Home » கிறித்துவ தேவாலயங்களை பழுது பார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள்மேற்கொள்வதற்கு அரசு நிதி உதவி வழங்கும் திட்டம் – மாவட்ட ஆட்சியர் தகவல்

கிறித்துவ தேவாலயங்களை பழுது பார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள்மேற்கொள்வதற்கு அரசு நிதி உதவி வழங்கும் திட்டம் – மாவட்ட ஆட்சியர் தகவல்

by Poovizhi R
0 comment

கிறித்துவ தேவாலயங்களை பழுது பார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள்மேற்கொள்வதற்கு அரசு நிதி உதவி வழங்கும் திட்டம்கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிறித்துவ தேவாலயங்களை பழுது பார்த்து சீரமைத்து கொள்ள ஏதுவாக தேவாலய நிர்வாகிகள் விண்ணப்பித்து பயனடையலாம் என மாவட்ட ஆட்சித்தலைவா திரு.தீபக் ஜேக்கப் இ.ஆ.ப அவர்கள் தகவல்.தமிழ்நாட்டில் சொந்த கட்டங்களில் இயங்கும் கிறித்துவ தேவாலயங்களை பழுது பார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு 2016-17 ஆம் ஆண்டு முதல் நிதி உதவி வழங்கும் திட்டம் அரசால் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் தற்போது கூடுதல் பணிகளாக தேவாலயங்களில் பீடம் கட்டுதல், கழிவறை வசதி அமைத்தல் மற்றும் குடிநீர் வசதிகள் செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது, 10 முதல் 15 வருடம் பழமையான கட்டடங்களுக்கு ரூ.2 இலட்சமும், 15 முதல் 20 வருடம் பழமையான கட்டடங்களுக்கு ரூ.4 இலட்சமும், 20 வருடங்களுக்கு மேற்பட்ட கட்டடங்களுக்கு ரூ.6 இலட்சமும் மானியத் தொகை உயர்த்தி வழங்கப்படுகிறது.மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழுவால் பெறப்படும் விண்ணப்பங்களைஅனைத்து உரிய ஆவணங்களுடன் பரிசீலித்து, கிறித்துவ தேவாலயங்களை ஸ்தல ஆய்வுமேற்கொள்ளப்படும். கட்டடத்தின் வரைப்படம் மற்றும் திட்ட மதிப்பீடு ஆகியவற்றுடன்தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்து உரிய முன்மொழிவுகளுடன் சிறுபான்மையினர் நலஇயக்குநருக்கு நிதியுதவி வேண்டி பரிந்துரை செய்யப்படும். நிதி உதவி இரு தவணைகளாகதேவாலயத்தின் வங்கி கணக்கில் மின்னணு பரிவர்த்தனை மூலம் செலுத்தப்படும்.எனவே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிறித்துவ தேவாலயங்களை பழுது பார்த்து சீரமைத்து கொள்ள ஏதுவாக தேவாலய நிர்வாகிகள் விண்ணப்பித்து பயனடையலாம். மேலும், கூடுதல் விவரங்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை (அறை எண்.11) தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் திரு.தீபக் ஜேக்கப்.இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

You may also like

Add Comment
error: Content is protected !!