Home » கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கல்லூரி கணிதவியல் துறை மாணவ மாணவியர் மூன்று நாட்கள் கல்வி களப்பயணம்.

கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கல்லூரி கணிதவியல் துறை மாணவ மாணவியர் மூன்று நாட்கள் கல்வி களப்பயணம்.

by Poovizhi R
0 comment

கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கல்லூரி கணிதவியல் துறை மாணவ மாணவியர் மூன்று நாட்கள் கல்வி களப்பயணம்.கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் மூன்று நாட்கள்( 17,18,19 – 04 -2023) களப்பயணமாக உதகமண்டலம் தேயிலை தொழிற்சாலை நிறுவனத்திற்கு சென்றனர். கல்வி களப்பயணம் மேற்கொண்ட மாணவ மாணவியர்களுக்கு கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் சு. தனபால் அவர்கள் பாராட்டு தெரிவித்தார். கல்வி களப்பணியில்கல்லூரியின் கணிதவியல் துறை தலைவர் P.செந்தில் அவர்கள் மற்றும் உதவி பேராசிரியர்களான திரு திருப்பதி, திரு M.கணேஷ்குமார் திருமதி பிரபா, திருமதி டெய்ஸி , திருமதி சந்திரலேகா, ஆகியோர் மூன்று நாட்கள் கல்வி சுற்றுலாவிற்கு உதக மண்டலம், கோயம்புத்தூர் ,மதுரை , பழனி மலை ஆழியாறு ,வைகை நதி, திருப்பரங்குன்றம், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆகிய இடங்களின் சிறப்புகளை மாணவ மாணவியர்களுக்கு மிகச் சிறப்பாக எடுத்துரைத்து வழிகாட்டினர் என்பது குறிப்பிடத் தக்கது.

You may also like

Add Comment
error: Content is protected !!