Home » பாலக்கோட்டில் உள்ள புதுர் மாரியம்மன் கோவில் வளாகத்தில் 12கிராம மக்கள் இணைந்து மழைவேண்டி மஹாபாரதசொற்பொழிவு மற்றும் துரியோதனன் படுகளம் – வெகு விமர்சியாக நடைப்பெற்றது

பாலக்கோட்டில் உள்ள புதுர் மாரியம்மன் கோவில் வளாகத்தில் 12கிராம மக்கள் இணைந்து மழைவேண்டி மஹாபாரதசொற்பொழிவு மற்றும் துரியோதனன் படுகளம் – வெகு விமர்சியாக நடைப்பெற்றது

by Poovizhi R
0 comment

பாலக்கோட்டில் உள்ள புதுர் மாரியம்மன் கோவில் வளாகத்தில் 12கிராம மக்கள் இணைந்து மழைவேண்டி மஹாபாரதசொற்பொழிவு மற்றும் துரியோதனன் படுகளம் – வெகு விமர்சியாக நடைப்பெற்றது தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஶ்ரீபுதுா் மாரியம்மன் திருக்கோவில் வளாகத்தில் 12கிராமமக்கள் மழை வேண்டி மஹாபாரத சொற்பொழிவு நிகழ்ச்சி கடந்த 18 நாட்களாக நடைபெற்று வந்தது. தருமபுரி மாவட்டத்தில் மஹாபாரத சொற்பொழிவுகள் நடத்தி பின் கூத்து கலைஞா்களை கொண்டு துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றால் மழை வரும் என்பது மக்களின் நம்பிக்கை.பாலக்கோடு சுற்றுவட்டாரப்பகுதியில் உள்ள காவாப்பட்டி, சித்திரப்பட்டி, வாழைத்தோட்டம், பாலக்கோடு, பனங்காடு உள்ளிட்ட 12 கிராமமக்கள் ஒன்றினைந்து மஹாபாரத கதைகளை பகல் பொழுதில் வேதம் பயின்றவா் பொதுமக்களுக்கு சொல்லுவார். அவா் குறிப்பிடும் கதைகளுக்கு ஏற்ப இரவில் கூத்து கலைஞா்கள் நடித்து காட்டுவார்கள் மஹாபாரத சொற்பொழிவில் கடைசி நாளான நேற்று 18 ம் நாள், 18ம் போர் என்று அழைக்கப்படும் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் துரியோதனனை பாண்டவர்கள் வதம் செய்யும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியை காண சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்தனர்.

You may also like

Add Comment
error: Content is protected !!