Home » ரூ.5 இலட்சத்திற்கான மருத்துவ காப்பீட்டு அட்டையை 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 437 மதிப்பெண் எடுத்த மாற்றுத்திறனாளி மாணவர் க்கிரீத்தி வர்மாவுக்கு மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் வழங்கினார்

ரூ.5 இலட்சத்திற்கான மருத்துவ காப்பீட்டு அட்டையை 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 437 மதிப்பெண் எடுத்த மாற்றுத்திறனாளி மாணவர் க்கிரீத்தி வர்மாவுக்கு மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் வழங்கினார்

by Poovizhi R
0 comment

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 437 மதிப்பெண்கள் பெற்ற இரண்டு கைகளை இழந்த மாணவர் க்ரித்தி வர்மாவை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் 19.05.2023 அன்று தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பாராட்டியதையடுத்து,மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தீபக் ஜேக்கப் இ.ஆ.ப., அவர்கள் மாற்றுத்திறனாளி மாணவர் க்ரித்தி வர்மாவை இன்று (20.05.2023) நேரில் சந்தித்து இனிப்புகளை வழங்கி பாராட்டு தெரிவித்து, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் ரூ.5 இலட்சத்திற்கான மருத்துவ காப்பீட்டு அட்டையை வழங்கினார்.கிருஷ்ணகிரி மாவட்டம், நெடுமருதி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 437 மதிப்பெண்கள் பெற்ற இரண்டு கைகளை இழந்த மாணவர் க்ரித்தி வர்மாவை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் 19.05.2023 அன்று தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பாராட்டி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.அதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தீபக் ஜேக்கப் இ.ஆ.ப., அவர்கள் வேப்பனஹள்ளி ஒன்றியத்திற்குட்பட்ட, நெடுமருதி அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்ற மாற்றுத்திறனாளி மாணவர் க்ரித்தி வர்மாவை இன்று (20.05.2023) நேரில் சந்தித்து இனிப்புகளை வழங்கி பாராட்டு தெரிவித்து, மாணவனுக்கு முதலமைச்சர் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் ரூ.5 இலட்சத்திற்கான மருத்துவ காப்பீட்டு அட்டையை வழங்கினார்.மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தீபக் ஜேக்கப் இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:தமிழ்நாடு முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 19.05.2023 அன்று வெளியிடப்பட்டது. அதில் கிருஷ்ணகிரி மாவட்டம், நெடுமருதி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்ற இரண்டு கைகளை இழந்த மாணவர் க்ரித்தி வர்மா 437/500 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பிடித்தார்.அதனைத்தொடர்ந்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 437 மதிப்பெண்கள் பெற்ற க்ரித்தி வர்மா மற்றும் அவரது தாயாரை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு, வாழ்த்துகளை தெரிவித்தார்.அம்மாணவனுக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும், உயர்கல்வி படிப்பதற்கான உதவிகளையும் அரசு செய்து தரும் என்று தெரிவித்தார். அவருக்குக் செயற்கை கைகள் பொருத்திடத் தேவையான மருத்துவ நடவடிக்கைகளை மேற்கொள்ள மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.மாணவர் க்ரித்தி வர்மாவிற்கு மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பாக மாதந்தோறும் ரூ.2,000 மும், மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி உதவித்தொகை வருடந்தோறும் ரூ.4,000 -மும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், செயற்கை கை வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இன்று (20.05.2023) மாணவனின் மருத்துவ உதவிக்காக முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் ரூ.5 இலட்சத்திற்கான மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்கப்பட்டுள்ளது.எனவே, மாணவர் க்ரித்தி வர்மாவிற்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும், உயர்கல்வி படிப்பதற்கான உதவிகளையும் மாவட்ட நிர்வாகம் சார்பாக செய்து தரப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தீபக் ஜேக்கப் இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாணவர் க்ரித்தி வர்மா மற்றும் அவருடைய பெற்றோர்களை தனது வாகனத்தின் மூலம் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்திற்கு அழைத்து வந்து, மாணவனை பாராட்டி, மாணவனுக்கு தேவையான கல்வி மற்றும் மருத்துவ உதவிகள் அனைத்தும் செய்து தரப்படும் என உறுதியளித்தார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் திரு.வெங்கடேசன், மருத்துவ காப்பீட்டு திட்ட அலுவலர் திரு.சையத் அலி, மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் திரு.முருகேசன், மருத்துவ காப்பீட்டு அட்டை மாவட்ட அலுவலர் திரு.ராஜ்குமார், கிருஷ்ணகிரி வட்டாட்சியர் திரு.சம்பத்குமார் மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

You may also like

Add Comment
error: Content is protected !!