Home » கிருஷ்ணகிரி கந்திகுப்பம் அருகே ஸ்ரீகாலபைரவர் திருக்கோவிலில் பக்தர்களின் வசதிக்காகபுதியதாக கட்டிமுடிக்கப்பட்டுள்ள கழிப்பிட கட்டிடத்தினை கே.அசோக்குமார் எம்எல்ஏ திறந்துவைத்தார்.

கிருஷ்ணகிரி கந்திகுப்பம் அருகே ஸ்ரீகாலபைரவர் திருக்கோவிலில் பக்தர்களின் வசதிக்காகபுதியதாக கட்டிமுடிக்கப்பட்டுள்ள கழிப்பிட கட்டிடத்தினை கே.அசோக்குமார் எம்எல்ஏ திறந்துவைத்தார்.

by Poovizhi R
0 comment

கிருஷ்ணகிரி அருகே அமைந்துள்ள ஸ்ரீகாலபைரவர் திருக்கோவிலில் பக்தர்களின் வசதிக்காகபுதியதாக கட்டிமுடிக்கப்பட்டுள்ள கழிப்பிட கட்டிடத்தினை சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் திறந்துவைத்தார்.கிருஷ்ணகிரி அருகே உள்ள பெரிய ஏரிக்கரையில் 136 கிராம மக்களுக்கு சொந்தமான ஸ்ரீகாலபைரவர் திருக்கோவில் அமைந்துள்ளது,இந்தக் கோவிலுக்கு நாள்தோறும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வதால்பக்தர்களின் வசதிக்காக நவின முறையில் கழிப்பிட கட்டிடம் கட்டிமுடிக்கப்பட்டது.இதன் திறப்பு விழா ஸ்ரீ காலபைரவர் திருக்கோவிலின் தலைவர் வேலாயுதன் தலைமையில் நடைப்பெற்ற இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அசோக் குமார் கலந்துக்கொண்டு புதியதாக கட்டிமுடிக்கப்பட்ட கழிப்பிட கட்டிடத்தினை பக்தர்களின் பயன்பாட்டுக்கு திறந்துவைத்தார்.இதனைத் தொடர்ந்து ஸ்ரீ காலபைரவர் கோவிலில் நடைப்பெற்ற சிறப்பு பூஜைகளிலும் கலந்துக்கொண்டு சிறப்பித்தார்.அப்பேது ஸ்ரீகால பைரவர் சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும், அலங்கார தீபாதரனைகளும் நடைப்பெற்றது.மேலும் இந்த விழாவின்போது கௌரவத் தலைவர் சேகர், முன்னால் மாவட்ட செயலாளர் தென்னரசு, ,அதிமுக ஒன்றிய செயலாளர்கள் சோக்காடி ராஜன், கண்னியப்பன், ஒன்றிய குழு உறுப்பினர் ஜெயராமன், கார்த்திக்பால்ராஜ், மற்றும் ஸ்ரீகாலபைரவர் திருக்கோவிலின் தர்மகர்த்தா பைரோஸ், பெருலாளர் ஜெயராமன், செயலாளர் கணேசன், கோவில்பூசாரி அரி, மற்றம் சுப்பிரமணியன், கோபால், சங்கராச்சாரி, கிருஷ்ணன், தம்பிராஜ் உள்ளிட்ட ஸ்ரீகாலபைரவர் திருக்கோவில் நிர்வாகிகள் என பலர் கலந்துக்கொண்டனர்கள்.

You may also like

Add Comment
error: Content is protected !!