Home » பென்னாகரம் தாலுக்கா ஏரியூரில் புதிய வட்டார வளர்ச்சி அலுவலகம்! முதல்வர் காணொலி வாயிலாக திறந்துவைத்தார்

பென்னாகரம் தாலுக்கா ஏரியூரில் புதிய வட்டார வளர்ச்சி அலுவலகம்! முதல்வர் காணொலி வாயிலாக திறந்துவைத்தார்

by Poovizhi R
0 comment

பென்னாகரத்தை அடுத்த ஏரியூரில் புதிய வட்டார வளர்ச்சி அலு வலகத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.பென்னாகரம் ஒன்றியத்தில் இருந்து கடந்த இரண்டு ஆண் டுகளுக்கு முன் நிர்வாகக் கார ணங்களுக்காக ஏரியூர் ஒன்றியம் தனியாக பிரிக்கப்பட் டது. ஏரியூர் ஒன்றியத்தின்கீழ் 13 கிராம ஊராட்சிகள் நிர்வாகிக்கப்படுகிறது. இதற்கான வட்டார வளர்ச்சி அலுவலகம் ஏரியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தற்காலிக கட்டடத்தில் இயங்கி வந்தது. இந்த நிலையில் ஏரியூர் ஒன்றியத்திற்கு புதிய அலுவலக கட்டுமானப் பணிகள் சுடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று முடிவடைந்தன.இதையடுத்து சென்னை தலைமைச் செயலகத்தில் நடை பெற்ற நிகழ்ச்சியில், ஏரியூரில் ரூ 3.21 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதியவட்டார வளர்ச்சி அலுவல கத்தை முதல்வர் மு.க. ஸ்டா வின் கானொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து ஏரியூர் வட்டார வளர்ச்சி அலுவலகத் தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏரியூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மீனா தலைமையில் குத்து விளக்கு ஏற்றப்பட்டது.இந்நிகழ்ச்சியில் பென்னாகரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஜி.கே.மணி, தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், தடங்கம் சுப்பிரமணி, எரியூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ரேணுகா (கிராம ஊராட்சி), வட்டாட்சியர் சௌகத்அலி, ஏரியூர் ஒன்றியக் குழு உறுப்பினர் பழனிசாமி, பென்னாகரம் ஒன்றியக் குழு உறுப்பினர் சுவிதா ஏரியூர் ஒன்றியக் குழு துணைத் தலைவர் தனபால் மாவட்ட ஊராட் சிக் குழு உறுப்பினர்கள் என் செல்வராஜ்,சி.வி.மாது பாமக மாவட்ட தலைவர் செல்வகுமார், இளைஞர் சங்க மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி மற்றும் அரசு அலுவலர்கள். பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

You may also like

Add Comment
error: Content is protected !!