Home » ஓசூர் சோமேஸ்வரர் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிவனுக்கு பால், தயிர், குங்குமம் கொண்டு அபிஷேகம் : ஏராளமான பக்தர்கள் தரிசனம்

ஓசூர் சோமேஸ்வரர் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிவனுக்கு பால், தயிர், குங்குமம் கொண்டு அபிஷேகம் : ஏராளமான பக்தர்கள் தரிசனம்

by Poovizhi R
0 comment

ஓசூர் சோமேஸ்வரர் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிவனுக்கு பால், தயிர், குங்குமம் கொண்டு அபிஷேகம் : ஏராளமான பக்தர்கள் தரிசனம்*ஓசூர் ராம்நகரில் பழமை வாய்ந்த ஸ்ரீ சோமேஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இந்த கோயிலில் இன்று பிரதோஷ வழிபாடு வெகு சிறப்பாக நடைபெற்றது. பிரதோஷத்தை முன்னிட்டு சோமேஸ்வர பெருமானுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. அதனைத்தொடர்ந்து மூலவரான சிவனுக்கும் நந்திக்கும் பால், தயிர், வெண்ணெய், பன்னீர், இளநீர், குங்குமம் மஞ்சள், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவியங்களை கொண்டு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. அதனைததொடர்ந்து சிவன், நந்தி உள்ளிட்ட உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகங்களும் அலங்காரங்களும் செய்யப்பட்டன. பின்னர் கோவிலில் அலங்கரிக்கப்பட்ட உற்சவ மூர்த்தியை பக்தர்கள் எடுத்து வந்து சிறப்பு வழிபாடுகள் நடத்தினர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

You may also like

Add Comment
error: Content is protected !!