Home » கிருஷ்ணகிரி மாவட்ட அரசு இசைப் பள்ளியில் 2023-2024- ஆம் ஆண்டுக்கான மாணாக்கர் சேர்க்கை நடைபெறுகிறது. 13 வயது முதல் 25 வயது வரை உள்ள ஆண், பெண் இருபாலரும் சேர்ந்து பயன்பெறலாம்

கிருஷ்ணகிரி மாவட்ட அரசு இசைப் பள்ளியில் 2023-2024- ஆம் ஆண்டுக்கான மாணாக்கர் சேர்க்கை நடைபெறுகிறது. 13 வயது முதல் 25 வயது வரை உள்ள ஆண், பெண் இருபாலரும் சேர்ந்து பயன்பெறலாம்

by Poovizhi R
0 comment

கிருஷ்ணகிரி மாவட்ட அரசு இசைப் பள்ளியில் 2023-2024- ஆம் ஆண்டுக்கான மாணாக்கர் சேர்க்கை நடைபெறுகிறது. 13 வயது முதல் 25 வயது வரை உள்ள ஆண், பெண் இருபாலரும் சேர்ந்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தீபக் ஜேக்கப் இ.ஆ.ப., அவர்கள் தகவல்.தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டு துறையின் கீழ், கிருஷ்ணகிரியில், மாவட்ட அரசு இசைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பாரம்பரிய கலைகளான குரலிசை, நாதசுரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின் மிருதங்கம் ஆகிய கலைகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பள்ளி காலை 10.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை முழுநேரப் பள்ளியாகும். 13 வயது முதல் 25 வயது வரை உள்ள ஆண், பெண் இருபாலரும் சேரலாம். பயிற்சி காலம் 3 ஆண்டுகள். பயிற்சி முடிவில் தமிழ்நாடு தேர்வுத் துறையால் தேர்வு நடத்தி அரசுத் தேர்வுகள் இயக்குநரால் இசைப் பள்ளி தேர்ச்சி சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சி கட்டணம் ஏதுமில்லை. சிறப்பு கட்டணமாக ஆண்டிற்கு ரூ.350 மட்டும் செலுத்த வேண்டும். மாணவ, மாணவியருக்கு நகரப் பேருந்தில் இலவச பேருந்து பயணச்சலுகை உண்டு.அனைத்து மாணாக்கர்களுக்கும் மாதந்தோறும் ரூ.400 கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. தமிழகத்தின் பாரம்பரியமிக்க கலைகளை பயிலுவதற்கு உரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள மாணவ, மாணவிகள் இப்பள்ளியில் சேர்ந்து பயன்பெறுமாறு தெரிவிக்கப்படுகிறது. இப்பள்ளியில் சேர விரும்புவோர் உடனடியாக தலைமை ஆசிரியர், மாவட்ட அரசு இசைப் பள்ளி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில், திருமலை நகர், இராமாபுரம், கிருஷ்ணகிரி 635 115. (04343-234001, 9443785837) என்ற அலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம். 2023 – சேர்க்கை நடைபெறுகிறது 2024 ஆம் ஆண்டிற்கு மாணவர் சேர்க்கை என் ஆட்சித்தலைவர் திரு.தீபக் ஜேக்கப் இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

You may also like

Add Comment
error: Content is protected !!