Home » வடமலம்பட்டி கிராமத்தில் ரமலான் சிறப்பு தொழுகை 100-க்கும்மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

வடமலம்பட்டி கிராமத்தில் ரமலான் சிறப்பு தொழுகை 100-க்கும்மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

by Poovizhi R
0 comment

வடமலம்பட்டி கிராமத்தில் ரமலான் சிறப்பு தொழுகை 100-க்கும்மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.போச்சம்பள்ளி அடுத்த வடமலம்பட்டி கிராமத்தில் இஸ்லாமியர்களின் ஈகைத் திருநாளாம் ரமலான் பண்டிகை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று மாலை பிறை தெரிந்த நிலையில் ரமலான் பண்டிகை கொண்டாட்டம் தொடங்கியது. இஸ்லாமியர்கள் புனித கடைமைகளில் ஒன்றாக ரமலான் நோன்பு கடைபிடித்து வருகின்றனர்.கடந்த ஒரு மாத காலமாக உண்ணா நோன்பை கடைபிடித்து வந்தனர். புனித ரமலான் மாதத்தில் ஏழைகளுக்கு உதவுவது இறைவனுக்கு செய்வது என இஸ்லாமியர்கள் ஏழை, எளிய மக்களுக்கு தங்களால் முடிந்த அளவுக்கு பொருட்களை வழங்கி வந்தனர். இந்நிலையில் ரமலான் ரம்ஜான் பண்டிகை முன் நாட்டு கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம் வடமலம்பட்டி கிராமத்தில் ஈஃத்கா மைதானத்தில் காலை ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் புளியம்பட்டி ஊராட்சி மன்ற தலைவரும் தொழில் அதிபருமான எஸ்.ஆர். ரங்கநாதன் மற்றும் மாலிக்,சர்தார், அமீர், இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.இதை தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.ஆர். ரங்கநாதனுக்கு ஊர் பொதுமக்கள் இஸ்லாமியர்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் தங்களது நண்பர்கள், உறவினர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து. கட்டித் தழுவி அன்பை பரிமாறிக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் ஏராளமான ஆண்கள், குழந்தைகள் கலந்து கொண்டு மகிழ்ச்சியை கொண்டாடினர்.

You may also like

Add Comment
error: Content is protected !!