Home » மக்களின் தேவைகள் மற்றும் அரசு நலத்திட்டங்கள் கிடைத்திட வழிவகை செய்ய முகாம் நடத்துவது குறித்த மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.

மக்களின் தேவைகள் மற்றும் அரசு நலத்திட்டங்கள் கிடைத்திட வழிவகை செய்ய முகாம் நடத்துவது குறித்த மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.

by Poovizhi R
0 comment

பாதிக்கப்பட்ட மற்றும் விளிம்பு நிலை மக்களின் தேவைகள் மற்றும் அரசு நலத்திட்டங்கள் கிடைத்திட வழிவகை செய்ய முகாம் நடத்துவது குறித்த மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருதீபக் ஜேக்கப் இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் நடைபெற்றது.கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், (TNSRLM) மாவட்ட இயக்க மேலாண்மை அலகு சார்பாக வட்டார அளவில் பாதிக்கப்பட்ட மற்றும் விளிம்பு நிலை மக்களின் தேவை குறித்து கண்டறியும் முகாம் நடத்துவது மற்றும் அரசு நலத்திட்டங்கள் கிடைத்திட வகை செய்தல் குறித்து மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தீபக் ஜேக்கப் இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் (21.04.2023) அன்று நடைபெற்றது.மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தாவது:வட்டார அளவில் பாதிக்கப்பட்ட மற்றும் விளிம்பு நிலை மக்களின் தேவை குறித்து கண்டறிதல், அடையாள அட்டை, உதவி தொகை, பராமரிப்பு மானியம், உதவிகள் மற்றும் உபகரணங்கள், வாழ்வாதார மேம்பாட்டிற்கான திறன் பயிற்சிகள், வங்கி கடன் இணைப்பு, வீடு கட்டும் திட்டம், ஆகியவைகள் கிடைத்திட வகை செய்தல், நலிவுற்ற மக்களுக்கு தனித் தனியே தகவல் தெரிவித்து முகாமில் கலந்துகொள்ள செய்திடல் வேண்டும்.தொடர்ந்து மாவட்ட அளவில் துறைகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டு பின்னர் முகாம் ஏற்பாடு செய்தல் வேண்டும். மேலும் தொடர்புடைய துறைகளுடன் ஒருங்கிணைந்து பயனாளிகளின் தேவைகள் மற்றும் வழங்கப்பட்ட உதவிகள் விவரம் பதிவேடுகளில் பதியப்பட வேண்டும். விளிம்பு நிலை, நலிவுற்ற, மாற்றுதிறனாளிகள், விதவைகள், முதியோர்கள் ஆகியோர்களை கண்டறிந்து உரிய வகைளில் நல உதவிகள் வழங்கிட தொடர்புடைய துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.தீபக் ஜேக்கப் இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்தார்.இவ்வாய்வுக் கூட்டத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், (TNSRLM) மாவட்ட இயக்க மேலாண்மை அலகு திட்ட அலுவலர் திரு.ஜாகீர் உசேன், உதவி திட்ட அலுவலர் (கணக்கு மற்றும் நிர்வாகம்) திரு.ரகு, உதவி திட்ட அலுவலர் திரு.தேவராஜ், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் திருமதி.ஜெயந்தி, உதவி திட்ட அலுவலர்கள் திரு.பிரகாபர், திரு.பெருமாள் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.

You may also like

Add Comment
error: Content is protected !!