Home » கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே கோப சந்தரத்தில் கார் மற்றும் இரண்டு சக்கர வாகனங்களுக்கான எலக்ட்ரிக் சார்ஜ் பங்க் ( jeeva bunk) திறக்கப்பட்டுள்ளது .

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே கோப சந்தரத்தில் கார் மற்றும் இரண்டு சக்கர வாகனங்களுக்கான எலக்ட்ரிக் சார்ஜ் பங்க் ( jeeva bunk) திறக்கப்பட்டுள்ளது .

by Poovizhi R
0 comment

எலக்ட்ரிக் சார்ஜ் பங்க் திறப்புகிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே கோப சந்தரத்தில் கார் மற்றும் இரண்டு சக்கர வாகனங்களுக்கான எலக்ட்ரிக் சார்ஜ் பங்க் ( jeeva bunk) திறக்கப்பட்டுள்ளது . தற்போது எலக்ட்ரிக் இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது .சுற்று சூழல் பாதுகாப்பு , மாசு படுவதை கட்டுப்படுத்துதல் ஆகிவற்றை மையமாக வைத்து இந்த வாகனங்கள் அதிகளவு பயன்பாட்டில் உள்ளது . சூளகிரி அறிகே கோபச்சந்திரத்தில் தேசிய நெடுஞ்சாலையில் திறக்கப்பட்டுள்ள இந்த எலக்ட்ரிக் சார்ஜ் பன் மூலமாக தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் மிகவும் பயன்பெறுவார்கள் .குறிப்பாக வாகனங்களுக்கு charge செய்யாமல் அவசரமாக எடுத்து வரும் பலரும் தாங்கள் தொடர்ந்து செல்ல முடியுமா இல்லை வழியிலேயே வண்டி நின்று விடுமா என்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை . மிகக் குறைந்த கட்டணத்தில் வாகனங்களுக்கு சார்ஜ் செய்து தொடர்ந்து செல்ல இயலும் .கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் தற்போது முதல் முறையாக தொடங்கப்பட்டுள்ள இந்த எலக்ட்ரிக் சார்ஜ் பங்க் , எலக்ட்ரிக் கார் மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் பயன்படுத்துவோர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

You may also like

Add Comment
error: Content is protected !!