி உள்ளது. கிருஷ்ணகிரி அருகே புகழ்பெற்ற குந்தாரப்பள்ளி ஆட்டுச்சந்தையில் உள்ளூர், வெளியூர் மட்டுமல்லாது ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்து 10,000 ஆடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன.வியாபாரிகள் ஆடுகளை போட்டிபோட்டு வாங்கி சென்றனர். 10 கிலோ எடைகொண்ட கிடா ரூ.13,000க்கும் சாதாரண ஆடு ரூ.9,000க்கும் குந்தாரப்பள்ளி சந்தையில் ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகியுள்ளன.

You may also like

Add Comment
error: Content is protected !!