Home » தெண்பெண்ணை ஆற்று கூட்டு குடிநீர் திட்ட பைப் லைனில் உடைப்பு ஏற்பட்டு ஒரு மாத காலமாக தண்ணீர் வீணாகி வெளியேறி வருவதால் தண்ணீருக்கு தட்டுப்பாடு.

தெண்பெண்ணை ஆற்று கூட்டு குடிநீர் திட்ட பைப் லைனில் உடைப்பு ஏற்பட்டு ஒரு மாத காலமாக தண்ணீர் வீணாகி வெளியேறி வருவதால் தண்ணீருக்கு தட்டுப்பாடு.

by Poovizhi R
0 comment

தெண்பெண்ணை ஆற்று கூட்டு குடிநீர் திட்ட பைப் லைனில் உடைப்பு ஏற்பட்டு ஒரு மாத காலமாக தண்ணீர் வீணாகி வெளியேறி வருவதால் தண்ணீருக்கு தட்டுப்பாடு கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி தாலுக்காவிற்குட்பட்ட மத்தூர், புளியம்பட்டி, அரசம்பட்டி, புலியூர் உள்ளிட்ட 10ற்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு அரசம்பட்டி அருகே உள்ள தென்பெண்ணை ஆற்றிலுள்ள கிணற்றிலிருந்து தண்ணீர் மின்மோட்டார் மூலம் ஏற்றம் செய்யப்படுகிறது. நாளொன்றுக்கு சுமார் 10 லட்சம் லிட்டர் தண்ணீரை ஏற்றம் செய்யும் கிணற்றிலுள்ள பைப்புகள் உடைந்து கடந்த ஒரு மாத காலமாக தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. கிணற்றிலிருந்து எடுக்கப்படும் நீர் வெளியே செல்லும்போது உடைந்த பைப்பில் பாதி வெளியேறி விடுகிறது. மீதமுள்ள தண்ணீரே கிராமங்களுக்கு செல்கிறது. இதன் காரணமாக கடந்த ஒரு மாத காலமாக கிராமங்களுக்கு முழுமையாக தண்ணீர் கிடைக்காமல் தட்டுப்பாடு நிலவி வருகிறது. உடைப்பட்ட பைப் லைனை முழுவதுமாக மாற்றி புதிய பைப் லைன் அமைத்து கிராமங்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து தெண்பெண்ணை ஆற்று கூட்டு குடிநீர் வினியோக உதவி பொறியாளர் பன்னீர் செல்வம் அவர்களிடம் கேட்டபோது, 1996ம் ஆண்டு துவக்கப்பட்ட இத்திட்டத்தில் மோட்டார் முதல் பைப் லைன் வரை தொடர்ந்து பழுதாகி வருகிறது. போதிய நிதி உதவி இல்லாமல் காலம் கடந்து வருகிறது. கூடிய விரைவில் சரி செய்யப்படும் என தெரிவித்தார்.

You may also like

Add Comment
error: Content is protected !!