Home » உச்சநீதிமன்ற தீர்ப்பையொட்டிகிருஷ்ணகிரியில் அதிமுக OPS அணி சார்பில் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கி உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

உச்சநீதிமன்ற தீர்ப்பையொட்டிகிருஷ்ணகிரியில் அதிமுக OPS அணி சார்பில் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கி உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

by Poovizhi R
0 comment

ஜல்லிக்கட்டு சட்ட திருத்தம் செல்லும் உச்சநீதிமன்ற உத்தரவையொட்டிகிருஷ்ணகிரியில் அதிமுக OPS அணி சார்பில் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கி உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது…………………………….தமிழக சட்டப்பேரவையில் ஜல்லிக்கட்டு திருத்த மசோதா சட்டம் நிறைவேற்றியது இதனை எதிர்த்து பல்வேறு அமைப்புகள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது அதில் தமிழக அரசு சார்பில் கொண்டுவந்துள்ள ஜல்லிக்கட்டு திருத்த சட்ட மசோதா செல்லும் என தீர்ப்பளித்தது இதனால் தமிழக மக்கள் மற்றும் ஜல்லிக்கட்டு வீரர்கள் தமிழகம் முழுவதும் உற்சாகமடைந்துள்ளனர்.இந்த நிலையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று கிருஷ்ணகிரி அதிமுக மாவட்ட கழக செயலாளரும் முன்னால் சட்டமன்ற உறுப்பினரும்மானகோவிந்தராஜ் உத்தரவின்படி கிருஷ்ணகிரி நகர அதிமுக OPS அணியின் சார்பில் கிருஷ்ணகிரி ரவுண்டானா அருகில் நகர செயலாளர் செல்வம் தலைமையில் 50-க்கும் மேற்பட்டவர்கள்பட்டாசுகளை வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி உற்சாகமாக கொண்டாடினர்.தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை தடை இன்றிநடத்த வழிவகை செய்த தமிழக முன்னால் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு நன்றி தெரிவித்து வெற்றிகோசங்களைஎழுப்பினார்கள்.இதேபோல பர்கூர், காவேரிப்பட்டிணம், மத்தூர், போச்சம்பள்ளி, ஊத்தங்கரை, சூளகிரி, ஓசூர் என பல்வேறு இடங்களில் அதிமுக OPS அணியினர் பட்டாசுகள் வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி உற்சாகமாகக் கொண்டாடினார்கள்.அப்போது முன்னால் ஒன்றிய குழுத் தலைவர்கோவிந்த ராஜ் உள்ளிட்ட அதிமுக OPS அணியை சேர்ந்த பலர் கலந்துக்கொண்டனர்கள்.

You may also like

Add Comment
error: Content is protected !!