Home » கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் வேளாண் இயந்திரமயமாக்கல் உப இயக்க திட்டத்தின் கீழ் மானிய விலையில் பவர் டில்லர் பெற விண்ணப்பிக்கலாம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் வேளாண் இயந்திரமயமாக்கல் உப இயக்க திட்டத்தின் கீழ் மானிய விலையில் பவர் டில்லர் பெற விண்ணப்பிக்கலாம்

by Poovizhi R
0 comment

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் வேளாண் இயந்திரமயமாக்கல் உப இயக்க திட்டத்தின் கீழ் மானிய விலையில் பவர் டில்லர் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தீபக் ஜேக்கப் இ.ஆ.ப., அவர்கள் தகவல்.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேளாண்மை பொறியியல் துறையின், வேளாண் இயந்திரமயமாக்கல் உப இயக்க திட்டம் (SMAM) 2022-23 ஆம் ஆண்டில் விவசாயிகளுக்கு மானிய விலையில் பவர் டில்லர் 77 எண்கள் வழங்க ரூ.65.45 இலட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு 58 எண்கள் பொது பிரிவிற்கும் 19 எண்கள் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாய பிரிவிற்கும் ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.சிறு மற்றும் குறு விவசாயிகள், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு 50% மானியமும் இதர பிரிவினருக்கு 40% மானியமும் வழங்கப்பட உள்ளது. மேலும் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியான (SC/ST) பிரிவில் சிறு / குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20% மானியமும் வழங்கப்பட உள்ளது.இத்திட்டத்தில் 2022-2023 ஆம் ஆண்டில் செயல்படுத்தப்படும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் கிராம ஊராட்சிகளில் (AGAMT 2022-23) உள்ள விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்பட உள்ளது.இத்திட்டத்தின் மூலம் பயன் பெற விரும்பும் விவசாயிகள் விண்ணப்பத்துடன் சிட்டா, அடங்கல், நிலத்தின் வரைபடம், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், ஆதார்கார்டு நகல் மற்றும் வங்கி பாஸ்புத்தக நகல் ஆகியவற்றுடன் திரு.என்.சிவகுமார் உதவி செயற்பொறியாளர்(வே.பொ), உதவி செயற்பொறியாளர் அலுவலகம், வேளாண்மை பொறியியல் துறை, மாவட்ட ஆட்சியரக வளாகம், கிருஷ்ணகிரி, போன்:6379284450, 9677811270, 9443023050 மற்றும் திரு.கோ.செல்வம், உதவி செயற்பொறியாளர்(வே.பொ), உதவி செயற்பொறியாளர் அலுவலகம், வேளாண்மை பொறியியல் துறை, சென்னத்தூர் அஞ்சல், சாணசந்திரம், இராயக்கோட்டை ரோடு, ஓசூர், போன்: 7904529765, 9385383896 ஆகிய அலுவலகங்களை தொடர்பு கொண்டு விண்ணப்பங்களை அலுவலகத்தில் நேரடியாக கொடுத்து பதிவு செய்து பயனடையலாம்என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தீபக் ஜேக்கப் இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

You may also like

Add Comment
error: Content is protected !!