Home » “காணத்தக்க கிருஷ்ணகிரி” விழிப்புணர்வு சுற்றுலா திட்டத்தின் கீழ் அஞ்செட்டி வட்டத்தில் உள்ள மெட்ரை அருவி, மல்லிகார்ஜூன துர்க்கம் ஆகிய இடங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையிலான குழுவினர் நேரில் பார்வையிட்டனர்.

“காணத்தக்க கிருஷ்ணகிரி” விழிப்புணர்வு சுற்றுலா திட்டத்தின் கீழ் அஞ்செட்டி வட்டத்தில் உள்ள மெட்ரை அருவி, மல்லிகார்ஜூன துர்க்கம் ஆகிய இடங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையிலான குழுவினர் நேரில் பார்வையிட்டனர்.

by Poovizhi R
0 comment

“காணத்தக்க கிருஷ்ணகிரி” விழிப்புணர்வு சுற்றுலா திட்டத்தின் கீழ் அஞ்செட்டி வட்டத்தில் உள்ள மெட்ரை அருவி, மல்லிகார்ஜூன துர்க்கம் ஆகிய இடங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தீபக் ஜேக்கப் இ.ஆ.ப. அவர்கள் தலைமையிலான குழுவினர் இன்று (14.05.2023) நேரில் பார்வையிட்டனர்.கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பல்வேறு வரலாற்று சின்னங்கள், கலாச்சரா பெருமை கொண்ட இடங்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை அனைவரும் அறிந்து கொள்ளவும், அவற்றை பாதுகாக்கவும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்தப்படுதும் விதமாக “காணத்தக்க கிருஷ்ணகிரி” என்ற விழிப்புணர்வு சுற்றுலாத் திட்டத்தை (Awareness Tourism) மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.தீபக் ஜேக்கப் இ.ஆ.ப. அவர்கள் (29.4.2023) அன்று துவக்கி வைத்தார்கள்.அதன் தொடர்ச்சியாக இன்று (14.5.2023) ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணிக்கு அஞ்செட்டி வட்டம், குந்துக்கோட்டை அருகிலுள்ள பூதட்டி கொட்டாய் கிராமத்தில் உள்ள மெட்ரை அருவி மற்றும் மல்லிகார்ஜூன துர்க்கம் கோயில் ஆகிய இடங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையிலான குழுவினர் நேரில் பார்வையிட்டனர்.இப்பயணத்தில் ஓசூர் சார் ஆட்சியர் திருமதி.ஆர்.சரண்யா இ.ஆ.ப., மாவட்ட வன அலுவலர் செல்வி.கார்த்திகேயானி இ.வ.ப., மாவட்ட சுற்றுலா அலுவலர் திரு.கஜேந்திரகுமார், அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் திரு.கோவிந்தராஜ், வட்டாட்சியர்கள் திரு.சரவணமூர்த்தி, திருமதி. அனிதா, தனி வட்டாட்சியர் திரு.விஜயகுமார் மற்றும் வருவாய்த்துறை, வனத்துறை அலுவலர்கள், கிருஷ்ணகிரி வரலாற்று ஆவணக் குழுவினர், பொதுமக்கள் என 50க்கும் மேற்பட்டோருடன் இப்பயணத்தில் கலந்துக்கொண்டனர்.

You may also like

Add Comment
error: Content is protected !!