Home » சூளகிரி அருகே யானை தாக்கி பலத்தப்படுகாயமடைந்த விவசாயிக்கு மருத்துவ செலவிற்கு நிதி உதவி வழங்கிட வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரகத்தில் கோரிக்கை மனு

சூளகிரி அருகே யானை தாக்கி பலத்தப்படுகாயமடைந்த விவசாயிக்கு மருத்துவ செலவிற்கு நிதி உதவி வழங்கிட வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரகத்தில் கோரிக்கை மனு

by Poovizhi R
0 comment

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே யானை தாக்கி பலத்தப்படுகாயமடைந்த விவசாயிக்கு மருத்துவ செலவிற்கு நிதி உதவி வழங்கிட வழியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் இராமகவுண்டர் ஆட்சியரை சந்தித்தது கோரிக்கை மனுவினைக்கொடுத்தார்.கிருஷ்ணகிரி மாவட்டவனப்பகுதிகளில் இருந்து வெளியேறிய காட்டுயானைகள் விளைநிலங்களை நாசம் செய்வது மட்டுமின்றி மனிதர்களையும் வேட்டையாடி வருவது அதிகரித்தவண்ணம் உள்ளது,இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள காவேரி நகர் பகுதியை சேர்ந்த விவசாயி கண்னையனைவனப்பகுதியில் இருந்து வெளியே காட்டுயானை தூக்கிவீசி தாக்கியதில் அவர் பலத்த படுகாயம் அடைந்தார்.அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.அங்கு அவருக்கு போதிய சிகிச்சை அளிக்கபோதிய வசதி இல்லாதால் மருத்துவர்கள் தெரிவித்தால் கண்ணையனை பெங்களுரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்,’அங்கு மருத்துவர்கள் விவசாயி கண்ணையனை பரிசோதனை செய்த விலா எழுப்புகள் அனைத்தும் உடைத்துள்ளது, இதனை சரிசெய்து உயிரை காப்பாற்ற சுமார் 10 லட்சம் வரை செலவு ஆகும் என தெரிவித்ததால் உறவினர்கள் கண்ணையனின் உயிரை காப்பாற்ற பணம் இன்றி போராடி வருகின்றனர்.இதனைத்தொடர்ந்து யானையால் தாக்குதலுக்கு உண்டான விவசாயின் உயிரை காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையில் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள நிதி அளிக்க வேண்டும் என வழியுறுத்தி பாதிக்கப்பட்டவர்களுடன் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் இராமகவுண்டருடன் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனுவினை கொடுத்தார்அப்போது அவர் யானைகளை பாதுகாக்கும் வகையில் ஆர்வம் வனத்துறையினர் மனித உயிர்களை காப்பதில் அக்கரை காட்டுவது இல்லை என குற்றம்சாட்டினார்,மேலும் யானையால் தாக்கப்பட்டு உயிருக்கு போராடும் விவசாயி கண்னையனின் முழு மருத்துவ செலவினை ஏற்று அவரின் உயிரை காப்பாற்ற மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என வழியுறுத்தினார்.

You may also like

Add Comment
error: Content is protected !!