Home » தருமபுரி எம்எல்ஏ எஸ்.பி.வெங்கடேஷ்வரன் தலைமையில் டொக்குபோதனஅள்ளி கிராம தபால் நிலையத்தில் இருந்து முதல்வருக்குகடிதம் அனுப்பப்பட்டது

தருமபுரி எம்எல்ஏ எஸ்.பி.வெங்கடேஷ்வரன் தலைமையில் டொக்குபோதனஅள்ளி கிராம தபால் நிலையத்தில் இருந்து முதல்வருக்குகடிதம் அனுப்பப்பட்டது

by Poovizhi R
0 comment

மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான 20 விழுக்காடு இடஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு 2023-24ஆம் கல்வி ஆண்டிலாவது வழங்கும் வகையில் வன்னியர் இடஒதுக்கீடுச் சட்டத்தை தமிழக அரசு மே- 31ஆம் தேதிக்குள் நிறைவேற்றி, சமூக நீதியை நிலைநாட்ட வேண்டுமென வலியுறுத்தி மாண்புமிகு, தமிழக முதல்வருக்கும், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவருக்கும் கடிதம் அனுப்பும் நிகழ்வு நடைபெற்றது. தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், டொக்குபோதனஅள்ளி ஊராட்சி, கெட்டுப்பட்டி கிராமத்திலுள்ள பொதுமக்கள் சுமார் 500 பேர் டொக்குபோதனஅள்ளி கிராமத்தில் அமைந்துள்ள தபால் நிலையத்தில், தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் தலைமையில், பசுமைத் தாயக மாவட்ட துணை செயலாளர் எம். தமிழரசன் ஏற்பாட்டில் அஞ்சல் வழியில் கடிதம் அனுப்பி வைத்தனர். இந்நிகழ்வில், மாநில செயற்குழு உறுப்பினர் பெ. பெரியசாமி, வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் இ.மா.பாலகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர் வ.அறிவு, ஒன்றிய பொறுப்பாளர்கள் முனுசாமி, முத்து, செல்வம், திருப்பதி, தேவன்,அனுமந்தன், சக்திவேல், மாரியப்பன், சுப்ரமணி, செந்தில், சிவா உள்ளிட்ட பொதுமக்கள், பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள் பலர் கலந்துக்கொண்டனர்

You may also like

Add Comment
error: Content is protected !!