Home » போச்சம்பள்ளி வாரச்சந்தைக்கு புளி வரத்து அதிகரிப்பு – 20 டன்னுக்கும் மேற்பட்ட புளி வரத்தால் வியாபாரிகள் மகிழ்ச்சி.

போச்சம்பள்ளி வாரச்சந்தைக்கு புளி வரத்து அதிகரிப்பு – 20 டன்னுக்கும் மேற்பட்ட புளி வரத்தால் வியாபாரிகள் மகிழ்ச்சி.

by Poovizhi R
0 comment

போச்சம்பள்ளி வாரச்சந்தைக்கு புளி வரத்து அதிகரிப்பு – 20 டன்னுக்கும் மேற்பட்ட புளி வரத்தால் வியாபாரிகள் மகிழ்ச்சிகிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வாரச்சந்தைக்கு புளி வரத்து அதிகரித்து காணப்பட்டது. விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் விளையும் புளிகளை போச்சம்பள்ளி வாரச்சந்தைக்கு எடுத்து வந்து விற்பது வழக்கம். கடந்த ஒரு மாதமாக புளி வரத்து இருந்த போதும் இந்த வாரம் புளி வரத்து அதிகரித்து காணப்பட்டது. அந்த வகையில் கொட்டை எடுக்கப்பட்ட புளி கிலோ ஒன்றுக்கு ரூ.80 ரூபாய் வரையிலும், கொட்டை எடுக்கப்படாத புளி கிலோ ஒன்றுக்கு ரூ.35 ரூபாய் வரையிலும் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டும் இதே விலை இருந்ததால், இந்த ஆண்டு விலை சற்று அதிகரித்திருக்கும் என எதிர்பார்த்த விவசாயிகளுக்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது. அதிகாலை 5 மணி முதல் 8 மணி வரை மட்டுமே நடைபெறும் இப்புளி சந்தையில் இன்று மட்டும் 20 டன் புளி வந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். சேகரிக்கப்படும் புளிகளை கடலூர், திண்டிவணம், திருவண்ணாமலையை சேர்ந்த வியாபாரிகள் வாங்கி சென்றுவிடுவதாக தெரிவித்தனர்.

You may also like

Add Comment
error: Content is protected !!