Home » காணத்தக்க கிருஷ்ணகிரி என்ற விழிப்புணர்வுச் சுற்றுலாத் திட்டத்தின் கீழ் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை அஞ்செட்டி அருகிலுள்ள மெட்ரி அருவிக்கு மரபு நடை மேற்கொள்ளப்படும்

காணத்தக்க கிருஷ்ணகிரி என்ற விழிப்புணர்வுச் சுற்றுலாத் திட்டத்தின் கீழ் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை அஞ்செட்டி அருகிலுள்ள மெட்ரி அருவிக்கு மரபு நடை மேற்கொள்ளப்படும்

by Poovizhi R
0 comment

காணத்தக்க கிருஷ்ணகிரி என்ற விழிப்புணர்வுச் சுற்றுலாத் திட்டத்தின் கீழ் 14.5.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று அஞ்செட்டி அருகிலுள்ள மெட்ரி அருவிக்கு மரபு நடை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தீபக் ஜேக்கப் இ.ஆ.ப., அவர்கள் தகவல்.காணத்தக்க கிருஷ்ணகிரி என்ற விழிப்புணர்வுச் சுற்றுலாத் திட்டத்தின் கீழ் இம்மாவட்டத்தில் காணப்படும் பல்வேறு வரலாற்று சின்னங்கள், கலாச்சரா பெருமை கொண்ட இடங்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை அனைவரும் அறிந்து கொள்ளவும், அவற்றை பாதுகாக்கவும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் மாவட்ட நிர்வாகம் “காணத்தக்க கிருஷ்ணகிரி” என்ற விழிப்புணர்வுச் சுற்றுலா (AwarenessTourism)த் திட்டத்தை 29.4.2023 அன்று தொடங்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து வருகின்ற 14.5.2023 ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணிக்கு அஞ்செட்டி அருகிலுள்ள மெட்ரி அருவிக்கு மரபு நடை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதில், மாவட்ட ஆட்சித்தலைவர், உயர் அலுவலர்கள், வரலாற்று ஆர்வலர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆர்வமுள்ள பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொள்கிறார்கள். பொதுமக்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் தொடர்ந்து இத்திட்டத்தில் கலந்து கொண்டு நம்மாவட்டத்தின் தொன்மை சிறப்புகளை அறியவும், பாதுகாக்கவும் வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தீபக் ஜேக்கப் இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

You may also like

Add Comment
error: Content is protected !!