Home » தேன்கனிக்கோட்டை வட்டம் எச் செட்டிப்பள்ளி ஊராட்சி கூடூர் கிராமத்தில் ஆதி திராவிடர் காலனிக்கு தார் சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டதை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

தேன்கனிக்கோட்டை வட்டம் எச் செட்டிப்பள்ளி ஊராட்சி கூடூர் கிராமத்தில் ஆதி திராவிடர் காலனிக்கு தார் சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டதை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

by Poovizhi R
0 comment

ஆதிதிராவிடர் காலனிக்கு தார் சாலை கழிவு நீர் கால்வாய் அமைத்ததை அரசு அதிகாரி பார்வையிட்டனர்.கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம் எச் செட்டிப்பள்ளி ஊராட்சியில் உள்ள கூடூர் கிராமத்தில் ஆதி திராவிடர் காலனிக்கு சுமார் 30 ஆண்டுகளாக சாலை வசதி இல்லாமல் அவதிப்பட்டனர். இப்பொழுது ஊராட்சித் தலைவர் மஞ்சுநாத் அவர்கள் முயற்சியால் அரசு திட்டம் 14 ஆவது மாநில குழு திட்டத்தின் 14 லட்சம் ரூபாயில், ஆதிதிராவிடர் காலனிக்கு தார் சாலை கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டது.இந்தப் பணிகளை பார்வையிட்ட அரசு அதிகாரிகள் A.D ராஜேந்திரன், இன்ஜினியர் முருகேஷ், ஊராட்சித் தலைவர் மஞ்சுநாத்,இவர்கள் தார் சாலை கழிவுநீர் கால்வாய் அமைத்ததை நேரில் பார்வையிட்டனர். அப்பொழுது அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் சாலை கழுவு நீர் கால்வாய் அமைத்து தந்ததற்கு ஊராட்சி தலைவர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

You may also like

Add Comment
error: Content is protected !!