Home » அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக படைப்பாற்றல் மற்றும் கண்டுப்பிடிப்பு தின விழா.

அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக படைப்பாற்றல் மற்றும் கண்டுப்பிடிப்பு தின விழா.

by Poovizhi R
0 comment

அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக படைப்பாற்றல் மற்றும் கண்டுப்பிடிப்பு தின விழா.கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 21.04 2023.அன்று உலக படைப்பாற்றல் மற்றும் கண்டுபிடிப்பு தின விழா நடைபெற்றது. அறிஞர் அண்ணா கல்லூரி IIC மற்றும் IQAC இனைந்து நடத்தப்பட்டது. முனைவர் ராஜலட்சுமி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் சு.தனபால் அவர்கள் தலைமை தாங்கினார். அவருடைய தலைமை உரையில் மாணவர்கள் புதிய புதிய கண்டுபிடிப்புகளை அறிவியல் சம்பந்தமான பல்வேறு நிகழ்ச்சிகளை நாட்டின் முன்னேற்றத்திற்காக மாணவர்கள் அறிவியல் வளர்ச்சியை வளர்த்துக் கொள்ள வேண்டும். என்று தனது தலைமுறையில் பேசினார். மேலும் சிறப்பு விருந்தினர்களாக கிருட்டினகிரி அரசு ஆடவர் கல்லூரி தாவரவியல் துறைத் தலைவர் முனைவர் வி ரவி அவர்கள் மற்றும் திருவி. சங்கர் அவர்கள் விழாவில் கலந்துகொண்டு மாணவர்கள் தங்களுடைய படைப்பாற்றலை வெளிப்படுத்த வேண்டும் என்றும் அவற்றை இந்த சமூகத்திற்க்கு உருவாக்க வேண்டும் சிறப்புரை ஆற்றினார்கள். மேலும் இவ்விழாவின் இறுக் நிகழ்வாக முனைவர் ஜே கரோலின் ரோஸ் நன்றியுரை கூறினார்.

You may also like

Add Comment
error: Content is protected !!