Home » கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் அகில இந்திய அளவிலான கபடிப்போட்டியை டாக்டர் செல்லக் குமார் எம்பி துவக்கிவைத்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் அகில இந்திய அளவிலான கபடிப்போட்டியை டாக்டர் செல்லக் குமார் எம்பி துவக்கிவைத்தார்.

by Poovizhi R
0 comment

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே காமராஜர் பிரதர்ஸ் சார்பில் நடத்தப்படும் அகில இந்திய அளவிலான கபடிப்போட்டியை காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செல்லக் குமார் துவக்கிவைத்தார்..கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள மடத்தாதூர் கிராமத்தில் காமராஜர் பிரதர்ஸ் சார்பில் 43-ம் ஆண்டு தென் இந்திய அளவிலான மாபெரும் கபடி போட்டி துவங்கியது,இப்போட்டியில் தமிழகம், கேரளா, புனே, கர்நாடகா, பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்து ஆண்கள் 24 அணியும், பெண்கள் 24 அணியும் கலந்துக்கொண்டுள்ளன,மூன்று நாள்கள் நடத்தப்பட உள்ள இந்தப்போட்டிகளை கிருஷ்ணகிரி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செல்லக் குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்டு துவக்கப் போட்டிகளை துவக்கிவைத்தார்.இதனை அடுத்து ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கபடிப்போட்டிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது,மின்னெளியில் நடத்தப்பட்டுவரும் இந்த விளையாட்டுப்போட்டிகளை ஏராளமானவர்கள் கண்டு களித்தனர்.இறுதிப்போட்டிகளில் வெற்றிப் பெறும் அணிகளுக்கு முதல் பரிசாக ஒரு லட்சமும், இரண்டாம் பரிசாக 75 ஆயிரமும், மூற்றாம் பரிசு மற்றும் நாங்காம் பரிசாக தலா 50 ஆயிரம் உள்ளிட்ட பல்வேறுப் பரிசுகள் மற்றும் கேடயங்களும் வழங்கப்பட உள்ளது.இந்தப் போட்டியின்போது முன்னால் சட்டமன்ற உறுப்பினர் இராஜேந்திரன், முன்னால் காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் காசிலிங்கம், நாஞ்சில் ஜேசு, மாவட்டத் துணைத்தலைவர் சேகர், விவேகானந்தன், மாநில பொதுசெயலாளர் ஆறுமுகம், மாநில இளைஞர் அணி பொது செயலாளர் விக்னேஷ் பாபு, ஆடிட்டர் வடிவேல், வட்டாரத் தலைவர் மிண்டிகிரி ரவிசந்திரன், அமைப்புசார தொழிலாளர் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் சிவலிங்கம், மடத்தானூர் ஆறுமுகம் உள்ளட்ட ஏராளமானவர்கள் கலந்துக்கொண்டனர்கள்.இந்த விழாவிற்கான ஏற்படுகளைமாவட்ட அமைஞ்சூர் கபடிகுழுத் தலைவர் குமார், துணைச் செயலாளர் விக்ரமன், செயலாளர் சக்கரவர்த்தி, துணைத்தலைவர் சரவணன் உள்ளிட்ட பலர் சிறப்பாக செய்துவருகின்றனர்.

You may also like

Add Comment
error: Content is protected !!