Home » வலசைகவுண்டனூர் மாரியம்மன் கோவில் பூட்டை உடைத்து 2 சவரன் தங்க நகை மற்றும் உண்டியல் பணம் ரூ.50,000 கொள்ளை.

வலசைகவுண்டனூர் மாரியம்மன் கோவில் பூட்டை உடைத்து 2 சவரன் தங்க நகை மற்றும் உண்டியல் பணம் ரூ.50,000 கொள்ளை.

by Poovizhi R
0 comment

வலசைகவுண்டனூர் மாரியம்மன் கோவில் பூட்டை உடைத்து 2 சவரன் தங்க நகை மற்றும் உண்டியல் பணம் ரூ.50,000 கொள்ளைகிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த வலசைகவுண்டனூர் கிராமத்தில் மாரியம்மன் கோவில் அமையப்பெற்றுள்ளது. இக்கோவில் வலசைகவுண்டனூர் ஊர் கவுண்டர் அசோக்குமார் மற்றும் ஊர் பொது மக்கள் வெள்ளி மற்றும் சனிக்கிழமை நாட்களில் பூஜை செய்து வழிபடுவது வழக்கம். இந்நிலையில் இன்று காலை கோவிலை சுத்தம் செய்ய வந்தபோது, கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, மாரியம்மன் கழுத்தில் இருந்த 2 சவரன் தங்கத்தாலி, உண்டியல் பணம் ரூ.50,000/-, ரூ.25,000 மதிப்புள்ள பெரிய பித்தளை விளக்குகள், மின்சாதன பொருட்கள் என அனைத்தும் திருடப்பட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து போச்சம்பள்ளி காவல் நிலையத்திற்கு புகார் கொடுத்தார். அதன்பேரில் போச்சம்பள்ளி போலீசார் வழக்கு பதிந்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

You may also like

Add Comment
error: Content is protected !!